என் மலர்
ஈரோடு
- தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் ஆங்காங்கே ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- சத்தியமங்கலம் வனப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலையால் பசுமை நிறைந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக காணப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு 10.30 மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெ ட்டில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் சேரும் சகதியுமாக காட்சியளித்ததால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் சாலையில் குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக எலந்த குட்டைமேடு பகுதியில் 88 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
பவானி, மொடக்குறிச்சி, குண்டேரி பள்ளம், நம்பியூர், கொடிவேரி, வரட்டுப்பள்ளம் போன்ற பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சத்தியமங்கலத்தில் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதேபோல் பவானியிலும் பரவலாக மழை பெய்தால் 3 மணி நேரம் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. பெருந்துறை, அம்மாபேட்டை, தாளவாடி, சென்னிமலை பகுதியில் பரவலாக மழை பெய்தது.
தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் ஆங்காங்கே ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலையால் பசுமை நிறைந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக காணப்படுகிறது.
இதேபோல் மாவட்டத்தில் முக்கிய அணைப்பகுதியான வரட்டுப்பள்ளம், கொடிவேரி, பவானிசாகர், பெரும்பள்ளம் போன்ற பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இரவு பெய்த கனமழையின் காரணமாக நம்பியூர்-அரசூர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் தட்டாம்புதூரில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தற்காலிக தரைப்பாலம் அமைத்துள்ளனர். அதிகப்படியான நீர் தரைபாலத்திற்கு மேலே சென்று கொண்டிருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நம்பியூரில் இருந்து சத்தி செல்லும் பஸ்கள் கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவு சுண்டக்காம்பாளையம் வழியாக 5 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சிங்கிரிபாளையம் செல்லும் ரோட்டில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கோபி அடுத்த கீரிப்பிள்ளை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓடையில் இருபுறமும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
எலந்தகுட்டைமேடு-88, பவானி-72, மொடக்குறிச்சி-70, குண்டேரிப்பள்ளம்-68.80, நம்பியூர்-61, கொடிவேரி-56, வரட்டுப்பள்ளம்-55.20, சத்தியமங்கலம்-53, பெருந்துறை-49, பவானிசாகர்-47.40, ஈரோடு-44, கொடுமுடி-40, அம்மாபேட்டை-36.20, கவுந்தப்பாடி-34, தாளவாடி-24.40, சென்னிமலை-12. மாவட்டம் முழுவதும் 872 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- குடும்பமாக வந்து ஜவுளி கடையில் மக்கள் குவிந்தனர்.
- இந்த பகுதியில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
ஈரோடு:
இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கடந்த சில நாட்களில் கடை விதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
அதன்படி இன்று ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, சக்தி ரோடு பகுதியில் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் சாலையின் இரு புறம் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், நகை கடைகள், பேன்சி கடைகள் உள்ளதால் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இன்று விடுமுறை நாள் என்பதால் குடும்பமாக வந்து ஜவுளி கடையில் மக்கள் குவிந்தனர். சாதாரண சின்ன கடை முதல் பெரிய ஜவுளி கடை வரை மக்கள் கூட்டமாகவே இருந்தது.
இதேபோல் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் காணப்பட்டது. குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கி சென்றனர். இதனால் இந்த பகுதியில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைத்தனர்.
கூட்ட நெரிசலை பயன் படுத்தி சில மர்ம நபர்கள் பொதுமக்களிடம் பணம், செயின் போன்றவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் ஈரோடு ஜி. எச். ரவுண்டானா, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு உட்பட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மாநகரில் 16 முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு அதன் நடவடிக்கைகள் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
- குடிநீர் குழாயில் இருந்து நுரையுடன் தண்ணீர் வருவதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் 39-வது வார்டு கே.எஸ்.நகர் மரப்பாலம் 5-வது வீதியில் உள்ள குடியிருப்பில் உள்ள ஆழ்துளை கிணற்றில் (போர்வெல்) இருந்து குடிப்பதற்கு மற்றும் பிற தேவைக்கு பயன்படுத்த போர் போட்ட போது குடிநீர் குழாயில் இருந்து நுரையுடன் ரசாயன கழிவு நீர் வருவதை கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தண்ணீர் நுரையுடன் வெளியேறி அந்த வீதியில் சோப்பு நுரை போல் பொங்கி வீதியில் வழிந்து ஓடுகிறது.இதனால் குடியிருப்பு வாசிகள் போர்வெல் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,
இந்த பகுதியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இதனால் மாநகராட்சி சார்பில் ஆற்று நீர் விநியோகம் தடைப்படும் நேரங்களில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதால் இந்த பகுதியில் உள்ள சில ஆழ்துளை கிணற்றில் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வருவதாக புகார் தெரிவித்தனர்.
