என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பழமையான 100 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #Idols #RanveerShah #PonManickavel
    மேல்மருவத்தூர்:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த வாரம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு குவியல் குவியலாக பழமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள், பிரமாண்டமான சாமி சிலைகள் உள்ளிட்டவை இருந்தது. மொத்தம் 91 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

    இவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக எங்கெல்லாம் வீடுகள், பங்களாக்கள் உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் திருவாரூர் மற்றும் திருவையாறில் அவருக்கு 2 அரண்மனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் சோதனை நடத்தி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் பண்ணை வீடுகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் 3-வது முறையாக இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையிலும் ஏராளமான சிலைகள் சிக்கி உள்ளது மேலும் பர பரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

    மேல்மருவத்தூரை அடுத்த ராமாவரம் அருகே உள்ள மோகல்வாடி கிராமத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் போலீஸ் படையுடன் புகுந்தார்.

    அங்கு ஏராளமான அறைகள் இருந்தன. அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சைதாப்பேட்டை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போல பழமை வாய்ந்த கற்சிலைகள் இருந்தன.

    பண்ணை வீடு முழுவதும் 89 சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகளை கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்புடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இந்த சிலைகளையும் வைத்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.


    மேல்மருவத்தூர் வீட்டில் மதியம் 12.45 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. அதன் பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் படப்பை வீட்டுக்கு சென்று சோதனை நடத்துகிறார்.

    படப்பையில் உள்ள வீட்டில் ரன்வீர்ஷா சிலைகளை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு நடத்தப்படும் சோதனை நிறைவடைந்த பின்னரே எத்தனை சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

    ரன்வீர்ஷாவின் பின்னணியில் யார்-யார்? உள்ளனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதே போல கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் ஆசாமி ஒருவரும் ரன்வீர்ஷாவுக்கு சிலைகளை விற்றுள்ளார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சைதாப்பேட்டை வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவை திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டவை என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளும் அந்த பகுதியைச் சேர்ந்த கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டதா? இல்லை வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    எனவே ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருக்கும் அனைவரும் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idols #RanveerShah #PonManickavel
    சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.60 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    இன்று காலை சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது, வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சா வழி பயணி ஒருவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதற்குரிய முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

    எனவே அந்த அமெரிக்க டாலர் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
    சோழிங்கநல்லூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மகனை கண்டுபிடித்து தர கோரி அவரது பெற்றோர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சூளைமாநகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் (57). இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கார்த்தி.

    5 வருடத்திற்கு முன்பு கார்த்தி படூரில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கார்த்திக் கல்லூரிக்கு செல்லாமல் வெளியே சுற்றி வந்ததை கண்டு தந்தை கண்டித்தார். இதனால் கார்த்திக் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.

    இது தொடர்பாக 26.10.2013 அன்று துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பாண்டியன் புகார் கொடுத்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    இதுபற்றி பாண்டியன் போலீஸ் நிலையத்திற்கு அடிக்கடி சென்று கேட்டு வந்தார். அப்போது போலீசார் அலட்சியமாக பேசி அனுப்பியதாக தெரிகிறது.

    இதுகுறித்து பாண்டியன் சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கும், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கும் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே காணாமல் போன மகனை போலீசார் கண்டுபிடிக்கும் வரை பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். #tamilnews
    தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்- சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில் விட ஒப்புதல் அளித்தது. அதன்படி இன்று காலை முதல் புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு பணி நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் சென்று வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் வண்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கூடுதல் ரெயில் சேவை குறித்து காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவர் தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து காஞ்சீபுரம் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரெயில்களை இயக்க கோரிக்கை விடுத்து வந்தார்.

    இந்த நிலையில் தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்- சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில் விட ஒப்புதல் அளித்தது. இன்று காலை முதல் புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டது. காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சீபுரத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரை இந்த ரெயில் செல்கிறது.

    இதே போல சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.40-க்கு புறப்பட்டு காஞ்சீபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் மற்றும் பெண் பலியானார்.
    மாமல்லபுரம்:

    திருப்போரூரை அடுத்த மயிலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). இவர் உறவினரான செங்கல்பட்டு அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த லாவண்யாவுடன் (25) கோவளம் அடுத்த தெற்குப்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு 8மணியளவில் அவர்கள் தெற்குபட்டு கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தியும், லாவண்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
    மலேசியா-ஏமனில் இருந்து சென்னை விமானத்தில் ரூ.25 லட்சம் தங்கம் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். #ChenniAirport

    ஆலந்தூர்:

    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது சென்னையை சேர்ந்த தங்கையா (52) என்பவரிடம் நிறைய ரீபிள் பேனாக்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    எனவே அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த பேனாக்களின் ரீபிள்கள் அனைத்தும் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது கண்டு பிடிக்ககப்பட்டது. எனவே அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த எடை 200 கிராம்.

    ஏமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இன்று அதிகாலை வந்த விமான பயணிகளிடம் சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவராஜ் (32) என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது.

    அவர் தனது உள்ளாடைக்குள் ரப்பர் ஸ்பாஞ்சுக்களை மறைத்து வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை பிரித்து பார்த்த போது தங்கத்தை உருக்கி சிறு கட்டிகளாக மாற்றி எடுத்து வந்தது தெரிய வந்தது.

    எனவே அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 600 கிராம். நேற்றும், இன்றும் நடந்த சோதனைகளில் 850 கிராம் தங்கம் கைப்பற்றப் பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.25.5 லட்சம், தங்கம் கடத்திய தங்கையா, சிவராஜ், ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூரில் 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #robbery

    போரூர்:

    போரூர் ராமமூர்த்தி அவென்யூ சக்தி நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவரது வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதுபற்றி பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 16 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இதேபோல் அதே பகுதி கணேஷ் அவென்யூவில் பூட்டிக் கிடந்த சதாசிவம் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் 4 பவுன், பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர். இது குறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #robbery

    பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் போலி ஆவணம் கொடுத்து வேலையில் சேர முயற்சி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    ஆலந்தூர்:

    பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்துக்கு, ஒரு வாலிபர் நேற்று வந்தார்.

    உயர் அதிகாரியை சந்தித்த அவர், தனக்கு அங்கு தோட்ட பணியாளர் வேலை கிடைத்து இருப்பதாகவும் அதற்கான உத்தரவு வந்திருப்பதாகவும் கூறினார். அதற்கான நியமன ஆணை ஆவணத்தையும் கொடுத்தார்.

    அதிகாரி அதை ஆய்வு செய்தார். அப்போது, அது போலி ஆவணம் என்பது தெரிய வந்தது. இது குறித்து ராணுவ பயிற்சி மைய உயர் அதிகாரி ராஜேந்திரசிங் பரங்கிமலை போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் விசாரணை நடத்தினார். அப்போது, போலி ஆவணம் கொடுத்து வேலைக்கு சேர முயன்ற வாலிபர் பெயர் அருண்குமார் (23). அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து, அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏஜெண்டு ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு அருண்குமாருக்கு இந்த போலி உத்தரவை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கைதான வாலிபர் அருண்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போலி உத்தரவை கொடுத்த ஏஜெண்டு யார் என்பது குறித்து விசாரணை நடை பெறுகிறது.

    இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படலாம் என்று கூறப்படுகிறது. பணம் வாங்கிக் கொண்டு போலி ஆவணம் கொடுத்த ஏஜெண்டு விரைவில் பிடி படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கீழ்கட்டளையில் ஓய்வு பெற்ற ஆசிரியை கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    ஆலந்தூர்:

    கீழ்கட்டளை அம்பாள் நகரை சேர்ந்தவர் நேபில் (75). ஓய்வு பெற்ற ஆசிரியை திருமணம் ஆகாதவர். இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள நாய்களுக்கு தினமும் பிஸ்கெட் போடுவது வழக்கம்.

    நேற்றும் நாய்களுக்கு பிஸ்கெட் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த கார் நேபில் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து பரங்கிமலை போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப் பதிவு செய்தார். கார் டிரைவர் பெயர் அன்பழகன். அரியலூரை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #accident

    திருப்போரூர் முருகன் கோவிலில் சிலை திருட்டு போனதாக அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் முருகன் கோவில் 17-ம் நூற்றாண்டில் சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்டு மிகவும் பிரசித்திபெற்றது.

    இந்த கோவிலில் உள்ள மூலவருக்கு பின்புறம் உள்ள உள்பிரகாரத்தில் சோமாஸ் கந்தர் சிலை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஆடலரசு என்ற பக்தர் இந்து சமயஅற நிலையத்துறை ஆணையரிடம் சோமாஸ்கந்தர் சிலையில் நடுவில் உள்ள சிறிய கந்தன் சிலையை காணவில்லை என புகார் கொடுத்தார்.

    இந்த நிலையில் 2017 ஜூன் மாதம் திடீரென நடுவில் உள்ள கந்தனோடு சேர்ந்த சிலை புதிதாக வைக்கப்பட்டதாக தெரிகிறது. இது பழமையான சிலையா? அல்லது புதிய சிலையா? என பக்தர்களிடையே குழப்பம் இருந்தது.

    இதற்கிடையில் கடந்த 13-ந் தேதி சென்னை தி.நகரைச் சேர்ந்த வக்கீல் ஸ்ரீதரன் என்பவர் சோமாஸ்கந்தர் சிலையில் உள்ள கந்தன்சிலை பழையகந்தன் சிலை இல்லை. சிலை மாயமாகிஉள்ளது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

    அவர் இந்த புகாரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பினார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருப்போரூர் போலீசார் சிலை மாயம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதனால் பக்தர்களிடையே கோயில் உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ் கந்தரின் சிலையின் நடுவில் உள்ள கந்தன் சிலை பழமை வாய்ந்த சிலையா? அல்லது புதிதாக செய்து வைக்கப்பட்டுள்ள சிலையா? என மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிலை மாயம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் உண்மையில் பழமை வாய்ந்த சிலை தானா? என்பது பற்றி சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.

    கல்பாக்கம் பகுதியில் பல வீடுகளில் கொள்ளையடித்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களில் பல வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் உள்ள அணுமின் நிலைய அதிகாரிகளின் குடியிருப்பு பகுதிகளிலும் கொள்ளை நடந்தது. இதுகுறித்து அணுமின் நிலைய உயர் அதிகாரிகள் புகார் செய்தனர். இதை ஏற்ற காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தனிப்படை அமைத்தார்.

    பள்ளிக்கரணை போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் துப்பு துலங்கியது.

    இதில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சதீஷ் (22), சரத்குமார் (19), சரவணன் (21), விக்னேஷ்வர் (22) ஆகிய 4 பேரை பிடித்தனர். இவர்கள் கல்பாக்கம் அடுத்த கரியச்சேரி ரவி என்பவர் வீட்டில் கடந்த வாரம் கொள்ளையடித்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை சதுரங்கபட்டினம் போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காஞ்சீபுரத்தில் தொழிலதிபரை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் பசூல் ரகுமானை நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ரூ.50 லட்சம் கேட்டு காரில் கடத்தி சென்றனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவரை திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் பகுதியில் அவரை சாலை ஓரத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

    தப்பிய கடத்தல்காரர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தலைமையில் காஞ்சிபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன், சின்ன காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் துறையினரை ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் காஞ்சீபுரம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ×