என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சின்னசேலம் அருகே தண்டவாள பகுதியில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் உடனடியாக சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருேக வரதப்புனூர் கிராமத்தில் ெரயில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு உடற் கூர் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன பெண் அணிந்திருந்த உடைகள் காக்கி வெள்ளை நிறத்தில் வெள்ளை பூ போட்ட சேலை, ரோஸ் நிறத்தில் ஜாக்கெட், அணிந்திருந்தார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தோர் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து மாறு சின்னசேலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும்

    • உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • இன்று காலை மாணவர்கள் ஒன்று திரண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை அருகே உள்ள சேந்தநாட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சில் வானாம்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவேகூடுதல் பஸ்கள் விடவேண்டுமம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை இன்று காலை மாணவர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் கூ. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்சினை சிறை பிடித்து சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்க ப்பட்டது தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ெஜகதீசன் தலைமையி லான போலீசார் விரைந்து செ ன்றனர்.பின்னர் மாணவ-மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியல் செய்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • மாணவி ஸ்ரீமதி தங்கி இருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்வோம் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியா–மூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவிஸ்ரீமதி இறப்பு தொடர்பாக தேசிய குழந்தை–கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மற்றும் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகி–யோர் முன்னிலையில் கனியா–மூர் பள்ளி மற்றும் விடுதி–யில் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சி.பி.சி.ஐ.டி கோமதி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, மருத்துவர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், குழந்தைகள் நல குழு தலைவர் ரவிச்சந்திரன், நன்னடத்தை அலுவலர் சக்திவேல் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்து, மாணவியின் இறப்பு தொடர்பாக பல்வேறு விபரங்களை கேட்டறிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாது–காப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

    மாணவியின் பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்தியப் பின் பள்ளியிலும், விடுதியிலும் ஆய்வு செய்தோம். இதையடுத்து மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுள்ளோம். இச்சம்பவத்தை முதற்கட்டமாக விசாரணை நடத்திய காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினோம். இதன்மூலம் பள்ளியில் உள்ள விடுதி அனுமதியின்றி செயல்பட்டிருப்பதோடு, மாணவர்களுக்கு அடிப்ப–டை வசதி குறைபாடுகளும் உள்ளதை குறிப்பெடுத்து–ள்ளோம். மாணவி உயிரிழப்புத் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடு–களும், விசாரணை அதிகாரிகளின் கவனக்குறைவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம். இதனை தொடர்ந்து விசாரனை அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் விரைவில் சமர்ப்பிப்போம் என்றார்.

    • பகண்டைகூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரத்தை அடுத்த பகண்டை கூட்டுரோடு அருகே மரூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வெண்ணிலா (வயது 40). இவர் அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் கிணறு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெண்ணிலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் பகண்டை கூட்டு்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கைதான 5 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்ற புஷ்பராணி அனுமதி வழங்கினார்.
    • பள்ளி மாணவி இறப்பு விவரம், அதற்கான காரணம்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 5 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றபுஷ்பராணி அனுமதி வழங்கினார்.

    அதனைதொடர்ந்து 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி கூடுதல் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அவர்களிடம் கனியாமூரில் நடந்த பள்ளி மாணவி இறப்பு விவரம், அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு 5 பேரும் பதில் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவினை அவர்களது வக்கீல்கள் தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வரும்போது ஜாமீன் கிடைக்குமா? என்பது பின்னர் தெரியவரும்.

    • சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார்.
    • மாநில தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் பிரியங்கானுங்கோ தலைமையில் 7 பேர் குழு கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சம்பவத்துக்கு நீதிகேட்டு அமைதியான போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவிற்கு கலவரமாக மாறியது.

    அதன் பிறகு டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டனர். பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு போராட்டக்காரர்களை பிடிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து 308 பேர் இதுவரைக்கும் கைது செய்துள்ளனர்.

    பின்பு மாநில அளவில் இந்த கலவரம் பேசப்பட்ட நிலையில் தாமாக முன்வந்து தேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் இன்று (27-ந் தேதி) நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மாநில தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் பிரியங்கானுங்கோ தலைமையில் 7 பேர் குழு இன்று காலை 11:30 மணியளவில் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஸ்ரீமதி மாணவி 3-வது மாடியில் இருந்த தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட கீழ்தளத்திலும் பிறகு மூன்றாவது மாடி மற்றும் மாணவி தங்கி இருந்த விடுதி மொட்டை மாடி ஆகிய இடங்களில் பார்வையிட்டனர்.

    • கள்ளக்குறிச்சி பகுதியில் நிலம் அளவீடு செய்ய லஞ்சம் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்சில் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தாசில்தார் மணிகண்டனிடம் மூதாட்டியின் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறு த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேற்று கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தன் பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதில் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வராதவர்கள்மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும்என அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்ட அவர், அறையில் உள்ள பழைய ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட கலெக்டர் அங்கிருந்த தாசில்தார் விஜய் பிரபாகரன், தலைமை யிடத்து துணை வட்டா ட்சியர் பானுப்பிரியா ஆகியோரிடம் பட்டா மாற்றம், குடும்ப அட்டை பெயர் மாற்றம் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருவாய் ஆய்வாளர்களிடம் எவ்வளவு மனுக்கள் நிலுவையில் உள்ளன.

