என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டம்
    X
    கள்ளக்குறிச்சி மாவட்டம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள் 5 பேரூராட்சிகளில் 1.67 லட்சம் வாக்காளர்கள்

    சின்னசேலம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 10,014 ஆண் வாக்காளர்கள், 10,553 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள், ஆக மொத்தம் 20,570 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 23 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை மாநிலத்தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு வருகின்ற பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இதையொட்டி இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகளும், சங்கராபுரம், தியாக துருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை, வடக்கநந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளும் உள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் வார்டுகளின் எண்ணிக்கை, வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்ட விபரங்கள் பின்வருமாறு:-

    கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இங்கு 22,162 ஆண் வாக்காளர்கள், 23,555 பெண் வாக்காளர்கள், 9 பேர் 3-ம் பாலினத்தவர்கள் ஆக மொத்தம் 45,726 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருக்கோவிலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இங்கு 12,698 ஆண் வாக்காளர்கள், 13,544 பெண் வாக்காளர்கள், 13 3-ம் பாலினத்தவர்கள் ஆக மொத்தம் 26,255 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 35 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இங்கு 9,403 ஆண் வாக்காளர்கள், 9,873 பெண் வாக்காளர்கள், 4 பேர் மூன்றாம் பாலினத்தவர், ஆக மொத்தம் 19,280 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 25 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகளிலும் மொத்தம் 72 வார்டுகள், 91,261 வாக்காளர்களும், 106 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 6,850 ஆண் வாக்காளர்கள், 7,158 பெண் வாக்காளர்கள், ஆக மொத்தம் 14,008 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 7,681 ஆண் வாக்காளர்கள், 8,107 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் ஆக மொத்தம் 15,789 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 20 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சின்னசேலம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 10,014 ஆண் வாக்காளர்கள், 10,553 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள், ஆக மொத்தம் 20,570 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 23 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மணலூர்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 3,357 ஆண் வாக்காளர்கள், 3,393 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலினத்தவர்கள், ஆக மொத்தம் 6,754 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வடக்கனந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 9,502 ஆண் வாக்காளர்கள், 9,882 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள், ஆக மொத்தம் 19,386 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த பகுதியில் 21 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 பேரூராட்சிகளிலும் 81 வார்டுகளும், 76,507 வாக்காளர்களும் உள்ளனர். 94 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் ஆகியவற்றில் மொத்தமாக 153 வார்டுகள் உள்ளது. ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 768 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக மாவட்டத்தில் 200 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்டவாறு வார்டுகள், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
    Next Story
    ×