என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை விமான நிலையத்தில் பள்ளி முதல்வரின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது உத்திரமேரூரை அடுத்த கருங்சோழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் பீட்டர் (வயது 42) என்பவர் அந்த விமானத்தில் செல்ல வந்தார். அவரது கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஸ்கேனிங்’ செய்தபோது அதில் வெடிபொருள் இருப்பதாக அலாரம் ஒலித்தது.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள், அவரது கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் 9 எம்.எம். அளவு கொண்ட துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது. இதையடுத்து செல்வராஜ் பீட்டரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜ் பீட்டர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருவது தெரிந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த மாணவா்களை சோதனை செய்தபோது ஒரு மாணவனின் பையில் இருந்து அந்த துப்பாக்கி தோட்டாவை கண்டுபிடித்ததாகவும், அதை தனது பையில் போட்டு வைத்திருந்ததாகவும், தவறுதலாக அந்த பையை எடுத்து வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பள்ளி முதல்வரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக வழங்க வலியுறுத்தி காஞ்சீபுரம், காக்களூரில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதிகப்படியான நேரம் வேலை வாங்காமல் 8 மணி நேரம் வேலை மற்றும் முறையான வார விடுமுறை அளிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓரிக்கையில் உள்ள காஞ்சீபுரம் மாவட்ட மேலாளர் அலுவலகம் எதிரே டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அரசு தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் போராட்டத்தின்போது மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அரசு உடனடியாக தலையிடவில்லை என்றால் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் தாமோதரன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பிரகாஷ்பாபு, பஞ்சாட்சரம், மோசஸ், சேகர், முரளி, சத்யா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ. என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டாஸ்மார்க் தொழிலாளர்கள் நலன் கருதி விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பெய்த மழையிலும் டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சக்கரத்தில் சிக்கி, சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி பலியானார்.
தாம்பரம்:
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர்குமார் (வயது 35). தனியார் கார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மோனிஷா (29). இவர், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 165-வது பிரிவு ஆதம்பாக்கம் சுகாதார அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை மோனிஷா, தன்னுடன் பணிபுரியும் சுகாதார ஆய்வாளரான மணிகண்டன் (33) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
புதுபெருங்களத்தூரில் ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது வலதுபுறம் பஸ் வந்ததால் இடதுபுறத்தில் ஓரமாகச் செல்ல தன் இருசக்கர வாகனத்தை மணிகண்டன் திருப்ப முயன்றார்.
அப்போது அவர்களுக்கு பின்னால் படாளத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி கியாஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரி, இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய மோனிஷா, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மணிகண்டனுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவும், முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நாகப்பட்டினம் மாவட்டம், அம்மன் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயத்தை சீரழிக்கும் 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 52). இவர் தாமலில் உள்ள மின்சாரத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒலிமுகமதுப்பேட்டையில் இருந்து திம்மசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த ஏரிவாக்கம் பகுதியில் கருணாகரன் சென்றபோது எதிரே வந்த ஒரு வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கருணாகரன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.42½ லட்சம் மதிப்புள்ள 890 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அந்த விமானத்தில் வந்த சென்னையைச்சோ்ந்த முகமது (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவுமில்லை.
பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு சிறப்பு விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த ராசிக்அலி ஹாஜாமைதீன் (45) என்பவரை சந்தேகத்தின்பேரில் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள 530 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 890 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நடுவீரப்பட்டு ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் என்கிற பாபு (வயது 20). இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் கடந்த 30-ந்தேதி சோமங்கலம் அடுத்த தர்காஸ் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அபிஷேக்கை வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் ராஜகோபால் கண்டிகையை சேர்ந்த சச்சின் (20), ராஜ்குமார் (19), பம்மல் பகுதியை சேர்ந்த மதன் (20) ஆகியோர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
படப்பை அருகே வாலிபரை வெட்டியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23). இவருடைய சகோதரியின் திருமணம் கடந்த மாதம் 27-ந் தேதி சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்து கொண்ட கரசங்கால் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம், பிரதாப் மற்றும் அசோக்குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திருமணம் முடிந்து அசோக்குமார் தனது சகோதரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கரசங்கால் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார்.
விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரியாணி எடுத்து கொண்டு அசோக்குமார் அந்த பகுதியில் உள்ள நண்பர்களுக்கு கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கரசங்கால் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் நித்தியானந்தம் (20), புருஷோத்தமன் (20), படப்பை தமிழ்ச்செல்வன் (20), குழங்கலச்சேரி ஜெயசூர்யா (21) கரசங்கால் கார்த்திக் (30) ஆகியோர் அசோக்குமாரை வழிமறித்து ஏற்கனவே திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற கைகலப்பு சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அசோக்குமாரை கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து அனைவரும் தப்பிச்சென்று விட்டனர்.
வெட்டுபட்ட நிலையில் கிடந்த அசோக்குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, சிறுவர்கள் இருவரை சீர்திருத்த பள்ளிக்கும் 5 பேரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரதாப்பை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதியதாக பதவியேற்ற மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட முதுகுத்தண்டுவடம் பாதித்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய நாற்காலிகளை வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதன்பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) யோகலட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதியதாக பதவியேற்ற மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட முதுகுத்தண்டுவடம் பாதித்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய நாற்காலிகளை வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதன்பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) யோகலட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரத்தில் இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், அரசன்குப்பம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி லட்சுமி (வயது 30), லோகநாதன் மனைவி லட்சுமியுடன் செங்கல்பட்டு மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சீபுரத்தை அடுத்த நெல்வாய் ஜங்ஷன் என்ற இடத்தில் இவர்கள் வந்தபோது திடீரென ஒரு மாடு குறுக்கே வந்ததால் லோகநாதன் திடீரென்று பிரேக் பிடித்தார். இதில் நிலைதடுமாறிய லட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு பரந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து லோகநாதன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உதயத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் செல்வக்குமார் (27). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (26) என்பவருடன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஆம்னி பஸ் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வக்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பரான மணிமாறன் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோட முயன்ற ஆம்னி பஸ் டிரைவரை சுங்கச்சாவடியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வேளிங்கபட்டரையை சேர்ந்தவர் பாபு. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டில் விட்டு விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாபு காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மைனர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இன்ஸ்பெக்டர் மைனர் சாமி, குற்றப்பிரிவு ஏட்டுகள் சரவணன், முரளி, ராமச்சந்திரன் ஆகியோர் காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். உடனே போலீசார் அவர்களை சைகை காட்டி நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையொட்டி அவர்கள் 2 பேரை பிடித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பாபுவின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையொட்டி காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த ஈசா என்கிற ஈஸ்வரன் (வயது 23), முத்தியால்பேட்டையை சேர்ந்த சங்கர் (24) ஆகியோரை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.
துபாயில் இருந்து சென்னை விமானநிலையம் வந்திறங்கிய சிறப்பு விமான நிலையத்தில் கடத்தப்பட்ட ரூ.10½ லட்சம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்திறங்கும் விமானங்களில் ரகசியமாக தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த சாகுல் அமீது (வயது 44) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் கிடைக்காததால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவரது உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்திருந்த 230 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாகுல் அமீதிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






