search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    மார்த்தாண்டத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
    • ஆத்திரம் அடைந்த கணேசன் சக தொழிலாளி ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    நாகர்கோவில் :

    தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50). இவர் மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    அதே ஓட்டலில் நெல்லை ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) என்பவரும் வேலை பார்த்தார். இருவ ருக்கும் இடையே உணவு சப்ளை செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் சக தொழிலாளி ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக மார்த் தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயில் அடைக்கப் பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    இதையடுத்து மார்த் தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் கணேசனை நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங் கோட்டை ஜெயிலில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×