என் மலர்
கன்னியாகுமரி
- 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
- 16 வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிஅருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடந்தது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும். 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது.
அதன் பின்னர் 9.30 மணிக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, சந்தனம், விபூதி, நெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன் பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து, ரோஸ் உள்ளிட்ட 16 வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெற்றது.
பின்னர் அலங்கார தீபாராதனையும், விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
- ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த திட்டமிட்டனர்.
- கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், அங்கு படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த அவர்கள் திட்டமிட்டனர்.
அவர்கள் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கூடம் தொடங்கியதும் திரண்டு வந்தனர். பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்ட மாணவிகளின் பெற்றோர், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள், அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வள்ளம் வந்து கொண்டிருக்கும்போது கடலில் திடீரென ராட்சத அலை எழும்பியது
- வள்ளம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புல்லரி பாறையில் மோதி கவிழ்ந்தது
கன்னியாகுமரி :
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 52). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.
இவரது வள்ளத்தில் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்த ஆன்சல் (63) மற்றும் குளச்சலை சேர்ந்த ஜோசப் பாத் (65), ஏரோணிமூஸ் (65), கோடிமுனையை சேர்ந்த சிலுவை பிச்சை (53), சைமன்காலனியை சேர்ந்த ஆண்ட்ரோஸ் (72) ஆகியோர் வழக்கம்போல் நேற்றிரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீன் பிடித்துவிட்டு இன்று காலை இவர்களது வள்ளம் கரை திரும்பியது. குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வள்ளம் வந்து கொண்டிருக்கும்போது கடலில் திடீரென ராட்சத அலை எழும்பியது.
இதில் வள்ளம் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புல்லரி பாறையில் மோதி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் மீனவர்கள் உயிரை காப் பாற்றிக் கொள்ள கடலில் தத்தளித்தனர். அப்போது அங்கு மீன் பிடிக்க சென்ற மற்றொரு வள்ளம் மீனவர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்தனர்.
பின்னர் மீனவர்கள் மற்றொரு வள்ளத்தில் சென்று கவிந்த வள்ளத்தை மீட்டனர். இதில் வள்ளம் சேதமடைந்தது. வள்ளத்திலி ருந்த மீன்கள் கடலில் விழுந் தது. ஆனால் அழிக்கால் மீனவர் ஆன்சல் கரை சேரவில்லை. அவர் கடலில் மாயமாகி உள்ளதாக உடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த குளச்சல் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். தொடர்ந்து முத்துக்கு ளிக்கும் மீனவர்கள் மாய மான மீனவர் ஆன்சலை தேடி வந்தனர். இந்த நிலையில் கொட்டில்பாடு கடல் பகுதியில் பெரிய விளையைச் சேர்ந்த மீனவர் வீசிய வலையில் ஆன்சல் உடல் சிக்கியது. மரைன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான ஆன்சலுக்கு பெல்லாம்மா (55) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- இளம் பெண் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பேக்கை தூக்கிக் கொண்டு மரத்திற்கு தாவியது.
- கடந்த மாதமும் சாவியை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் போக்கு காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சி கட்டிடத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் திருத்தம், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனால் நகராட்சி அலுவலக வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் ஒரு குரங்கு மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் பொருட்களை தூக்கிச் சென்று விடுகிறது. நேற்று மதியம் இந்த குரங்கு, ஆதார் அட்டை திருத்தத்திற்கு வந்த இளம் பெண் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பேக்கை தூக்கிக் கொண்டு மரத்திற்கு தாவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மரக்கிளைகளில் அமர்ந்த குரங்கு, பேக்கை திறந்து பார்த்தது. அதில் உணவு பொருள் ஏதும் இல்லாததால், பேக்கை தூக்கி எறிந்தது. பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளுக்கு வந்து அதில் இருந்த சாவியை தூக்கி சென்றது. அந்த சாவியை கையில் வைத்த படியும் வாயில் கவ்விய படியும் அங்கும் இங்குமாக தாவித்தாவி போக்கு காட்டியது.
பின்னர் அங்கு நின்றவர்கள் குரங்கிற்கு வாழைப்பழத்தை வாங்கி கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட குரங்கு சாவியை தூக்கி எறிந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதமும் இந்த குரங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் போக்கு காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் குரங்கை பிடித்து காட்டில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- மின்வாரியத்தின் அலட்சியத்தாலோ எனது மகன் இறந்துள்ளான்.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பங்கிராஜ். இவருடைய மகன் ஏசுராஜன் (வயது 26).இவர், இரவி புதூர்கடை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி பறவை இறந்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சப்ளை பாதிக்கப்பட் டது. அதை சரி செய்ய நேற்றிரவு ஏசுராஜன் சென்றார்.
டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஏசுராஜன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகா யம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏசுராஜ னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏசுராஜன் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து அவரது தாய் கனகம் மற்றும் அவரது உறவினர்கள் ஏசுராஜன் உடல் வைக்கப் பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். தனது மகன் சாவு குறித்து அவர் தக்கலை போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார்.
மின்வாரியத்தின் அலட்சி யத்தால் தனது மகன் பரிதாபமாக இறந்து விட்டான் என்று அவர் புகார் கூறினார். அவரது புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-
எனது மகன் பணியில் சேர்ந்து 6 மாதமே ஆகிறது. முன் அனுபவம் இல்லாத அவனை மின்மாற்றியில் ஏற எப்படி அனுமதித்தார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. மின்வாரியத்தின் அலட்சியத்தாலோ எனது மகன் இறந்துள்ளான். ஆகவே எனது மகனின் மரணத்திற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
- தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்து வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மனைவி அனிட்டா(வயது46). இவர்களுக்கு சகாய திவ்யா(19), சகாய பூஜா மெளலியா(16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஏசுதாசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டு மகள்களையும் அனிட்டா வளர்த்து வந்தார். சகாய திவ்யா அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.இ. இரண்டாம் ஆண்டும், சகாய பூஜா மௌலியா அழகப்பபுரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று வழக்கம்போல் அனிட்டா தனது குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு 3 பேரும் தூங்க சென்றனர். இன்று அதிகாலையில் அனிட்டா வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வந்துள்ளார். அப்போது அனிதாவின் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து மற்றொரு நபர் வந்தபோதும் கதவு பூட்டப்பட்டிருந்தது. வழக்கமாக காலையிலேயே அனிட்டாவின் வீட்டில் கதவு திறக்கப்படும். இன்று நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அந்த பகுதியினிடையே சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அனிட்டா மற்றும் அவரது 2 மகள்களும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். 3 பேரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி யடைந்த அக்கம்பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்தனர்.
தூக்கில் பிணமாக தொங்கிய அனிட்டா, சகாய திவ்யா, சகாய பூஜா மெளலியா ஆகிய 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொன்று அனிட்டா தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் அனிட்டா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வதாகவும், எங்கள் சாவுக்கு வேறுயாரும் காரணமில்லை என்றும் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 3 பேர் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அனிதா கணவன் இறந்த பிறகு மகள்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். பணப்பிரச்சனை அவருக்கு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்து வருகிறது.
மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஞ்சுகிராமம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருமணம் ஆகாத இருவருக்கும் அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 68). இவரது மகன்கள் ஜேம்ஸ்ராஜா (35), சகாய செல்வன் (33). இருவரும் கட்டிட தொழிலாளிகள்.
திருமணம் ஆகாத இருவருக்கும் அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று மாலை சகோதரர்கள் இருவரும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தனர். போதையில் இருந்த அவர்கள், ஒருவரையொருவர் தகாத வார்த்தைகள் பேசினர்.
இது திடீரென மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஜேம்ஸ்ராஜா அருகில் கிடந்த மது பாட்டிலை உடைத்து தம்பி என்றும் பாராமல் சகாய செல்வன் கழுத்தில் குத்தி உள்ளார். பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சகாய செல்வனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மோசமான நிலையிலேயே உள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் ராஜாவை கைது செய்தனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
- கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே பேச்சப்பாறை கடம்புமூடு பகுதியை சேர்ந்தவர் பிரவின் (வயது 25). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகன் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரவின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு செல்லும்போது நிரோஷவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது. பிரவின் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது மது அருந்தி விட்டு வருவது வழக்கம். இதனால் இவர்கள் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் நிரோஷா தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்பிறகு பிரவின் சென்று பேசி வீட்டுக்கு அழைத்து வருவார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இதேபோல் கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. உடனே நிரோஷா திருநந்திகரையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு 2 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. பிரவின் சென்று அழைத்த பிறகும் நிரோஷா வரவில்லை. ஒரு ஆண்டாக அங்கே இருந்துக்கொண்டு அருகில் உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்று வந்தார். பிரவின் தன் தாயுடன் பேச்சிப்பாறையில் வசித்து வந்தார்.
