என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்"

    • மாணவி ஸ்ரீமதி தங்கி இருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்வோம் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியா–மூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவிஸ்ரீமதி இறப்பு தொடர்பாக தேசிய குழந்தை–கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மற்றும் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகி–யோர் முன்னிலையில் கனியா–மூர் பள்ளி மற்றும் விடுதி–யில் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சி.பி.சி.ஐ.டி கோமதி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, மருத்துவர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், குழந்தைகள் நல குழு தலைவர் ரவிச்சந்திரன், நன்னடத்தை அலுவலர் சக்திவேல் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்து, மாணவியின் இறப்பு தொடர்பாக பல்வேறு விபரங்களை கேட்டறிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாது–காப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

    மாணவியின் பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்தியப் பின் பள்ளியிலும், விடுதியிலும் ஆய்வு செய்தோம். இதையடுத்து மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுள்ளோம். இச்சம்பவத்தை முதற்கட்டமாக விசாரணை நடத்திய காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினோம். இதன்மூலம் பள்ளியில் உள்ள விடுதி அனுமதியின்றி செயல்பட்டிருப்பதோடு, மாணவர்களுக்கு அடிப்ப–டை வசதி குறைபாடுகளும் உள்ளதை குறிப்பெடுத்து–ள்ளோம். மாணவி உயிரிழப்புத் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடு–களும், விசாரணை அதிகாரிகளின் கவனக்குறைவும் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம். இதனை தொடர்ந்து விசாரனை அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் விரைவில் சமர்ப்பிப்போம் என்றார்.

    ×