கரும்பு ஆலை உரிமையாளர் திடீர் சாவு

பழனிசாமி தோட்டத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்தார். சிறுவலூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரும்பு ஆலை உரிமையாளர் திடீர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொரவம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (54). நாட்டு ச்சர்க்கரை தயாரிக்கும் கரும்பு ஆலை நடத்தி வந்தார். சம்பவத்தன்று பழனிசாமி மொபட்டில் தோட்டத்திற்கு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் காலை பெரியகொரவம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் அருகே பழனிசாமியின் மொபட் நின்றது.

அப்போது பழனிசாமி, செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பழனிசாமியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பழனிசாமியின் மகன் மவுலிஸ்வரன் சிறுவலூா் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com