என் மலர்
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கைது செய்யப்பட்டார். இவருடன் கிராம நிர்வாக உதவியாளரும் சிக்கினார்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் வடக்கு காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெயராமன் (வயது 36). விவசாயி. இவரது சகோதரர்கள் ஏழுமலை, நல்லதம்பி. இவர்கள் 3 பேரும் தங்களது பெயரில் உள்ள நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையவழி மூலம் விண்ணப்பித்து, அதற்கான ரசீதையும் பெற்றனர். இதனை தொடர்ந்து அந்த ரசீதை நைனார்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து, பட்டா மாற்றம் செய்வதற்காக வழிமுறைகள் குறித்து கேட்டனர். அதற்கு அவர், பட்டா மாற்றம் செய்ய நில அளவையர் நேரில் வந்து அளக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நைனார்பாளையம் குறுவட்ட நில அளவையராக பணிபுரியும் சேலம் மாவட்டம் ஆறகலூரை சேர்ந்த சூர்யா(29) என்பவரை ஜெயராமன் அணுகினார். அதற்கு நில அளவையர் சூர்யா, பட்டா பெயர் மாற்றம் செய்ய தலா ரூ.8 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் தர வேண்டும். இதற்காக 24-ந் தேதி(அதாவது நேற்று) நிலத்தை அளக்க நேரில் வருவதாகவும், அன்றைய தினமே பணத்தை கொடுத்ததும் நிலத்தை அளந்து தருவதாகவும் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன், விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய ரூ.24 ஆயிரத்துடன் ஜெயராமன் நேற்று தனது நிலத்தில் காத்திருந்தார். அங்கு வந்த நில அளவையர் சூர்யா, நைனார்பாளையம் கிராம நிர்வாக உதவியாளரான பெரம்பலூர் மாவட்டம் சிறு நிலா பகுதியை சேர்ந்த சுசீலா(35) ஆகியோரிடம் ஜெயராமன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டுகள் பாலமுருகன், விஜயதாஸ், நரசிம்மராவ் ஆகியோர் பாய்ந்து சென்று நில அளவையர் சூர்யா, கிராம உதவியாளர் சுசீலா ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை பிடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து வலை வீசி வருகிறாராம்.
தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.
இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். ஆனால், முன்னணி நடிகர், நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மெகா முகாம்கள் மூலம் 13½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
மாவட்ட கலெக்டர் விசாகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடையும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி 1,225 இடங்களில் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்றைய தினம் மட்டும் 72 ஆயிரத்து 459 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 10 முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் 13 லட்சத்து 46 ஆயிரத்து 182 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதில் 6 லட்சத்து 89 ஆயிரத்து 52 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் 77.8 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் 11-வது முறையாக மாவட்டம் முழுவதும் 740 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டு 2-ம் தவணை செலுத்துவதற்காக காத்திருப்பவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் 84 நாட்கள் நிறைவடைந்த பின்னரும், கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் 28 நாட்கள் நிறைவடைந்த பின்னரும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா என கலெக்டர் இயக்கி ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா, அதில் முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளிட்டவை உள்ளதா என ஆய்வு செய்வதற்காக அனைத்து வாகனங்களையும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி வளாகத்திற்கு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வரவழைத்தனர்.
இதையடுத்து அந்த வாகனங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகனங்களில் அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, பேருந்தின் தரைத்தளம், புவியிடங்காட்டி, கண்காணிப்பு கேமரா, பிரேக், லைட், கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை சரியான முறையில் இருக்கிறதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளி வாகனம் ஒன்றை அவரே இயக்கி சரிபார்த்தார்.
இதில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 76 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு அவசர காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏற்படுத்தினர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கேரளாவில் தற்போது 51,302 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று புதிதாக மேலும் 4,280 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5,379 பேர் குணமடைந்தள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 51,302 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 50,23,658 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 38,353 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் நிவேதா (வயது 16). இவர் குதிரைசந்தல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 20-ந்தேதி கடைக்கு சென்ற நிவேதா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கச்சிராயபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து நிவேதாவை தேடி வந்தனர். எங்கு தேடியும் நிவேதா கிடைக்கவில்லை.
இதற்கிடையே நேற்று கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி கோமுகி ஆற்றில் மாணவி ஒருவர் பிணமாக மிதந்தார். இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆற்றில் மிதந்தது காணாமல்போன மாணவி நிவேதா என தெரியவந்தது. இதுபற்றி பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் இதனை உறுதி செய்தனர்.
இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் அரிகிருஷ்ணன் (16) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. தற்கொலை செய்து கொண்ட மாணவி நிவேதாவும், அரிகிருஷ்ணனும் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வேவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே கடந்த 20-ந்தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். காதலில் ஒன்று சேர முடியாததால் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலின் சுற்றுச்சுவரின் சில பகுதிகளில் சுற்றுச்சுவர் மிகவும் பலவீனமாக இருப்பதால்முழுமையாக விழுந்து தரையோடு தரையாக விடும் என்ற நிலை உள்ளது.
