என் மலர்

  செய்திகள்

  திருவாரூரில் ஊராட்சி ஒன்றிய எழுத்தரின் மகன் திடீர் மாயம்
  X

  திருவாரூரில் ஊராட்சி ஒன்றிய எழுத்தரின் மகன் திடீர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூரில் ஊராட்சி ஒன்றிய எழுத்தரின் மகன் திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  திருவாரூர்:

  நாகை மாவட்டம் கீழபனையூரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் புத்தகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரிவசந்த் (வயது 13).இவர் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இந்த நிலையில் அரிவசந்த் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமான பிறகும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் பெற்றோர் மாணவர் அரிவசந்தை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி சசிகுமார் திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருவாரூரில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது பிர்காலயா ரோடு பகுதியில் ஒரு பெண் அரிவசந்த்தை அழைத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போது அந்த பெண் வழி தெரியாமல் தவித்த அரிவசந்தை அழைத்து சென்று பஸ் நிலையத்தில் விட்டு சென்றதாக தெரிவித்தார்.

  எனவே பஸ் நிலையத்தில் இருந்து மாணவரை மர்ம நபர்கள் கடத்தி சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றிய புகாரின் பேரில் திருவாரூர் டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர் அரிவசந்த் பள்ளி காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்று இருந்ததும், இது தொடர்பாக தந்தையிடம் கையெழுத்து வாங்கி வர பள்ளி ஆசிரியர் கூறியிருந்ததும் தெரியவந்தது.

  எனவே மதிப்பெண் குறைவாக வாங்கியதால் பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என்று கருதி மாணவர் தலைமறைவாகி விட்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  மாணவர் படித்த பள்ளிக்கு அருகில் அவரது பெற்றோர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதாகவும், ஆனால் வீட்டுக்கு செல்லாமல் மாணவர் மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. திருவாரூரில் மாணவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×