என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
கொடுமுடி அருகே தீயில் கருகி மூதாட்டி பலி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தீயில் கருகிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாமரைப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் நாச்சி என்பவரின் மனைவி மாராள் (வயது 85).
இவர்களுக்கு பழனிசாமி என்ற மகன் உள்ளார். நாச்சியும், மாராளும் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாராள் படுத்து கொண்டிருந்தார். அவர் அருகே மண்எண்ணெய் விளக்கை பற்ற வைத்திருந்தார்.
அப்போது, மாராள் போர்த்தி இருந்த பெட்ஷீட் மற்றும் சேலையில் விளக்கில் இருந்த தீ பிடித்து மளமளவென எரிய துவங்கியது.
இதை கண்டு அலறி துடித்த மாராளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, தீயை அணைத்து மாராளை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாராள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story