என் மலர்
காஞ்சிபுரம்
14 வயதில் மாயமானவர், 10 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபராக பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் ஒட்டியம்பாக்கம் சாலையில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் நமத்தோடு கிராமம்.
இவருக்கு குழந்தை இல்லாததால் தனது தம்பி விஸ்வநாதனின் மகனான சதாசிவம் (வயது 14) என்பவரை கடந்த 2008-ம் ஆண்டு ராமச்சந்திரன் தத்தெடுத்து, சென்னைக்கு அழைத்து வந்து வளர்த்தார்.
சதாசிவத்தை மேடவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்தார். 13-8-2008 அன்று பள்ளிக்கு சென்ற சதாசிவம், அதன்பிறகு மாயமானார். அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் சதாசிவம் கிடைக்காததால், பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார்.
பள்ளி சென்ற சதாசிவத்துக்கு, தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் மறந்தது. இதனால் வழிதவறி நின்ற அவரை சிலர் மீட்டு வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்தில் சேர்த்ததாக தெரிகிறது.
2010-ம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள அந்த தனியார் இல்லத்தின் கிளைக்கு சென்ற சதாசிவம், அங்கு தனியார் சோப் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தசாமி, தனக்கு குழந்தை இல்லாததால் சதா சிவத்தை வளர்ப்பதாக கூறி அவரை தன்னுடன் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து வளர்த்தார்.
தற்போது சதாசிவத்துக்கு 24 வயது ஆகிறது. சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.
சதாசிவத்துக்கு, திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த லோகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பரானார். அப்போது சதா சிவம், தனக்கு தலையில் அடிபட்டதால் பெற்றோர் பற்றி நினைவுக்கு வரவில்லை. அவர்களை கண்டுபிடிக்க உதவும்படி நண்பர் லோகேசிடம் கேட்டார்.
இருவரும் வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கிருந்த சதாசிவத்தின் வங்கி கணக்கு புத்தகத்துக்கு கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அதில் அவரது பள்ளி அடையாள அட்டை நகல் இருந்தது. அதில் அவரது தந்தை பெயர் ராமச்சந்திரன் எனவும், சித்தாலபாக்கம் எனவும் இருந்தது.
இதையடுத்து இருவரும் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜிடம் நடந்த விவரங்களை கூறி, பெற்றோரை கண்டுபிடிக்க உதவும்படி கேட்டனர்.
பரங்கிலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் போலீசார் விசாரித்தபோது, 2008-ம் ஆண்டு சதாசிவம் மாயமானதாக ராமச்சந்திரன் புகார் மனு அளித்து இருப்பது தெரிந்தது. அதில் இருந்த முகவரியை வைத்து சித்தாலபாக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர், 2008-ம் ஆண்டு மாயமானது தனது தம்பி விஸ்வநாதனின் மகன் சதாசிவம் என தெரிவித்தார். இதையடுத்து 14 வயதில் மாயமான சிறுவன், தற்போது 24 வயது வாலிபராக பெற்றோரை தேடி போலீஸ் நிலையம் வந்திருப்பதாக தெரிவித்தனர்.
அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ராமச்சந்திரன், இதுபற்றி திருவண்ணாமலையில் உள்ள தனது தம்பி விஸ்வநாதனுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக விஸ்வநாதன், தனது மனைவி அன்னலட்சுமி மற்றும் குடும்பத்துடன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் வந்தார். மாயமான தங்கள் மகன், 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்களை தேடி வந்து இருப்பதை கண்டதும், அவரை கண்ணீருடன் கட்டித்தழுவி முத்தமிட்டனர்.
பின்னர் பெற்றோருடன், சதாசிவத்தை போலீசார் அனுப்பி வைத்தனர். தனது பெற்றோருடன் சேர உதவிய போலீசாருக்கும், நண்பர் லோகேசுக்கும் சதாசிவம் மற்றும் அவரது பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ரூ. 92 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த பெருமாள் என்பவரின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.87 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இலங்கை செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கஜனாவ் என்வரிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான யூரோ கரன்சி சிக்கியது.
2 பேரிடமும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் ஹவாலா பணமா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ள டி.வி.எஸ். குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேஷ் (35). இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கச்சிப்பட்டு பகுதியில் வந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே வெங்கடேஷ் இறந்து போனார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மண்எண்ணெய் குடித்த 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த நெல்வாய் காலனியை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 2 வயதில் பெட்டிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.
