என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரன்"

    • திருமணம் ஆகாத இருவருக்கும் அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 68). இவரது மகன்கள் ஜேம்ஸ்ராஜா (35), சகாய செல்வன் (33). இருவரும் கட்டிட தொழிலாளிகள்.

    திருமணம் ஆகாத இருவருக்கும் அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று மாலை சகோதரர்கள் இருவரும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தனர். போதையில் இருந்த அவர்கள், ஒருவரையொருவர் தகாத வார்த்தைகள் பேசினர்.

    இது திடீரென மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஜேம்ஸ்ராஜா அருகில் கிடந்த மது பாட்டிலை உடைத்து தம்பி என்றும் பாராமல் சகாய செல்வன் கழுத்தில் குத்தி உள்ளார். பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சகாய செல்வனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மோசமான நிலையிலேயே உள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் ராஜாவை கைது செய்தனர்.

    ×