என் மலர்

  செய்திகள்

  தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து இருப்பதை படத்தில் காணலாம்.
  X
  தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து இருப்பதை படத்தில் காணலாம்.

  திருப்பரங்குன்றம் கோவில் தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் கோவிலின் சுற்றுச்சுவரின் சில பகுதிகளில் சுற்றுச்சுவர் மிகவும் பலவீனமாக இருப்பதால்முழுமையாக விழுந்து தரையோடு தரையாக விடும் என்ற நிலை உள்ளது.
  திருப்பரங்குன்றம் :

  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் லட்சுமி தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது தெய்வானைக்காக உருவாக்கியதாக செவிவழிசெய்தி கூறுகிறது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரும் லட்சுமி தீர்த்த குளத்திற்கு வந்து தங்களது கால்கள், கைகளை அலம்புவதோடு தீர்த்தத்தை அள்ளி தங்களது கண்களில் ஒத்தி கொள்ளுவார்கள்.

  குளத்தின் தண்ணீரில் உள்ள மீன்களுக்கு பக்தர்கள் பொரி வாங்கிப் போடுவதும், உடம்பில் உள்ள பருகு போவதற்கு உப்பு, மிளகுபோடுவதும ்நீண்டகாலமாக நடைமுறையில்இருந்து வந்தது.இதனையொட்டி உப்பு, மிளகு, பொரிவிற்பனை உரிமம் மூலம் கணிசமான வருமானம் கிடைத்து வந்தது.

  இந்த நிலையில் சமீபகாலமாக கடும் வறட்சி ஏற்பட்டதால் லட்சுமி தீர்த்தக் குளத்தில் தண்ணீர் வற்றியது.

  இந்த நிலையில் கோவிலின் சுற்றுச்சுவர் நாலாபுறமும் பலவீனமாக இருந்து வந்தது.அதைக் கண்ட பக்தர்கள் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபகாலமாக தொடர் மழை பெய்து வந்தது.அதனால் லட்சுமி தீர்த்தக்குளம் நிரம்பியது.

  இந்த நிலையில் நேற்று சுற்றுசுவரின் 3 மற்றும் 4 இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு திடீரென்று இடிந்து குளத்திற்குள் விழுந்தது. மேலும் சில பகுதிகளில் சுற்றுச்சுவர் மிகவும் பலவீனமாக இருப்பதால்முழுமையாக விழுந்து தரையோடு தரையாக விடும் என்ற நிலை உள்ளது. மேலும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையை இருந்து வருகிறது.ஆகவே கோவில் நிர்வாகம் உரிய நேரத்தில் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
  Next Story
  ×