    ஏன் நிலுவையில் உள்ளது? என்பது குறித்து விபரங்களைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துவிட்டு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட கலெக்டர் அங்கு காத்திருந்த பொது மக்களிடம் எதற்காக வந்து காத்துள்ளீர்கள் என கேட்டறிந்தார்? அப்பொழுது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவி த்தொகை பெறு வதற்காக வந்ததாக கூறினார்.

    உடனடியாக அங்கிருந்த சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் தாசில்தார் மணிகண்டனிடம் மூதாட்டியின் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறு த்தினார். மேலும் ஒரே வேலைக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் நில அளவைப் பிரிவில் 2 மாதமாக நிலம் அளவை செய்ய இழுத்தடிப்பதாகவும், மேலும் நிலம் அளவை செய்ய லஞ்சம் கேட்பதாகவும் கூறினார். அதற்கு மாவட்ட கலெக்டர் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்க்கு தகவல் தெரிவியுங்கள் என கூறினார். தொடர்ந்து பொது மக்களை அலைக்கழிப்பு செய்யாமல் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • மானாவாரி பயிர்களை விதைக்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு:-, கள்ளக்குறிச்சி 68, தியாகதுருகம் 80, விருகாவூர் 65, சின்னசேலம் 43, அரியலூர் 56, கடுவனூர் 62, கலையநல்லூர் 86, கீழ்பாடி 44, மூரார்பாளையம் 68, மூங்கில்துறைப்பட்டு 133, ரிஷிவந்தியம் 40, சூளாங்குறிச்சி 85, வடசிறுவலூர் 84, மாடாம்பூணடி 53, மணலூர்பேடடை 27, திருக்கோவிலூர் 22, திருப்பாலபந்தல் 47, வேங்கூர் 25, ஆதூர் 36, எறையூர் 50, ஊ.கீரனூர் 120, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மூங்கில்துறைப்பட்டில் 133 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக திருக்கோவிலூரில் 22 மி.மீட்டரும் மழையும் பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 1094 மி.மீட்டராகவும், சராசரி 52.09 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது. இந்த மழையால் கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் நெல், கரும்பு, மக்கா ச்சோளம் உள்ளிட்ட பயிர்க ளை சாகுபடி செய்து ள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆடி மாதத்தில் கம்பு, எள் ஆகிய மானாவாரி பயிர்களை விதைக்கவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • கலவரம் காரணமாக பள்ளி வகுப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் தொடர் விடுமுறையில் மாணவர்கள் இருந்தனர்.
    • 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு பல்வேறு அமைப்புகள் கடந்த 17-ந்தேதி போராட்டம் செய்தனர்.

    இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறைகளை சூறையாடினர். அதோடு அங்கு நின்ற வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த கலவரத்தில் பள்ளி வகுப்பறைகள், பஸ்கள், வகுப்பில் உள்ள மேஜை உள்ளிட்ட பொருட்கள் சேதமானது.

    மாணவி ஸ்ரீமதி இறந்த நாளில் இருந்து இந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. கலவரம் காரணமாக பள்ளி வகுப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் தொடர் விடுமுறையில் மாணவர்கள் இருந்தனர்.

    எனினும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக கள ஆய்வுக்கு சென்றார். அப்போது மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன் முதல் கட்டமாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் ஆன்-லைன் வகுப்பு தொடங்கியது. எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை இன்று ஆன்-லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர், ஆசிரியைகள் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகளை நேரடியாக தொடர்பு கொண்டு வகுப்புகளை நடத்தினர்.

    மேலும் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கனியாமூரை சுற்றியுள்ள 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள வகுப்பறைகளில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் நேரடி வகுப்புகளை நடத்த உள்ளனர்.

    • பகண்டை கூட்டுரோடு அருகே தவறி விழுந்து கொத்தனார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    கள்ளகுறிச்சி: 

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சீர்ப–னந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 34). கொத்தனாரார். இவர் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடன் வேலை செய்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    • கள்ளக்குறிச்சி அருகே தந்தையை கொலை செய்த பட்டதாரி மகன் கைது செய்யப்பட்டார்.
    • தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தைசேர்ந்தவர் கலியன் மகன் பழனிவேல் (50). விவசாயி, இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிவேல் அவரது மனைவி சின்ன பொண்ணு, 2 வது மகன் பால கிருஷ்ணன் (27) ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது பாலகிருஷ்ணன் சாப்பிட்ட தட்டை கழுவி தண்ணீரை வெளியேஊற்றுவதில் தந்தை மகனுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற பாலகிருஷ்ணன் தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று பழனிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் பி.காம். படித்து முடித்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுக்க முடிவு செய்தனர்.

    அதன்படி 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் இன்று காலை 11.20 மணிக்கு சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    மனுவினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி பள்ளி நிர்வாகிகள் 5 பேரையும் 1 நாள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியதோடு நாளை (28-ந் தேதி) நண்பகல் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    அதனைதொடர்ந்து 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி கூடுதல் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அழைத்து சென்றனர்.

    முன்னதாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் விழுப்புரம் அழைத்து வந்தனர்.

    ×