என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "There was a commotion because"

    • குடிநீர் குழாயில் இருந்து நுரையுடன் தண்ணீர் வருவதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் 39-வது வார்டு கே.எஸ்.நகர் மரப்பாலம் 5-வது வீதியில் உள்ள குடியிருப்பில் உள்ள ஆழ்துளை கிணற்றில் (போர்வெல்) இருந்து குடிப்பதற்கு மற்றும் பிற தேவைக்கு பயன்படுத்த போர் போட்ட போது குடிநீர் குழாயில் இருந்து நுரையுடன் ரசாயன கழிவு நீர் வருவதை கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் தண்ணீர் நுரையுடன் வெளியேறி அந்த வீதியில் சோப்பு நுரை போல் பொங்கி வீதியில் வழிந்து ஓடுகிறது.இதனால் குடியிருப்பு வாசிகள் போர்வெல் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    இந்த பகுதியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இதனால் மாநகராட்சி சார்பில் ஆற்று நீர் விநியோகம் தடைப்படும் நேரங்களில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதால் இந்த பகுதியில் உள்ள சில ஆழ்துளை கிணற்றில் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வருவதாக புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து பலமுறை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித ஆய்வுகள் மற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகள் செயல்படுவதால் அந்த ஆலைகளில் கழிவு முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் நிலத்தடி மூலம் வெளியேற்றபடுகிறதா என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த நீரை குடித்தால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆழ்துளை கிணற்றில் ரசாயனம் கலந்த தண்ணீர் நுரையுடன் பொங்கி வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×