என் மலர்
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் பேரூராட்சியில் 1, 3, 5, 9, 11, 13 வார்டுகள் பொது, 2, 4, 6, 8, 10, 12,15 வார்டுகள் பொது (பெண்கள்) 7வது வார்டு எஸ்.சி., பெண்கள், 14வது வார்டு எஸ்.சி., பொது பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில் 15 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 6974 பேர், பெண் வாக்காளர்கள் 7322, மூன்றாம் பாலினத்தவர்கள் இருவர் என 14,298 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கு இதுவரை தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களே மாறி, மாறி வந்துள்ளனர். 1986 முதல் 1991 வரை தி.மு.க. ஆசிம், 1996 முதல் 2001 வரை தி.மு.க. பஷீர் அகமது, 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க., கிருஷ்ணமூர்த்தி, 2006 முதல் 2011 வரை தி.மு.க., முனுசாமி, 2011 முதல் 2016 வரை அ.தி.மு.க., கிருஷ்ணமூர்த்தி தலைவராக இருந்துள்ளனர்.
இந்த முறை தலைவர் பதவியைப் பிடிக்க தி.மு.க., அ.தி.மு.க., வினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சங்கராபுரம் பேரூராட்சியில் 1, 3, 5, 9, 11, 13 வார்டுகள் பொது, 2, 4, 6, 8, 10, 12,15 வார்டுகள் பொது (பெண்கள்) 7வது வார்டு எஸ்.சி., பெண்கள், 14வது வார்டு எஸ்.சி., பொது பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில் 15 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 5 ஓட்டுச்சாவடிகள், பெண்கள் மேல்நிலை பள்ளியில் 2, காட்டு வனஞ்சூர் நடு நிலைப் பள்ளியில் 3, சங்கராபுரம் இந்து தொடக்கப் பள்ளியில் 2, டி.எம். பள்ளியில் 3 என மொத்தம் 15 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கவிதா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கி செல்லலாம் என்று கூறினார். ஆனால் இதற்கு பிரபாகரன் மறுத்தார்.
இதனால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கவிதாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணனும் விசாரணை நடத்தி வருகிறார்.

மூங்கில்துறைப்பட்டு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி கவிதா(வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கி செல்லலாம் என்று கூறினார். ஆனால் இதற்கு பிரபாகரன் மறுத்ததால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கவிதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கவிதாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

சின்னசேலம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 10,014 ஆண் வாக்காளர்கள், 10,553 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள், ஆக மொத்தம் 20,570 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 23 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை மாநிலத்தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு வருகின்ற பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இதையொட்டி இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகளும், சங்கராபுரம், தியாக துருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை, வடக்கநந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளும் உள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை, வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்ட விபரங்கள் பின்வருமாறு:-
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்கு 22,162 ஆண் வாக்காளர்கள், 23,555 பெண் வாக்காளர்கள், 9 பேர் 3-ம் பாலினத்தவர்கள் ஆக மொத்தம் 45,726 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருக்கோவிலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இங்கு 12,698 ஆண் வாக்காளர்கள், 13,544 பெண் வாக்காளர்கள், 13 3-ம் பாலினத்தவர்கள் ஆக மொத்தம் 26,255 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 35 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இங்கு 9,403 ஆண் வாக்காளர்கள், 9,873 பெண் வாக்காளர்கள், 4 பேர் மூன்றாம் பாலினத்தவர், ஆக மொத்தம் 19,280 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 25 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகளிலும் மொத்தம் 72 வார்டுகள், 91,261 வாக்காளர்களும், 106 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 6,850 ஆண் வாக்காளர்கள், 7,158 பெண் வாக்காளர்கள், ஆக மொத்தம் 14,008 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 7,681 ஆண் வாக்காளர்கள், 8,107 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் ஆக மொத்தம் 15,789 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 20 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மணலூர்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 3,357 ஆண் வாக்காளர்கள், 3,393 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலினத்தவர்கள், ஆக மொத்தம் 6,754 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கனந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 9,502 ஆண் வாக்காளர்கள், 9,882 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள், ஆக மொத்தம் 19,386 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த பகுதியில் 21 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 பேரூராட்சிகளிலும் 81 வார்டுகளும், 76,507 வாக்காளர்களும் உள்ளனர். 94 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் ஆகியவற்றில் மொத்தமாக 153 வார்டுகள் உள்ளது. ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 768 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக மாவட்டத்தில் 200 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்டவாறு வார்டுகள், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

