என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO Act for"

    • ஜீவா சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உஞ்சனை விலாவடியன் தெரு சுப்பிரமணியன் மகன் ஜீவா (26). இவர் வேலைக்காக ஈரோடு வந்த போது 14 வயது சிறுமியுடன் பழகினார். இந்த பழக்கத்தின் மூலமாக ஜீவா சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.

    இதையடுத்து ஜீவா தலை மறைவானார். இந்நிலையில் சிறுமி உடல்நிலை பாதிக்க ப்பட்டார். பின்னர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெ ற்றோர் ஈரோடு அரசு மருத்து வமனை போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்கா ரம் செய்து கர்ப்பமாக்கிய ஜீவா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ×