என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    சங்கராபுரம் அருகே அரசு கல்லூரி மாணவி திடீர் மாயம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு கல்லூரி மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷி வந்தியம் போலீஸ் சரகம் காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். அவரது மகள் சந்தியா(வயது 24). கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி., படித்து வருகிறார்.

    இவரை கடந்த 22-ந் தேதி முதல் காணவில்லை, அதிர்ச்சி அடைந்த சங்கர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் சந்தியா கிடைக்கவில்லை.

    இது குறித்து சங்கர் ரிஷிவந்தியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×