இவர்கள், உத்திரமேரூரை அடுத்த பென்னலூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக அங்குள்ள தங்கள் உறவினர் செந்தில்குமார் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் வைத்து இருந்தனர்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பெட்டிஷா, தவறுதலாக அந்த பாட்டிலை திறந்து அதில் இருந்த மண்எண்ணெய்யை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை பெட்டிஷாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பெட்டிஷா பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
திருப்போரூர்:
திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று காலை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழா நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.
திருச்சி முக்கொம்பு அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நன்றாக இருந்தது. அணை உடைந்தது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் சென்றுள்ளார். அவர் ஆய்வு செய்து விளக்கம் அளிப்பார்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வை வலுப்படுத்த முடியும்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கோவிலில் இருந்து காரில் புறப்பட்டார். கண்ணகப்பட்டு சென்றபோது கட்சி பிரமுகர் ஒருவரது டீக்கடைக்கு சென்றார். அங்கு அமர்ந்து டீ குடித்தார். அப்போது டீ நன்றாக உள்ளதாக பாராட்டினார்.
உடன் எம்.பி.க்கள் மைத்ரேயன், மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
முன்னதாக திருப்போரூர் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணகப்பட்டு மற்றும் கோவில் குளம் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #ADMK #OPanneerSelvam
திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று காலை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழா நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.
திருச்சி முக்கொம்பு அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நன்றாக இருந்தது. அணை உடைந்தது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் சென்றுள்ளார். அவர் ஆய்வு செய்து விளக்கம் அளிப்பார்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வை வலுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

உடன் எம்.பி.க்கள் மைத்ரேயன், மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
முன்னதாக திருப்போரூர் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணகப்பட்டு மற்றும் கோவில் குளம் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #ADMK #OPanneerSelvam
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பிளாட் பாரத்தின் மேற்கூரையை அகற்றும்போது ஊழியர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆலுந்தூர்:
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் படிக்கட்டில் தொங்கியபடி ரெயில் பயணம் செய்த 5 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். இதற்கு காரணமான தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
அதற்கு சாத்தியம் இல்லாததால், விபத்தில் நடந்த பரங்கிமலை ரெயில் நிலைய 4-வது பிளாட் பாரத்தை 3 அடி தூரம் நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக பிளாட் பாரத்தின் மேற்கூரையை அகற்றும் போது சுமேஷ் (30) என்ற ஊழியர் தவறிவிழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள மூலஸ்தம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் வாழ்முனி தம்பதியர் மூலஸ்தம்மன் கோவிலை அமைத்தனர்.
திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மன் அருளால் நிறைவேறிய நிலையில் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலும் கோவிலின் புகழ் பரவ தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் கோவிலை கட்டிய வாழ்முனியின் பேரனும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அதிமுக பிரதிநிதியுமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் கோவிலை மறு நிர்மாணம் செய்தார்.
கடந்த 2 நாட்களாக கணபதி ஹோமம் தொடங்கியாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் கோவிலின் விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் ஓத வாண வேடிக்கைகள் முழங்க சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்.
கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் இரவு நடைபெற்ற அம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மைத்ரேயன் எம்பி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.கே.எம். சின்னையா, அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மனோஜ்பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், வழக்கறிஞர் முத்தியால்பேட்டை ஆர்.வி.உதயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிமுக மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்திருந்தார்.
நிகழ்ச்சியினை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஜோதியம்மாள் தொடங்கிவைத்தார்.

மாமல்லபுரம் கடற்கரையில் விதிமுறையை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு மணல் பரப்பு அழிக்கப்பட்டு வருவதால் பேரூராட்சி செயல் அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மீனவர்களின் வீடுகள் மட்டுமே இருந்தன. தற்போது அப்பகுதியில் விடுதி, உணவகம், பார், சர்பிங், யோகா, சூரிய குளியல் என உல்லாச பகுதியாக மாறியுள்ளது.
