search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son missing"

    கோபி அருகே 5 வயது மகனுடன் தாய் மாயமானார். கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    கோபி:

    கோபியை அடுத்த பெளவகாளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி சத்யா (வயது25). இவர்களுக்கு கவின் ஆகாஷ் (5) என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சத்யா அங்குள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் சத்யா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யாவை வெங்கடாசலபதி கண்டித்தார்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வெங்கடாசலபதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது மனைவி சத்யா, மகன் கவின் ஆகாஷ் ஆகியோர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியையும் மகனையும் பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து வெங்கடாசலபதி கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மனைவி மற்றும் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார்.

    அதன்பேரில் கோபி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சத்யா, கவின் ஆகாஷ் இருவரையும் தேடி வருகின்றனர். 

    திருவாரூரில் ஊராட்சி ஒன்றிய எழுத்தரின் மகன் திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    நாகை மாவட்டம் கீழபனையூரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் புத்தகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரிவசந்த் (வயது 13).இவர் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அரிவசந்த் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமான பிறகும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் பெற்றோர் மாணவர் அரிவசந்தை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி சசிகுமார் திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருவாரூரில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது பிர்காலயா ரோடு பகுதியில் ஒரு பெண் அரிவசந்த்தை அழைத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போது அந்த பெண் வழி தெரியாமல் தவித்த அரிவசந்தை அழைத்து சென்று பஸ் நிலையத்தில் விட்டு சென்றதாக தெரிவித்தார்.

    எனவே பஸ் நிலையத்தில் இருந்து மாணவரை மர்ம நபர்கள் கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றிய புகாரின் பேரில் திருவாரூர் டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர் அரிவசந்த் பள்ளி காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்று இருந்ததும், இது தொடர்பாக தந்தையிடம் கையெழுத்து வாங்கி வர பள்ளி ஆசிரியர் கூறியிருந்ததும் தெரியவந்தது.

    எனவே மதிப்பெண் குறைவாக வாங்கியதால் பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என்று கருதி மாணவர் தலைமறைவாகி விட்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாணவர் படித்த பள்ளிக்கு அருகில் அவரது பெற்றோர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதாகவும், ஆனால் வீட்டுக்கு செல்லாமல் மாணவர் மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. திருவாரூரில் மாணவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சோழிங்கநல்லூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மகனை கண்டுபிடித்து தர கோரி அவரது பெற்றோர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சூளைமாநகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் (57). இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கார்த்தி.

    5 வருடத்திற்கு முன்பு கார்த்தி படூரில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கார்த்திக் கல்லூரிக்கு செல்லாமல் வெளியே சுற்றி வந்ததை கண்டு தந்தை கண்டித்தார். இதனால் கார்த்திக் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.

    இது தொடர்பாக 26.10.2013 அன்று துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பாண்டியன் புகார் கொடுத்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    இதுபற்றி பாண்டியன் போலீஸ் நிலையத்திற்கு அடிக்கடி சென்று கேட்டு வந்தார். அப்போது போலீசார் அலட்சியமாக பேசி அனுப்பியதாக தெரிகிறது.

    இதுகுறித்து பாண்டியன் சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கும், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கும் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே காணாமல் போன மகனை போலீசார் கண்டுபிடிக்கும் வரை பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். #tamilnews
    ×