என் மலர்
ஈரோடு
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் ஈங்கூரில் மின்வாரிய அலுவலகம், துணை பண்டகசாலை உள்ளது.
இங்கு லட்சுமண சுந்தரம், செல்வம் ஆகியோர் மின் பாதை அலுவலர்களாகவும், துரைசாமி ஸ்டோர் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் கூட்டாக சேர்ந்து பண்டக சலையில் இருந்த ஆயிரத்து 361 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்களை திருடி பெருந்துறையில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்று பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த திருட்டு தொடர்பாக பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் சின்னுசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இரும்பு பொருட்களை திருடியதாக பண்டக சாலை ஊழியர் லட்சுமண சுந்தரத்தை சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கைது செய்தார். கைதானவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் லட்சுமண சுந்தரம் பெருந்துறை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரும்பு பொருட்களை திருடியதாக புகார் கூறப்படும் மற்ற 2 ஊழியர்க்ள தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் அமைந்துள்ளது.
இதில் 95 தேர்வு மையங்களில் 11,072 மாணவர்களும், 12,573 மாணவிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 645 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொது தேர்வை எழுதினர்.
காலையில் பள்ளிக்கு வரும் வழியில் கோவில்களில் மாணவ-மாணவிகள் பொது தேர்வை சிறப்பாக எழுத வேண்டி வழிபட்டனர். காலை 9 மணி முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் திரும்பவும் ஒருமுறை பாட புத்தகங்களை படித்துப் பார்த்தனர். தேர்வுகளை பயமின்றி எழுத ஆசிரியர்கள் மாணவர்களை ஆசீர்வதித்தனர்.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 15 நிமிடம் மாணவர்கள் தேர்வு தாள் வினாக்களை படிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 10.15 மணிக்கு மணி ஒலித்ததும் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது.
தனித்தேர்வர்கள் 622 பேருக்கு 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் 38 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க 1470 கண்காணிப்பாளர்களும், 260 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வு அறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாய விளைநிலங்களின் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணையாகும்.
இதன் முக்கிய நீராதாரமாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. பின்னர் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மிதமான அளவில் வந்து கொண்டிருந்தது.
இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 96.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 452 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடியும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2100 கனஅடியும் என மொத்தம் 3400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 39). இவர் நேற்று இரவு சூரம்பட்டிவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் அவரிடம் கத்தியை காட்டி பணம் தருமாறு மிரட்டல் விடுத்தார். இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் அந்த வாலிபர் ராஜாவை தாக்கி ரூ.600 பறித்தார் .
இதுகுறித்து ராஜா சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் என்கிற பூரா சரவணனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.
கோபி:
சத்தியமங்கலம் அருகே உள்ள குளத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கருப்பாத்தாள் (74). இவர் கணவரை பிரிந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த கருப்பாத்தாள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக மகளிடம் கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கருப்பதாத்தாள் கோபி அருகே உள்ள கொடிவேரிஅணை தடுப்பணை வாய்க்காலில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கடத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு விரைந்து வந்து கருப்பாத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் கருப்பாத்தாள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தமிழகம்- கர்நாடக எல்லையில் தாளவாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி இஸ்லாமியர்கள் வழிபடும் பெரிய பள்ளி வாசல் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக மாரியம்மன் கோவில் ராஜகோபுரம், விமான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்டு இருந்த யாக சாலையில் வேத விற்பன்னர்கள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இஸ்லாமியர்கள் சீதனம் வழங்குவது பாரம்பரியமாக கடை பிடிக்கப்பட்டு வந்தது. சில காலம் இந்த வழக்கம் நடைமுறையில்இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இஸ்லாமியர்கள் 30 பேர் அம்மனுக்கு சேலை, தேங்காய், பழம், இனிப்பு ஆகியவற்றை சீதனமாக கோவிலுக்கு வழங்கினார்கள்.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாததத்தை வாங்கி சாப்பிட்டனர். சமய நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்த இந்த நிகழ்ச்சியை கண்டு பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 25). இவர் ஈரோடு ஈ.பி.பி. நகரைச் சேர்ந்த தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கு தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோகுல் சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். மேலும் தனது தங்கை கருவுற்றது குறித்து யாரும் என்னிடம் கூறவில்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு சாப்பிட்டு விட்டு கோகுல் தனது மனைவி குழந்தையுடன் தூங்க சென்றார். நள்ளிரவில் திடீரென கண்விழித்துப் பார்த்த தேவி தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோகுல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மாபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் இருந்து தாளவாடி அடுத்த கரளவாடியில் உள்ள பால் குளிரகத்திக்கு பால் ஏற்ற டேங்கர் லாரி ஒன்று வந்தது.
லாரியை சண்முகம் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று ஆசனூரை அடுத்த செம்மண் திட்டு என்ற பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கார் வந்தது.
அந்த காருக்கு வழி விட்டார். இதில் எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்து பால்டேங்கர் லாரி சாலை ஓரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் பள்ளத்தில் விழுந்த டேங்கர் லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டது. நீண்ட நேரத்துக்கு பின் லாரி பள்ளத்தில் இருந்து மீக்கப்பட்டது.
இதனால் தமிழகம் கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு:
பெருந்துறை கோட்டத்திற்கு உட்பட்ட ஈங்கூர் துணை மின் நிலையத்தில் நாளை (29-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த மின் நிலையத்திற்கு உட்பட்ட பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலகரை, வெள்ளோடு, கவுண்டச்சி பாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர், வேலாயுதம்பாளையம், 1010 காலனி, பெருந்துறை ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு, சூரம்பட்டி வலசு, எம் எஸ் கே நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28).
இந்நிலையில் புவனேஸ்வரிக்கு கடந்த சில நாட்களாக தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து கொண்டாராம். எனினும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த புவனேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு எடுத்து தூக்குப்போட்டு கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாமரைப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் நாச்சி என்பவரின் மனைவி மாராள் (வயது 85).
இவர்களுக்கு பழனிசாமி என்ற மகன் உள்ளார். நாச்சியும், மாராளும் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாராள் படுத்து கொண்டிருந்தார். அவர் அருகே மண்எண்ணெய் விளக்கை பற்ற வைத்திருந்தார்.
அப்போது, மாராள் போர்த்தி இருந்த பெட்ஷீட் மற்றும் சேலையில் விளக்கில் இருந்த தீ பிடித்து மளமளவென எரிய துவங்கியது.
இதை கண்டு அலறி துடித்த மாராளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, தீயை அணைத்து மாராளை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாராள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்தியாவில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதுவரை இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி கலவரத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் செரீப், சலீம்,மாநகரத் தலைவர் ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி கலந்து கொண்டு பேசினார். மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் பாட்சா, முகமது அர்சத், முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், த.மு.மு.க நிர்வாகிகள் அலாதீன் சாகுல், உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.






