search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army Recruitment Camp"

    • 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.
    • அண்ணா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வரும் 13-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024-ம் ஆண்டிற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்காக, சென்னை, கடலூர், விழுப்புரம், வேலுார் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது. ஆள்சேர்ப்பு முகாமையொட்டி, அண்ணா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வரும் 13-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய முகாமில் பங்கேற்றவர்களுக்கு, தேர்வு நுழைவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ்கள், காவல்துறை நடத்தை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உடல் தகுதி திறன் பரிசோதிக்கப்பட்டது. அப்போது நடந்த ஓட்டப்பந்தயத்தில் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருந்த போது, 2 பேருக்கு திடீரென்று காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் நரியம்பாடி சேர்ந்தவர் மோகன் (வயது 20), வீராணங்கள் சங்கம் சேர்ந்த மோகன் குமார் (19) என தெரியவந்தது . தொடர்ந்து இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×