என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • துணை சுகாதார நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
    • கட்டிட பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கிறது.

    படப்பை:

    படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 15-வது நிதிக் குழு மானியத்தில் துணை சுகாதார நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிட பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மூடியே கிடக்கிறது.

    இதனால் இந்த புதியகட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே துணை சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கபட்டு வருகிறது.
    • தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கோவில் நகரமாக உள்ளது. இங்குள்ள வரதராஜ பெருமாள்கோவில், காமாட்சி அம்மன்கோவில் சங்கர மடம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இங்குள்ள பட்டுச்சேலைகளும் தின சிறப்பு வாய்ந்தது. இதனால் காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மறைந்த முன்னால் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு இல்லமும் இங்கு உள்ளது.

    இத்தனை சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரத்தில் போதிய வசதிகளுடன் பஸ்நிலையம் என்ற குறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக நிலவி வருகிறது. தற்போது காஞ்சீபுரத்தின் மையப்பகுதியான காமராஜ் சாலையில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள பஸ் நிலையம், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த போக்குவரத்து மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் கட்டப்பட்டது. தற்போது தினமும் 350 பஸ்கள் இங்கிருந்து திருப்பதி, சித்தூர், பெங்களூர்,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கபட்டு வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகள் தொழிற்சாலைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து உள்ளன. மேலும் மக்கள்தொகை பெருக்கமும் அதிகரித்து உள்ளது. தற்போது காஞ்சீபுரம் மாநராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பஸ்நிலையம் மட்டும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. அனைத்து பஸ்களும் நகரத்தின் மையபகுதிக்கு வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து காஞ்சிபுரத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் பொன்னேரி கரை அருகே சுமார் 19 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு ரூ. 38 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. பஸ்நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து பணிமனையும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சிபுரம் நகர மக்களின் 25 ஆண்டு கனவு விரைவில் நிறைவேற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, காஞ்சிபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் தடைப்பட்டு வந்தன. தற்போது தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே விரைவில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    • தேவரியம்பாக்கத்தில் தியான நிலையில் உள்ள இந்த புத்தர் சிலை பெருமைக்குரியது.
    • காலம் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவிலில் வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அழகிய வெண்மை நிற பளிங்குக் கல்லால் ஆன அமர்ந்த நிலையில் உள்ள புத்தரின் சிலை ஒன்று பெருமாள் கோவிலில் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சிலையில் புத்தரின் கண்கள் மூடிய நிலையில் தியானத்தில் உள்ளார். சுமார் ஒரு அடி உயரமுள்ள புத்தர் சிலையின் காதுகள் இரண்டும் தோள்வரை நீண்டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலையிலும் சுருள் சுருளான தலைமுடியுடனும், இடப்புறத் தோள் பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடையுடனும் காணப்பட்டது. சிலையின் தலை பகுதியில் சுருள் முடி போன்ற அமைப்பும், பின்புற மேலாடை (சீவர ஆடை) நேர்த்தி யாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலை சுமார் 900 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் கூறும்போது, தேவரியம்பாக்கத்தில் தியான நிலையில் உள்ள இந்த புத்தர் சிலை பெருமைக்குரியது. கி.மு. 3-ம் நூற்றாண்டில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்கான கவுதம புத்தரின் வழியை பின்பற்றி உலகெங்கும் புத்த அமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்றார்.

    அத்தகைய கருத்தோடு ஒத்து போகும் வகையில் இச்சிலையின் அமைப்பு அமைந்து இருப்பது பெறும் சிறப்புக்குரியதாகும். இந்த சிலை 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காலம் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன் மற்றும் பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்கள் வீட்டு பிள்ளையான நானும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக இருப்பேன்.
    • ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்ததற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை.

    பரந்தூர் திருமண மண்டபத்துக்கு அருகே வேனில் நின்றபடியே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * உங்கள் ஊர் கிராம தேவதைகளான கொல்லம்வட்டாள் அம்மன் மேலையும், எல்லையம்மன் மேலையும் ரொம்பவே நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். அந்த நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்.

    * உங்கள் வீட்டு பிள்ளையான நானும், தமிழக வெற்றிக் கழக தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக இருப்பேன்.

    * ஏகனாபுரம் திடலில்தான் எல்லோரையும் சந்திக்க நினைத்தேன். நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று தெரியவில்லை.

    * கொஞ்ச நாளைக்கு முன் நமது புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததற்கு தடைவிதித்தார்கள்.

    * ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்ததற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை.

    * நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

    * மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன் என விஜய் பேசினார்.

    • நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள்.
    • வளர்ச்சி என்கிற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்.

    பரந்தூர் திருமண மண்டபத்துக்கு அருகே வேனில் நின்றபடியே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நம்முடைய முதல் மாநில மாநாட்டில் நமது கட்சியின் கொள்கைகளை பற்றி எடுத்து சொன்னேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப் பாதுகாப்பு, சூழலியல் மற்றும் கால நிலை நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடிய இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத பகுதி சார் மாநில வளர்ச்சி பரவலாக்கம். இதுதான் நாம் அறிவித்த அந்த கொள்கை. இதை நான் இங்கே சொல்லக் காரணம் ஓட்டு அரசியலுக்காக இல்லை.

    இன்னொரு தீர்மானம் அதே மாநில மாநட்டில் சொன்னேன். அது விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    அது மட்டுமில்லாமல் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், நமது விவசாயிகள் பாதிக்கப்படுவ தால் இந்த திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று சொல்லி இருந்தோம். அதை இங்கு உங்கள் முன்னால் மிகவும் வலுவாக வலியுறுத்துகிறேன். இந்த பிரச்சனையில் நான் உங்களோடு உறுதியாக நிற்பேன்.

    இன்னொரு முக்கியமான விஷயம். நம்மை ஆண்டு கொண்டிருக்கிற ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக் கும் இதை நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இங்கே வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையமே வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் சொல்கிறேன்.

    இதை நான் சொல்லவில்லை என்று என்றால், இவன் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று ஒரு கதையை கட்டி விடுவார்கள். நமக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று வைங்க.... எல்லாவற்றுக்கும் மேல இன்னைக்கு இந்த பகுதியில் வாழ்கிற எல்லா உயிரினங்களின் இருப்பையும் புவி வெப்பமயமாதல் பய முறுத்திக் கொண்டு இருக்கிறது. அதனுடைய ரிசல்ட்டுதான் ஒவ்வொரு வருடமும் இந்த மழை காலத்தில் வெள்ளத்தில் சென்னை நகரம் எப்படி தத்தளிக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

    இப்போது சமீபமாக எடுத்த ஒரு அறிவியல் ஆய்வில் இப்படி ஒவ்வொரு வருடமும் சென்னையில் வருகிற வெள்ளத்துக்கு காரணமே இந்த சுற்று வட்டார பகுதிகளில் இருக்கிற சதுப்பு நிலங்களை, நீர் நிலைகளை அழித்ததுதான் என்று சொல்கிறது. இப்படி ஒரு சூழல் இருக்கும்போது 90 சதவீத விவசாய நிலங்கள், 90 சதவீத நீர்நிலைகளை அழித்து இங்கு பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வர வேண்டும் என்ற முடிவை எடுக்கிற எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும்.

    இப்போது சமீபத்தில் நமது அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழக அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால் அதே நிலைப்பாட்டைத் தானே இங்கே நமது பரந்தூர் பிரச்சனையிலும் எடுத்திருக்க வேண்டும். எடுக்கணும்.

    எப்படி அரிட்டாபட்டி மக்கள் நம்ம மக்களோ அப்படித்தானே பரந்தூர் மக்களும் நம்ம மக்கள். அப்படித்தானே ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே. ஏன் செய்யவில்லை?

    ஏனென்றால் இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை நமது மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒருசில கேள்விகள்...

    நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள். அந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டையும் தானே இங்கும் எடுக்க வேண்டும். அது எப்படி நீங்கள் எதிர்க் கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இது எனக்கு புரியவில்லையே.

    அதனால் இனிமேலும் சொல்கிறேன். உங்கள் நாடகத்தை பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களோட வசதிக்காக அவர்களுடன் நிற்பதும், அவர்களுடன் நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதும் அது சரி.... நம்புவது போல் நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி ஆயிற்றே.

    அதையும் மீறி நமது விவசாயிகள் உங்களுக்கு எதிராக போராடினால் பிரச்சனைதான். அதனால் இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

    உங்களுடைய இந்த விமான நிலையத்துக்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடங்களை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சிதான் மக்களை முன்னேற்றும். ஆனால் வளர்ச்சி என்கிற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    • நாடகம் ஆடுவதில் கில்லாடிகள் தி.மு.க.வினர்.
    • விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:

    * நான் ஊருக்கும் வருவதற்கும், நமது த.வெ.க.வினர் நோட்டீஸ் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.

    * உங்களின் வசதிக்காக மக்களோடு இருப்பதை போன்று நம்பும் வகையில் நீங்கள் நடத்தும் நாடகத்தை பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

    * நாடகம் ஆடுவதில் கில்லாடிகள் தி.மு.க.வினர்.

    * மத்திய, மாநில அரசுகள் நடத்தும் நாடகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

    * விமான நிலையத்திற்கு வேறு இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

    * விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

    * நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை.

    * ஏர்போர்ட் கட்ட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இங்க வேணாம்னுதான் சொல்கிறேன்.

    * அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என முடிவெடுத்த தமிழக அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டாமென ஏன் சொல்லவில்லை.

    * பரந்தூர் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதாக அவர் கூறினார்.

    • நான் மாநில வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல.
    • உங்களுக்காக சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நானும், த.வெ.க.வினரும் உறுதுணையாக இருப்போம்.

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:

    * பரந்தூர் கிராமத்திலிருந்து தனது கள அரசியல் பயணத்தை தொடங்குகிறேன்.

    * வீட்டிற்கு பெரியவர்களை போல் நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள் விவசாயிகள்.

    * நான் மாநில வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.

    * உங்களுக்காக சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நானும், த.வெ.க.வினரும் உறுதுணையாக இருப்போம்.

    * வளர்ச்சி என்ற பெயரில் ஏற்படும் அழிவு மக்களை அதிகம் பாதிக்கும். பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

    * Confident ஆக இருங்கள், வெற்றி நிச்சயம் என்று அவர் பேசினார்.

    • உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு உங்களை சந்திக்க வந்தேன்.
    • ஓட்டு அரசியலுக்காக இயற்கை வள பாதுகாப்பு பற்றி நான் பேசவில்லை.

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

    போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:

    * உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு உங்களை சந்திக்க வந்தேன்.

    * கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு மனம் ஏதோ செய்தது. சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு பரந்தூர் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

    * பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு எனது முழு ஆதரவு உண்டு.

    * நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்.

    * ஓட்டு அரசியலுக்காக இயற்கை வள பாதுகாப்பு பற்றி நான் பேசவில்லை.

    * பரந்தூரில் 1000-க்கும் ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகளை அழித்து சென்னையை வெள்ளக்காடாக்கும் திட்டத்தை கைவிடுக.

    * விவசாயத்திற்கு எதிரான திட்டத்தில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன் என்று பேசினார்.

    • பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    காஞ்சிபுரம்:

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

    போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.

    இதையடுத்து பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த பொதுமக்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த பிறகே அவர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இந்நிலையில் திருமண மண்டபத்தின் வெளியே கேரவனில் நின்றபடியே போராட்ட குழுவினரை சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
    • பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

    இதையடுத்து போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும், பிற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போராட்ட குழுவினரை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.

    பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.

    பரந்தூரில் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவணங்கள் வைத்திருந்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த பொதுமக்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த பிறகே அவர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    • பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர்.
    • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வர வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2-வது பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்திடம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர். அதன்படி ஏகனாபுரம் மக்களை சந்திக்க விஜய்க்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் அனுமதி அளித்தார். இதையடுத்து விஜய் நாளை (20-ந்தேதி) பரந்தூர் சென்று ஏகனாபுரம் மக்களை சந்தித்து பேசுகிறார்.

    இதற்கிடையே பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர். போலீசார் அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் போராட்ட குழுவினரை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டத்தை கூட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்த நிலையில் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடம் இன்னும் முடிவாகவில்லை. ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் விஜய் மக்களை சந்திக்க போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் பொதுவெளியில் விஜய் பொதுமக்களை சந்திக்க அனுமதி அளித்தால் ஏராளமான கூட்டம் கூடி விடும். இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும். எனவே வீனஸ் கார்டன் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், விஜய் மக்களை சந்திக்க ஏற்பாடுகளை செய்யுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதனால் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக போலீசாருடன், போராட்ட குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடம் இன்று தேர்வு செய்யப்படுகிறது.

    • விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • அதிக கூட்டத்தைக் கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வர வேண்டும்.

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

    இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து பேச தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார். இதனால் விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

    பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க 2 இடங்களை ஒதுக்கியுள்ள காவல்துறை, 2 இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    மேலும், அதிக கூட்டத்தைக் கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்றும் கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

    ×