search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டில் சரண்"

    • கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
    • முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். 

    இவர்கள் கடந்த 10-ந்தேதி மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். மோட்டார் சைக்களில் சென்ற இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர். 

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலவ், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் முடிவு செய்தனர்.   சென்னை அம்பத்தூர் கோர்ட்டில் இருந்து அலுவலர் சார்ந்த தகவல் கடந்த 16-ந்தேதி வானூர் போலீசாருக்கு வந்தது. உடனடியாக வானூர் போலீசார் சென்னைக்கு விரைந்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முகிலன் மற்றும் 5 பேரை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்து முகிலனிடம் வானூர் போலீசார் விசாரணை நடத்தினால் மட்டுமே இக்கொலைக்கான காரணம் தெரியவரும் என தெரிகிறது.

    • ஆவேசத்துடன் சங்கரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டில் உள்ளே இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய கரியன் என்கிற முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் இன்று மதியம் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான்கொட்டாயை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சரண்யா (21). ஜெகனும், சரண்யாவும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜெகனை திருமணம் செய்தார். இந்த நிலையில் ஜெகனை நேற்று முன்தினம் அவரது மாமனார் சங்கர் (43) உள்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கவுரவக்கொலை செய்தனர். இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முழுக்கான்கொட்டாயில் உள்ள சங்கரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஜெகனின் உறவினர்கள் சென்றனர். அவர்கள் ஆவேசத்துடன் சங்கரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டில் உள்ளே இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார் ஜெகனை கொலை செய்த வழக்கில் தலைமறைவான குற்றவாளிகள் 2 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கரியன் என்கிற முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் இன்று மதியம் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    • 15 நாள் ஜெயலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    • மரக்காணத்தில் நடந்த கொலையில் திருப்பம்

    ராணிப்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம், மரக் காணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 22 - ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த அபி என்கிற அபினேஷ் (வயது 22) என்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர் இந்தநிலையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விஜய் (25), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிர காஷ் (21), காஞ்சீபுரம் பகு தியை சேர்ந்த சஞ்சய் (19), திருநெல்வேலியை சேர்ந்த வைரமணி (22) ஆகிய 4 பேர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற் றும் குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி நவீன் துரைபாபு முன்பு சரண் அடைந்தனர்.

    அவர்கள் 4 பேரையும் 15 நாள் வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    ×