என் மலர்
நீங்கள் தேடியது "Chennai airport gold kidnapping"
ஆலந்தூர்:
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையை சேர்ந்த தங்கையா (52) என்பவரிடம் நிறைய ரீபிள் பேனாக்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
எனவே அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த பேனாக்களின் ரீபிள்கள் அனைத்தும் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது கண்டு பிடிக்ககப்பட்டது. எனவே அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த எடை 200 கிராம்.
ஏமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இன்று அதிகாலை வந்த விமான பயணிகளிடம் சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவராஜ் (32) என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அவர் தனது உள்ளாடைக்குள் ரப்பர் ஸ்பாஞ்சுக்களை மறைத்து வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை பிரித்து பார்த்த போது தங்கத்தை உருக்கி சிறு கட்டிகளாக மாற்றி எடுத்து வந்தது தெரிய வந்தது.
எனவே அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 600 கிராம். நேற்றும், இன்றும் நடந்த சோதனைகளில் 850 கிராம் தங்கம் கைப்பற்றப் பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.25.5 லட்சம், தங்கம் கடத்திய தங்கையா, சிவராஜ், ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






