என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டம்
    X
    கள்ளக்குறிச்சி மாவட்டம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

    2010-ம் ஆண்டில் தேசிய அளவில் 8.57 ஆக குறைந்த நிலையில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.35 என்ற அளவிலேயே நீடித்தது என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார். மேலும் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய அளவில் சராசரி பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.03 ஆக இருந்தது. 2016, 2017-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் 9.54 ஆக இருந்த இந்த விகிதம் தற்போது 8.78 ஆக குறைந்துள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 2020-2021-ம் ஆண்டிற்கான தேசிய குடும்ப கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் குழந்தைப்பேறு விகிதம் குறைந்திருப்பதால், நாட்டின் மக்கள் தொகை இனிவரும் காலங்களில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய அளவில் சராசரி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 9.03 ஆக இருந்தபோது, தமிழகத்தின் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.35 ஆக இருந்தது.

    2010-ம் ஆண்டில் தேசிய அளவில் 8.57 ஆக குறைந்த நிலையில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9.35 என்ற அளவிலேயே நீடித்தது. அதன்பின், தமிழகத்தில் படிப்படியாக குறைய தொடங்கிய இந்த விகிதம் தற்போது, 8.78 என்ற அளவிற்கு குறைந்துள்ளது என இதன் வாயிலாக சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் பெண் குழந்தைகளை பிறப்பிலிருந்தே போற்றி பாதுகாக்க வேண்டும்.

    ஆண் வாரிசுக்கு சமமாக பெண் குழந்தைகளையும் நினைக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் பெண் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. எனவே, பெண் குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்க செய்து, பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×