லாட்டரி சீட்டு விற்ற முதியவர் மீது வழக்கு

லாட்டரி சீட்டு விற்ற மதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்ற முதியவர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர்-ஆப்பக்கூடல் ரோடு பிரம்மதேசம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அந்தியூர் அருகே பிரம்மதேசம் சின்னக்குளம் பகுதியை சேர்ந்த சென்னி மகன் மதன் (வயது 66) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com