புத்தகங்களை அலமாரிகளில் அடுக்காமல் கீழே மொத்தமாக அடுக்கி வைத்திருப்பதால் வாசகர்கள் புத்தகங்களை தேடி எடுத்து படிக்க இயலாத சூழ்நிலை உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் சையது குளம் அருகில் 1995- ம் ஆண்டு கட்டப்பட்ட கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. மேலும் ரூ.1000 செலுத்தி 60-க்கும் மேற்பட்டோர் புரவலர்களாக உள்ளனர்.
தினமும் சுமார் 30-க்கும் மேற்பட்ட வாசகர்கள் செய்தித் தாள்கள், வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் உள்ளிட்டவை படிப்பதற்காக வந்து செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சந்தா செலுத்தி நூலகத்தில் உள்ள பல்வேறு புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து வருகின்றனர்.
இந்த நூலக கட்டிடத்தில் வாசகர்கள் வந்து அமர்ந்து படிப்பதற்கு கூட இட வசதியின்றி புத்தகங்கள் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களை அலமாரிகளில் அடுக்காமல் கீழே மொத்தமாக அடுக்கி வைத்திருப்பதால் வாசகர்கள் புத்தகங்களை தேடி எடுத்து படிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இவ்வாறு போட்டித் தேர்வு புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள் ஆகியவற்றை வாசகர்கள் படிக்காமலே வீணாகும் அவல நிலையும் உள்ளது.
மேலும் கட்டிடங்கள் பலவீனம் அடைந்துள்ளதால் மழைபெய்தால் மழைநீர் கான்கிரீட் சுவற்றின் கீழ்ப்பக்கம் கசிந்து புத்தகங்கள் மீது விழுகின்றன. இதனால் புத்தகங்கள் மழை நீரில் நனைந்து வீணாகும் அவலநிலை உள்ளது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாசகர்கள் கூறுகின்றனர். எனவே நூலகங்களை திறந்து வைத்து விட்டு புத்தகங்களை அனுப்பி விட்டால் மட்டும் போதும் என நினைக்கும் அதிகாரிகள், அவற்றை முறையாக பாதுகாக்க கட்டிட வசதிகளையும், வாசகர்கள் அமர்ந்து படிக்க இடவசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தியாகதுருகம் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தியாகதுருகம் அருகே சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே எடச்சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் முத்தையன் (வயது 34).
இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரது உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் எடச்சித்தூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விருகாவூர் பகுதியில் வந்தபோது எதிரே கூத்தக்குடி பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற மினி சரக்கு வாகனம், இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மினி சரக்கு வாகன ஓட்டுனர் திருச்சி மாவட்டம் தேவகானம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஜெகதீஷ் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 32 துறைகளைச் சேர்ந்த 181 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு, தமிழ்நாடுகூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் சமாதான புறாக்களையும், மூவர்ன கலர் பலூன்களையும் பறக்கவிட்டார், தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 32 துறைகளைச் சேர்ந்த 181 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வருவாய்த்துறை, உள்ளிட்ட 8 துறைகளைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு ரூ. 27 லட்சத்து 80 ஆயிரத்து 613 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பூங்கொடி, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் குமரன், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியகுழு சேர்மன் அலமேலு ஆறுமுகம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயணாளிகள் பலரும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2010-ம் ஆண்டில் தேசிய அளவில் 8.57 ஆக குறைந்த நிலையில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.35 என்ற அளவிலேயே நீடித்தது என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார். மேலும் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய அளவில் சராசரி பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.03 ஆக இருந்தது. 2016, 2017-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் 9.54 ஆக இருந்த இந்த விகிதம் தற்போது 8.78 ஆக குறைந்துள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 2020-2021-ம் ஆண்டிற்கான தேசிய குடும்ப கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் குழந்தைப்பேறு விகிதம் குறைந்திருப்பதால், நாட்டின் மக்கள் தொகை இனிவரும் காலங்களில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய அளவில் சராசரி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 9.03 ஆக இருந்தபோது, தமிழகத்தின் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.35 ஆக இருந்தது.
2010-ம் ஆண்டில் தேசிய அளவில் 8.57 ஆக குறைந்த நிலையில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.35 என்ற அளவிலேயே நீடித்தது. அதன்பின், தமிழகத்தில் படிப்படியாக குறைய தொடங்கிய இந்த விகிதம் தற்போது, 8.78 என்ற அளவிற்கு குறைந்துள்ளது என இதன் வாயிலாக சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் பெண் குழந்தைகளை பிறப்பிலிருந்தே போற்றி பாதுகாக்க வேண்டும்.
ஆண் வாரிசுக்கு சமமாக பெண் குழந்தைகளையும் நினைக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் பெண் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. எனவே, பெண் குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்க செய்து, பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு கிராமத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 15 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு எரிசாராயத்தையும், அதனை கடத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 29) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு கல்லூரி மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷி வந்தியம் போலீஸ் சரகம் காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். அவரது மகள் சந்தியா(வயது 24). கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி., படித்து வருகிறார்.
இவரை கடந்த 22-ந் தேதி முதல் காணவில்லை, அதிர்ச்சி அடைந்த சங்கர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் சந்தியா கிடைக்கவில்லை.
இது குறித்து சங்கர் ரிஷிவந்தியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே எரிசாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் போலீசார் ஒட்டம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த இருசன் மகன் விஜயகுமார் (வயது 29) என்பதும், அவர் 15 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை கைது செய்து அவரிடம் இருந்து சாராயம், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அமுல்ராஜ் (வயது 24). இவருக்கு திருணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக அமுல்ராஜிக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். இருப்பினும் பெண் கிடக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அமுல்ராஜ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அமுல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.