search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு மாதமாக நிரம்பி வழியும் மாம்பழத்துறையாறு அணை பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் குறைக்கப்பட்டது
    X

    ஒரு மாதமாக நிரம்பி வழியும் மாம்பழத்துறையாறு அணை பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் குறைக்கப்பட்டது

    • மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்து வந்த மழை தற்பொழுது சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள் ளது. சிற்றாறு 1, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்துக்கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை மூழ்க டித்து தண்ணீர் செல்வதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 7-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தடை விதிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணை நீர்மட்டம் 54.12 அடி எட்டி யதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகிறார்கள்.

    தற்பொழுது அணைக்கு 26 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 26 கன அடி தண்ணீரையும் உபரி நீராக திறந்து விடப்பட் டுள்ளது. அணையின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.98 அடி யாக உள்ளது. அணைக்கு 485 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 106 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.29 அடியாக உள்ளது. அணைக்கு 555 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.07 அடியாக உள்ளது. அணைக்கு 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொ டர்ந்து முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    அணையில் இருந்து நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×