search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் கொலை"

    • கல்லூரி விடுதியில் கல்யாண் என்ற மாணவரின் பிறந்த நாளை நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நவதித் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.
    • நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் நவதித் படுகாயம் அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ரெயில்வே கோடுர் பகுதியை சேர்ந்தவர் அரி நாராயணா. இவரது மகன் நவதித் (வயது 18).

    இவர் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் கல்யாண் என்ற மாணவரின் பிறந்த நாளை நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நவதித் அவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.

    அப்போது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் நவதித் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நவதித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி நிர்வாகம் இது குறித்து விடுதி வார்டன் காவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவா தனது நண்பர் பிரவீனுடன் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு கொசவம்பட்டி சுடுகாடு அருகே தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி கொலை சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் சங்கீத்குமார் (வயது 21). இவர் ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் தனது நண்பர் பிரவீனுடன் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு கொசவம்பட்டி சுடுகாடு அருகே தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த அலெக்ஸ், மவுலிஸ், பரத் ஆகிய 3 பேருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் சங்கீத்குமார், பிரவீனை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கீத்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அந்த தனிப்படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்த கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சங்கீத்குமாரை கொலை செய்த அவரது நண்பர்களான சூர்யா, அலெக்ஸ், மவுலீஸ்வரன், பரத் ஆகியோரையும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அரவிந்த் என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், யார் பெரியவர் என்று போட்டியில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாறி மாறி தாக்கி கொண்டதும், இதில் சங்கீத்குமார் பலத்த காயமடைந்து இறந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நாமக்கல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×