search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி பகுதியில் நிலம் அளவீடு செய்ய லஞ்சம் குறித்து  பொதுமக்கள் விஜிலென்ஸ்சில் புகார் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி பகுதியில் நிலம் அளவீடு செய்ய லஞ்சம் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்சில் புகார் அளிக்கலாம்: கலெக்டர் தகவல்

    • கள்ளக்குறிச்சி பகுதியில் நிலம் அளவீடு செய்ய லஞ்சம் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்சில் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தாசில்தார் மணிகண்டனிடம் மூதாட்டியின் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறு த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேற்று கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தன் பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதில் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வராதவர்கள்மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும்என அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்ட அவர், அறையில் உள்ள பழைய ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட கலெக்டர் அங்கிருந்த தாசில்தார் விஜய் பிரபாகரன், தலைமை யிடத்து துணை வட்டா ட்சியர் பானுப்பிரியா ஆகியோரிடம் பட்டா மாற்றம், குடும்ப அட்டை பெயர் மாற்றம் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருவாய் ஆய்வாளர்களிடம் எவ்வளவு மனுக்கள் நிலுவையில் உள்ளன.

    ஏன் நிலுவையில் உள்ளது? என்பது குறித்து விபரங்களைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துவிட்டு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட கலெக்டர் அங்கு காத்திருந்த பொது மக்களிடம் எதற்காக வந்து காத்துள்ளீர்கள் என கேட்டறிந்தார்? அப்பொழுது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவி த்தொகை பெறு வதற்காக வந்ததாக கூறினார்.

    உடனடியாக அங்கிருந்த சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் தாசில்தார் மணிகண்டனிடம் மூதாட்டியின் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறு த்தினார். மேலும் ஒரே வேலைக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் நில அளவைப் பிரிவில் 2 மாதமாக நிலம் அளவை செய்ய இழுத்தடிப்பதாகவும், மேலும் நிலம் அளவை செய்ய லஞ்சம் கேட்பதாகவும் கூறினார். அதற்கு மாவட்ட கலெக்டர் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்க்கு தகவல் தெரிவியுங்கள் என கூறினார். தொடர்ந்து பொது மக்களை அலைக்கழிப்பு செய்யாமல் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×