என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  டெல்லி கலவரத்தை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி கலவரத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஈரோடு:

  குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்தியாவில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

  இந்நிலையில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதுவரை இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிலையில் டெல்லி கலவரத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் செரீப், சலீம்,மாநகரத் தலைவர் ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி கலந்து கொண்டு பேசினார். மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் பாட்சா, முகமது அர்சத், முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், த.மு.மு.க நிர்வாகிகள் அலாதீன் சாகுல், உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.
  Next Story
  ×