பகண்டை கூட்டுரோடு அருகே தவறி விழுந்து கொத்தனார் பலி

பகண்டை கூட்டுரோடு அருகே தவறி விழுந்து கொத்தனார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
பகண்டை கூட்டுரோடு அருகே  தவறி விழுந்து கொத்தனார் பலி
Published on

கள்ளகுறிச்சி: 

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சீர்ப–னந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 34). கொத்தனாரார். இவர் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடன் வேலை செய்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com