பகண்டைகூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

பகண்டைகூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார்.
பகண்டைகூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரத்தை அடுத்த பகண்டை கூட்டுரோடு அருகே மரூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வெண்ணிலா (வயது 40). இவர் அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் கிணறு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெண்ணிலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் பகண்டை கூட்டு்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com