இது குறித்து பலமுறை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித ஆய்வுகள் மற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகள் செயல்படுவதால் அந்த ஆலைகளில் கழிவு முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் நிலத்தடி மூலம் வெளியேற்றபடுகிறதா என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நீரை குடித்தால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆழ்துளை கிணற்றில் ரசாயனம் கலந்த தண்ணீர் நுரையுடன் பொங்கி வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தள்ளு வண்டி மீது பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.
- சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த சின்னமடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அங்கு ரோட்டை கடக்க முயன்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராத விதமாக பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பழனிசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.2.34 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,875 மூட்டைகளில் 2,80,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.74.05-க்கும், அதிகபட்சமாக, ரூ.89.49-க்கும் விற்பனையானது.
2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.40.21-க்கும், அதிகபட்சமாக ரூ. 82.35-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ.2.34 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
- தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
- மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த என்.கந்தம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சியினை செய்து காண்பித்தனர்.
பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
- ஜீவா சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
- போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உஞ்சனை விலாவடியன் தெரு சுப்பிரமணியன் மகன் ஜீவா (26). இவர் வேலைக்காக ஈரோடு வந்த போது 14 வயது சிறுமியுடன் பழகினார். இந்த பழக்கத்தின் மூலமாக ஜீவா சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து ஜீவா தலை மறைவானார். இந்நிலையில் சிறுமி உடல்நிலை பாதிக்க ப்பட்டார். பின்னர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெ ற்றோர் ஈரோடு அரசு மருத்து வமனை போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்கா ரம் செய்து கர்ப்பமாக்கிய ஜீவா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- பழனிசாமி தோட்டத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
- சிறுவலூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொரவம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (54). நாட்டு ச்சர்க்கரை தயாரிக்கும் கரும்பு ஆலை நடத்தி வந்தார். சம்பவத்தன்று பழனிசாமி மொபட்டில் தோட்டத்திற்கு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் காலை பெரியகொரவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் அருகே பழனிசாமியின் மொபட் நின்றது.
அப்போது பழனிசாமி, செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பழனிசாமியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பழனிசாமியின் மகன் மவுலிஸ்வரன் சிறுவலூா் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாட்டரி சீட்டு விற்ற மதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர்-ஆப்பக்கூடல் ரோடு பிரம்மதேசம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அந்தியூர் அருகே பிரம்மதேசம் சின்னக்குளம் பகுதியை சேர்ந்த சென்னி மகன் மதன் (வயது 66) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அனுமதியின்றி மது விற்ற சுந்தர்ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கணபதிபாளையம்-மன்னாதம்பாளையம் சாலையில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த ஈரோடு முத்தையம்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக லிப்டின் கதவு மூடியதாக தெரிகிறது.
- இதில் சுப்பிரமணியின் கை சிக்கி துண்டானது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திண்டல் மாருதி நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணி (வயது 69). இவர் துணி இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவருடைய மனைவி ஜோதிமணி (65). சுப்பிரமணி அந்தப் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு சென்று துணி வாங்கி வந்து இஸ்திரி செய்து கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவரது வீட்டிற்கு துணி வாங்குவதற்காக லிப்ட்டில் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்டின் கதவு மூடியதாக தெரிகிறது.
இதில் சுப்பிரமணியின் கை சிக்கி துண்டானது. மேலும் படுகா யம் அடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தீயணை ப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுப்பிரமணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து அவரது மனைவி ஜோதி மணி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 65.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 402 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.31 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 6.16 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.46 அடியும் உள்ளது.