தினமும் தாய் வீட்டில் இருந்து கோழிப்பண்னைக்கு காலையில் வேலைக்கு செல்பவர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் இவரது தாய் செல்வி கோழிப்பண்னையில் சென்று விசாரித்தார். அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாக கூறினார்கள். செல்வி உடனே நிரோஷாவின் கணவர் பிரவினுக்கு தகவல் கொடுத்தார். இவர்களின் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். எங்கேயும் அவரை காணவில்லை. நிரோஷாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போன் சுவிட்ச்ஆப் ஆக உள்ளது. செல்வி நேற்று மாலை காணாமல் போன தன் மகள் நிரோஷாவை கண்டுபிடித்து தருமாறு குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இவருக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா? என்றும் கோழிப்பண்னை பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப்பட்டது
- நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நிறைபுத்தரிசி பூஜை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நிறைபுத்தரிசி பூஜை இன்று நடைபெற்றது.
இதையொட்டி அதி காலையில் அறநிலை யத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்க திர்கள் அறுவடை செய்யப்பட்டு, அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் நெற்கதிர்கள் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன்பு நெற்கதிர்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நெற்கதிர்களை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வழங்கி னார். நிகழ்ச்சியில் நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் வைகுண்ட பெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, பொருளாளர் அரிகிருஷ்ணபெருமாள், பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் ஆடி நிறைப்புத்தரிசி பூஜை இன்று காலை நடந்தது. இதையொட்டி இந்த கோவில்களில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கப் பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் இணை ஆணையர் ரத்தின வேல்பாண்டியன் தலைமை யில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
- மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
- குட்டையாக மாறிய முக்கடல் அணை
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகருக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் இருந்து பைப்லைன் மூலமாக வடசேரி கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டியதையடுத்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. இதனால் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது. அணை நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 12.90 அடியாக உள்ளது. அணையில் உள்ள தண்ணீர் குட்டையில் தேங்கி கிடப்பது போல் குறைவாகவே காட்சியளிக்கிறது.
அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றதால் தண்ணீர் விநியோகம் செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட் டுள்ளது. பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை தற்போது சப்ளை செய்து வருகிறார்கள். ஆனால் போது மான அளவு தண்ணீர் பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை. தண்ணீர் பிரச்சினை தீர்க்க, மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே புத்தன் அணையிலிருந்து வெள்ளோட்ட மாக கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலை யத்திற்கு கொண்டுவரப்படும் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. கோட்டாறு, மீனாட்சி புரம், வடசேரி பகுதிகள் மட்டுமின்றி அனைத்து வார்டு களிலும் தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதையடுத்து அந்த வார்டு கவுன்சிலர்கள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரி களை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையின் நீர்மட்டம் சரியத்தொடங்கியுள்ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 25.64 அடியாக உள்ளது. அணைக்கு 167 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 703 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சானி அணை நீர்மட்டம் 25.10 அடியாக உள்ளது. அணைக்கு 14 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை நீர்மட்டம் 11 அடியாகவும் மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. அணைகளின் நீர்மட்டம் ஒருபுறம் சரிந்து இருக்க பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
- பதிவு உரிமம் கோரும் விண்ணப் பதாரர்கள் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம்
- 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதுடன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவ னங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதி கள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனிநபர் ஆகி யோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் 31.08.2028-க்குள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குபடுத்து தல் சட்டம் 2014-ன் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் பதிவு உரிமம் வேண்டி வரப்பெற்றுள்ள விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட்டு பதிவு சான்றிதழ் வழங்கப் பட்டு வருகிறது. பதிவு உரிமம் கோரும் விண்ணப் பதாரர்கள் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்க ளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவ லகத்தில் விண்ணப்பிக்கு மாறு தெரிவிக்கப்படுகிறது.பதிவு செய்யப்படாத விடுதிகள், இல்லங்கள் பதிவு உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு பல முறை செய்தி வெளியி டப்பட்டுள்ளது.
எனவே 31.08.2023-க்குள் விண்ணப்பிக்க தவறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதுடன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். பதிவு உரிமம் தொடர் பான கூடுதல் விவ ரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் இணைப்பு கட்டடம் தரைத்தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவல கத்தை தொடர்பு கொள்ள வும். 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட கலெக்டர் அலு வலகத்தின் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- சுற்றுலா பயணிகள் வருகை “திடீர்” என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு 2 சீசன் காலங்கள் உண்டு. ஒன்று நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இன்னொன்று ஏப்ரல், மே மாதங்களில் வரும் கோடை விடுமுறை சீசன் காலம் ஆகும்.
இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள். இதேபோல் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விடுமுறை இல்லாத நாட்களிலும் கன்னியாகுமரிக்கு வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்று கன்னியாகுமரிக்கு வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
அதேபோல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை, பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






