என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தாம்பரம், பூந்தமல்லி, அய்யபன்தாங்கல் ஆகிய இடங்களில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பஸ் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவில் புதுப்பித்து சீரமைக்கப்பட்டது.

    இதையடுத்து கும்பாபிஷேகம் விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. 25-ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் ரத்னகிரி தலத்திற்கு பாலமுருகனடிமை சாமிகள் மற்றும் திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதின சுவாமிகள் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கும்பாபிஷேகத்தின் போது கோவில் வளாகத்துக்குள் 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கும்பாபிஷேகத்தை காண சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தாம்பரம், பூந்தமல்லி, அய்யபன்தாங்கல் ஆகிய இடங்களில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பஸ் குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு இயக்கப்படுகிறது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன.

    கோவிலை சுற்றி 5 இடங்களில் தண்ணீர் தொட்டி வைத்து பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் பக்தர்கள் கோவிலுக்கு படிஏறி செல்லும் இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள்ளும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக கோவிலுக்கு பின்புறம் 6 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் செந்தாமரை கண்னன், கோவில் அலுவலர் அமுதா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    சென்னை கண்ணகி நகரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் திருமணமாகி ஒரே ஆண்டில் காதல் மனைவியை கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவான்மியூர்:

    சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் டெல்லி (வயது23). சென்னை அண்ணாநகர் எல்.ஐ.சி. நகரை சேர்ந்தவர் சரிதா (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

    இதையடுத்து திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஆனால் இவர்களின் காதலுக்கு 2 பேரின் பெற்றோர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

    அதன்பிறகு கண்ணகி நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். டெல்லி தினமும் வீட்டில் தூங்கிய பிறகு சரிதா செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரது நடத்தையில் டெல்லி சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அவர் மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21-ந்தேதி இரவு டெல்லி குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது இரவு 2 மணியளவில் சரிதா போன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது திடுக்கிட்டு எழுந்த டெல்லி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் மனைவியை வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் சரிதா மயங்கி விழுந்தார். டெல்லியும் பின்னர் போதையிலேயே தூங்கிவிட்டார்.

    காலையில் டெல்லி கண் விழித்து பார்த்தபோது சரிதா மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்தார்.

    உடனே அவரை டெல்லி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சரிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லியை கைது செய்தனர்.
    காஞ்சிபுரம் அருகே ஆற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. மர்ம நபர்கள் ஆற்றில் வீசி சென்றுள்ளனரா என்று வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு என 3 ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு சாமி சிலை இருந்ததை கண்டெடுத்துள்ளனர். உடனே சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் 2 அடி உயரம் கொண்ட குதிரை வாகனத்துடன் கூடிய சாமி சிலையை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தால் சாமி சிலை ஆற்றில் அடித்து வரப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் ஆற்றில் வீசி சென்றுள்ளனரா என பல்வேறு கோணங்களில் வருவாய் துறையினர் சாமி சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த பணிகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவிலில் மூன்று மாதங்களுக்குள் பணிகளை முடிக்கும் படி அரசு கூறி உள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    கோவிலில் வடக்கு-தெற்கு நுழைவு வழிகள் மூடி இருப்பது விரைவாக திறக்கப்படும். கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது. பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பிடம் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பஸ் வந்து கொண்டிருந்தது. தாமல் அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சை முந்தி சென்ற டாராஸ் லாரியின் பின்னால் திடீரென பஸ் மோதியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 19 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம் அருகே இளநீர் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இளநீர் வியாபாரி. இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நடைபெற்ற நாடகத்தை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது 4 பேர் கும்பல் தனசேகரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவரது கை, கால், கழுத்து, தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தனசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவி, கார்த்திக், சந்தானம், அஜித், ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபசார அழகி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 25வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் இறந்து கிடந்த இளம்பெண் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த பிரியா(25) என்பதும், இவர் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விபச்சார தொழில் செய்யும் பெண் ஒருவருடன் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் பிரியா மர்மமான இறந்து உள்ளார்.

    அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக பிரியாவின் காதலனான காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மற்றும் பெண் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர்.
    கே.கே.நகரில் பஸ் மோதி நிலத்தரகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, அசோக் நகர் புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணகுமார் (வயது56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு 8.30மணி அளவில் கே.கே நகர் காமராஜர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தி.நகரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகர பஸ் (எண்49ஏ) எதிர்பாராத விதமாக லட்சுமணகுமார் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே லட்சுமண குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சங்கரை கைது செய்தனர்.

    பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என நெசவாளர்கள் கூட்டத்தில் கோரிக்கைகளை வைத்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பட்டு சேலை உற்பத்தி மூலப்பொருட்கள் 130 சதவீதம் விலை உயர்வு குறித்து ஆலோசனை கூட்டம் சி.ஐ.டி.யு. மாநில கைத்தறி சம்மேளன பொது செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பட்டு நெசவு தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோறா வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என பட்டு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

    பின்னர் சி.ஐ.டி.யூ மாநில கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைத்தறி நெசவுத் தொழிலில் கச்சா பட்டு 130 சதவீதம் விலை உயர்வை கண்டித்தும், மூலக்கூறுகள் விலை உயர்வை கண்டித்தும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோர பட்டு வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், கோயம்புத்தூர், பரமக்குடி உட்பட தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவு அனைத்து மையங்களில் மே 3ந் தேதி பட்டுசேலை விற்பனை கடை அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கான முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பட்டு சரிகை சேலை உற்பத்தி சங்க செயலாளர் பெருமாள், வணிகர் வர்த்தக சங்கத் தலைவர் ரங்கநாதன், தொ.மு.ச. தஞ்சாவூர் தங்கவேலு, சி.ஐ.டி.யு. சங்க தலைவர் தஞ்சாவூர் நாகேந்திரன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பருத்தி பட்டு நெசவு தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க தலைவர்கள் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பட்டு சேலை உற்பத்தி மூலப்பொருட்கள் 130 சதவீதம் விலை உயர்வு குறித்து ஆலோசனை கூட்டம் சி.ஐ.டி.யு. மாநில கைத்தறி சம்மேளன பொது செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பட்டு நெசவு தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோறா வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என பட்டு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

    பின்னர் சி.ஐ.டி.யூ மாநில கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைத்தறி நெசவுத் தொழிலில் கச்சா பட்டு 130 சதவீதம் விலை உயர்வை கண்டித்தும், மூலக்கூறுகள் விலை உயர்வை கண்டித்தும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோர பட்டு வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், கோயம்புத்தூர், பரமக்குடி உட்பட தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவு அனைத்து மையங்களில் மே 3ந் தேதி பட்டுசேலை விற்பனை கடை அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கான முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பட்டு சரிகை சேலை உற்பத்தி சங்க செயலாளர் பெருமாள், வணிகர் வர்த்தக சங்கத் தலைவர் ரங்கநாதன், தொ.மு.ச. தஞ்சாவூர் தங்கவேலு, சி.ஐ.டி.யு. சங்க தலைவர் தஞ்சாவூர் நாகேந்திரன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பருத்தி பட்டு நெசவு தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க தலைவர்கள் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது45).மீனவர். இவர் நேற்று இரவு கோவளத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி.) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 2036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி.) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 2036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான வசதி ret.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியே வருகிற 20-ந்தேதி முதல் மே 18ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கள் நடத்துதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×