என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரத்தில் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஓரிக்கை வேளிங்கப்பட்டறை சின்னசாமி நகரை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ரக்சனா (14), மகன் தர்மேஷ் (12). இவர்களில் ரக்சனா காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் ரக்சனா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சுங்குவார்சத்திரம் அருகே ஓவிய ஆசிரியரை கொன்று உடல் புதைக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு சோபனா (30) என்ற மனைவியும், அன்பரசி (10) என்ற மகளும், கோவேஷ் (2) என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி முதல் அன்பழகன், அவரது மனைவி சோபனா மற்றும் மகள், மகனை காணவில்லை. இது குறித்து அன்பழனின் உறவினர் சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். விசாரணையில் சோபனா தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அவர் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் சோபனாவை துருவி துருவி விசாரித்தனர்.

    விசாரணையில் சோபனா கள்ளக்காதலன் தர்மராஜ் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து கணவர் அன்பழகனை கொன்று சிவபுரம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரம் குழி தோண்டி புதைத்து விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

    போலீசார் சோபனா, தர்மராஜ், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இன்று (புதன்கிழமை) ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் அன்பழகனி்ன் உடலை தோண்டி எடுக்க உள்ளனர்.

    போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் 52 பேரை கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காஞ்சீபுரம் சரக காவல் துணை தலைவர் சத்யபிரியா அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்படி காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது சம்பந்தமாக போலீசார் 52 பேரை கைது செய்தனர்.
    காஞ்சீபுரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் திருக்காலிமேட்டை சேர்ந்தவர் அன்பழகன். ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் காஞ்சீபுரம் ரெயில்வே ரோடு ஆட்டோ நிறுத்துமிடத்தில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கொலை, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட திருக்காலிமேடு, ஏரிக்கரை தெரு, அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்ற கற்பக மணி (வயது 40) ஆட்டோ டிரைவர் அன்பழகனை தரக்குறைவாக பேசி கையால் அடித்துள்ளார். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்களின் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சீ போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜிக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று, தப்பிச்சென்ற மணியை கைது செய்தார்.

    வீட்டுமனை அளிப்பதாக கூறி ரூ.2 கோடியே 80 லட்சம் வரை மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். காஞ்சீபுரம் வையாவூர், சிறுவள்ளூர் போன்ற பகுதிகளில் குறைந்த விலையில், தவணை முறையில் பணம் செலுத்துவோருக்கு வீட்டுமனை அளிப்பதாக கூறி ஒரு நபரிடம் ரூ.56 ஆயிரம் வரை வசூலித்தார்.

    மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.56 ஆயிரம் செலுத்தினால் அவர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் அளிப்பதாக வாக்குறுதியை ஸ்ரீதர் அளித்தார். இதனை நம்பி காஞ்சீபுரம், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலர் பணம் செலுத்தினர்.

    தன் மீது நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஸ்ரீதர், சிலருக்கு மட்டும் வீட்டுமனை கொடுப்பதை போல் அதற்கான பத்திரங்களையும், சான்றிதழ்களையும் கொடுத்துள்ளார்.

    பணம் செலுத்திய அனைத்து நபர்களுக்கும் அவர்கள் நம்புவதற்காக பாண்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு ெகாடுத்துள்ளார். மேலும் அதிகப்படியான ஆட்களை சேர்த்தால் வாடிக்கையாளர்களை முகவர்களாக மாற்றி அவர்களுக்கு உரிய சலுகைகள் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கொடுத்தார்.

    இதனால் பல வாடிக்கையாளர்கள் முகவர்களை போல் செயல்பட்டு தங்களுடைய உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், தெரிந்தவர்கள் என பல நபர்களை இதில் சேர்த்து விட்டுள்ளனர்.

    இவ்வாறு வீட்டுமனை பெற பொதுமக்கள் செலுத்திய ரூ.2 கோடியே 80 லட்சத்தை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதர் மோசடி செய்ததாக தெரிகிறது. இதை அறிந்த பணம் செலுத்தியவர்கள், ஸ்ரீதர் மீது காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

    போலீஸ் விசாரணையில், 500-க்கும் மேற்பட்டோரை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதர் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.

    இந்தநிலையில் காஞ்சீபுரம் புத்தேரி தெருவில் பதுங்கியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், ஸ்ரீதரிடம் தாங்கள் பறிகொடுத்த பணத்தை மீட்டு தரக்கோரியும், இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ராஜா என்பவரை கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மனு அளித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு கிராமத்தில் ‘லிப்ட்' தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 12-ந் தேதி ரூ.2½ லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தொழிற்சாலை மேலாளர் ராஜா ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எடையார்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 26), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எலிமியான் கோட்டூர் மேட்டு தெருவை சேர்ந்த கணபதி (23), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கப்பாங்கோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (25), திருவள்ளூர் கம்பு தெருவை சேர்ந்த சீனிவாசன் (43), மேல் கொண்டையூர் பகுதியை சேர்ந்த சிவா (28) ஆகியோர் இரும்பு பிளேட்டுகளை திருடியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பிளேட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
    ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    படப்பை:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தென்கழனி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24), இவர் நேற்று முன்தினம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத்- வண்டலூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

    ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர், வடமங்கலம், சுங்குவார் சத்திரம் அடுத்த கீழ்பொடவூர் போன்ற இடங்களில் மர்மநபர்கள் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் மேற்பார்வையில், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    போலீசாரின் சோதனையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வடமங்கலம் பகுதியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (32), சுங்குவார்சத்திரம் அடுத்த கீழ்பொடவூர் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் (35) ஆகியோர் திருட்டுத்தனமாக மது விற்றது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 347 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
    காஞ்சீபுரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தை சேர்ந்த பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி என 21 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான மணிமாறன் (வயது 28), 11 வழக்குகளில் சம்பந்தப்பட்ட விஜய் (25) மற்றும் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட துளசிராமன் (25) ஆகியோர் தலைமறைவாக இருந்து கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்த போந்தூரை சேர்ந்த சிவா என்கிற பரமசிவம(43), வல்லம் பகுதியை சேர்ந்த சதீஷ்(28) ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சுங்குவார்சத்திரம் அருகே வேலை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்தார்.

    மேலும் விக்னேஷ் மது பழக்கத்துக்கு அடிமையாகி மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விக்னேஷ் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் விக்னேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சின்னையன் சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி டிரைவர்களிடம் இருந்து 2 பேர் செல்போன்களை பறித்து செல்வதாக அங்கு இருந்த ரோந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். காஞ்சீபுரம் பொன்னேரி கரையில் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை பட்டாபிராமை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 22), ஜெகன் (20) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தங்கள் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு அல்லது காஞ்சீபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறை 044-27236111, 9498181232 என்ற எண்ணுக்கும் தகவல் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
    படப்பை அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலியானார்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மரியா ஜெனிபர் (வயது 57). நேற்று இவர் மொபட்டில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் கரசங்கல் துண்டல் கழணி அருகே சென்று கொண்டிருந்தார்.

    சாலை திருப்பத்தில் செல்லும்போது படப்பையில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற கார் மின்னல் வேகத்தில் மொபட் மீது மோதியது.

    மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியா ஜெனிபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×