திருப்பரங்குன்றம் :
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் லட்சுமி தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது தெய்வானைக்காக உருவாக்கியதாக செவிவழிசெய்தி கூறுகிறது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் லட்சுமி தீர்த்த குளத்திற்கு வந்து தங்களது கால்கள், கைகளை அலம்புவதோடு தீர்த்தத்தை அள்ளி தங்களது கண்களில் ஒத்தி கொள்ளுவார்கள்.
குளத்தின் தண்ணீரில் உள்ள மீன்களுக்கு பக்தர்கள் பொரி வாங்கிப் போடுவதும், உடம்பில் உள்ள பருகு போவதற்கு உப்பு, மிளகுபோடுவதும ்நீண்டகாலமாக நடைமுறையில்இருந்து வந்தது.இதனையொட்டி உப்பு, மிளகு, பொரிவிற்பனை உரிமம் மூலம் கணிசமான வருமானம் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் சமீபகாலமாக கடும் வறட்சி ஏற்பட்டதால் லட்சுமி தீர்த்தக் குளத்தில் தண்ணீர் வற்றியது.
இந்த நிலையில் கோவிலின் சுற்றுச்சுவர் நாலாபுறமும் பலவீனமாக இருந்து வந்தது.அதைக் கண்ட பக்தர்கள் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபகாலமாக தொடர் மழை பெய்து வந்தது.அதனால் லட்சுமி தீர்த்தக்குளம் நிரம்பியது.
இந்த நிலையில் நேற்று சுற்றுசுவரின் 3 மற்றும் 4 இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு திடீரென்று இடிந்து குளத்திற்குள் விழுந்தது. மேலும் சில பகுதிகளில் சுற்றுச்சுவர் மிகவும் பலவீனமாக இருப்பதால்முழுமையாக விழுந்து தரையோடு தரையாக விடும் என்ற நிலை உள்ளது. மேலும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையை இருந்து வருகிறது.ஆகவே கோவில் நிர்வாகம் உரிய நேரத்தில் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சின்னசேலம், தியாகதுருகம், நாகலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் தாலுகா பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூர், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூர், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூர், சின்னசேலம் (காந்திநகர்) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நாகலூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாகலூர், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி, கொங்கராயபாளையம், பட்டி, உச்சிமேடு, உடைய நாச்சி, முகமதியர்பேட்டை, கூத்தக்குடி, ஐவதுகுடி, வரஞ்சரம், வேளாக்குறிச்சி, ஈய்யனூர், ஒகையூர், பொரசக்குறிச்சி, கனங்கூர், விருகாவூர், முடியனூர், சாத்தனூர், மலைக்கோட்டாலம், விளம்பாவூர், சித்தலூர், வேங்கைவாடி, குடியநல்லூர், வானவரெட்டி, லட்சியம், நிறைமதி, நீலமங்கலம், தண்டலை, பெருவங்கூர், ஆ.மரூர், சேதுவராயன்குப்பம் ஆகிய பகதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்சார வாரியத்தின் கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ. பாளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூடங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (65). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.58 ஆயிரத்துடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அவரது மனைவி நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவல்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரது பேரன் கவுதம் (17). 10-ம் வகுப்பு படித்து முடித்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்த 17 வயது பெண் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமானார்.
இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது மகள் மொட்டையம்மாள் (26). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மொட்டையம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலூர் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே எஸ்.கொல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 18). பெங்களூருவில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் ரொட்டியில் விஷ மருந்தை தடவி சாப்பிட்டுள்ளார். இதி்ல் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலியானதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியமுத்து (வயது 55), கூலி தொழிலாளி. இவரது மகள் அஞ்சம்மாள் பிரசவத்திற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த வாரம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் முனியமுத்து தனது மற்றொரு மகளான மகாராணியுடன் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ள தனது மகளை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அஸ்தினாபுரம் அருகே வரும்போது எதிரில் அதிவேகமாக வந்த தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான டிப்பர் லாரி மோதியதில் முனியமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த மகாராணி ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளை சிமெண்டு ஆலைகளுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளை சிமெண்டு ஆலை கனரக வாகனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் இரவு 7 மணி வரை போராட்டம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலை பள்ளி சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.
இதேபோல் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வட்டத்துக்கு உட்பட்ட 56 கிராமங்களிலும் ஏரி, குளம் நிரம்பியதால் உபரிநீர் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடுகிறது.
தொடர் மழை காரணமாக ஒருசில இடங்களில் வீடுகள் இடிந்தவண்ணம் உள்ளது. அதன்படி சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலை பள்ளி சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது. தொடர்மழை காரணமாக சுவர் நனைந்து காணப்பட்டதால் இந்த விபரீதம் நடந்துள்ளது.
பள்ளி விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள் விபத்திலிருந்து தவிர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் கல்விதுறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.