கடற்கரை ஒழுங்காற்று மேலான்மை விதிகளின்படி கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்குள் கட்டிடம் கட்ட தடை இருந்தும் தற்போது கடற்கரையை ஒட்டிய மணல்வெளியில் ஓய்வு காட்டன், கார்பார்க், சீ பாஸ்ட்புட், சீகுடில் என விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் மணல் பரப்பு சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலை தொடரும் பட்சத்தில் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளடைவில் குறைந்து சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவாய் குறையும் வாய்ப்பு உள்ளது.
இதனை மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுவாஞ்சேரியில் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரி, ரெயில்வே சாலையில் வசித்து வந்தவர் கலைவாணன்.
தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைவாணனுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.
இதனால் அவர் மன வேதனையில் இருந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் கலைவாணனுக்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரித்ததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலைவாணன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மதுக்கடையை திறக்க அனுமதிக்க கூடாது என்று மனு கொடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் நாவலூர் கிராமம் ஓ.எம்.ஆர். ராஜீவ் காந்தி சாலையில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மதுக்கடையை திறக்க அனுமதிக்க கூடாது என்று மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
நாவலூர் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்திருந்த மதுபானக்கடையை அரசின் ஆணைப்படி 220 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டிய கடை 50 மீட்டர் துரத்தில் இருந்ததால் மூடப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் 60 மீட்டர் தொலைவில் கொண்டு வருகிறார்கள்.
மதுக்கடை திறக்க உள்ள பகுதியில் ஐ.டி. கம்பெனி உள்ளது. அதில் பெண்கள் வேலை செய்து விட்டு வெளியே வருவதற்கு பயப்படுகிறார்கள். மேலும் சுங்க சாவடியும் அங்கு இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
எனவே அங்கு மதுபானக்கடையை திறக்க அனுமதித்க கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலூர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் நிர்வாகிகள் முனுசாமி, கீதா, மற்றும் கிராம மக்கள் கூட்டமாக சென்று மனுவை கொடுத்தனர்.
மேலும் நாவலூரில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என பொது நல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

திருநீர்மலை அடிவாரத்தில் குப்பை, கழிவுநீர் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி 3 வாலிபர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் திருநீர் மலையின் அடிவாரப் பகுதியில் குப்பைகள், கழிவுநீர் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மலையடிவாரத்தில் கழிவுநீர், குப்பைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து குப்பைகள், கழிவுநீர் அங்கு கொட்டப்பட்டு வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அதே பகுதி திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்த விக்கி, பிரபாகர், தீனா ஆகிய 3 பேர் இன்று காலை திடீரென தெற்கு மாட வீதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
திருநீர்மலை அடிவாரத்தில் குப்பை - கழிவுநீர் கொட்டக்கூடாது என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சங்கர்நகர் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர். அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

திருவான்மியூரில் போதை மாத்திரை மற்றும் பவுடரை விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருவான்மியூர்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை, போதை பவுடர் பயன்படுத்தப்படுவதாகவும், கல்லூரி மாணவர்கள் பலருக்கும் போதை மாத்திரை சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அடையாறு துணை கமிஷனர் சஷாங் சாய் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது திருவான்மியூர் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் உத்தரபிரதேச மாநித்தை சேர்ந்த நிகில் திவாரி என்பதும், சென்னையில் பல்வேறு இடங்களில் போதைபொருள் சப்ளை செய்து வந்ததும் தெரிந்தது.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 5 விதமான போதை மாத்திரை, போதை பவுடர், போதை பேப்பர் உள்ளிட்டவை இருந்தன. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.
நிகில் திவாரி இவற்றை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வாங்கி சப்ளை செய்துள்ளார். அவர் வைத்திருந்த ஒருவகை போதை பேப்பரை நாக்கில் வைத்தால் போதை அதிகரிக்கும். இதனை பயன்படுத்துபவர்களுக்கு சுமார் 5 மணி நேரம் வரை போதை நீடிக்கும்.
இதனால் நிகில் திவாரியிடம் போதை மாத்திரைகளை வாங்குவதற்கு தனி கூட்டமே இருந்துள்ளது. அதிக அளவில் கல்லூரி மாணவர்களுக்கு அவர் சப்ளை செய்து இருக்கிறார்.
போதை பொருட்களை அவர் கடந்த 7 மாதமாக சென்னையில் சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
அவரிடம் போதை மாத்திரைகளை வாங்கியவர்கள் யார்? வெளிநாட்டில் இருந்து எப்படி வருகிறது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.