என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). விவசாய கூலித்தொழிலாளி.
சத்தியமங்கலம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து அங்குள்ள தேங்காய்களை பறித்து விற்பனை செய்து வருகிறார்.
அதே தோட்டத்தின் மற்றொரு பகுதியை விவசாயியான ரங்கசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு உள்ளார். காட்டுப்பன்றிகள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய தோட்டத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து உள்ளார். கிருஷ்ணமூர்த்தியும், மாரியப்பனும் உறவினர்கள் ஆவர்.

இந்த நிலையில் ராமாபுரத்தில் உள்ள மாரியப்பனை பார்ப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி சென்று உள்ளார். அப்போது தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மாரியப்பன் சென்றுவிட்டார். இதைதத்தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக தோட்டத்தின் உள்ளே மாரியப்பன் சென்றார். அப்போது மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள தோட்ட பகுதிக்கு சென்ற மாரியப்பன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தொட்டு உள்ளார். ஏற்கனவே அந்த கம்பி வேலியில் மின்சாரம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தெரியாமல் அவர் அந்த மின் கம்பியில் அவர் கையை வைத்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடைகள் இயங்காது என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்துத்துறை உயர் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் காரணமாக நோய் தொற்றின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும்.
பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வாகனங்களில் உரிய அனுமதியுடன் 2 நபர்கள் மட்டுமே பயணிப்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாகனங்களில் பயணிப்பவர்களும், பொது இடங்களுக்கு வருபவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை கட்டாயப்படுத்தி உறுதிப்படுத்த வேண்டும். தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மிகவும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.
பிற மாநிலம் மற்றும் மாவட்டம் அல்லது வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல்களை கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற செயலாளர், மாநகராட்சி மற்றும் நகராட்சி மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 9677397600 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும்.
மாவட்டத்திற்குள் புதிதாக வருபவர்களிடம் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்று அறிகுறிகளை கண்டறிந்து உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி துறையின் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு நாளைக்கு 2 முறை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை வழங்கினால் மட்டுமே நோய் தொற்றின் தாக்கத்தினை குறைக்க இயலும்.
ஈரோடு மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடைகள் இயங்காது. மேலும் வாரத்தின் இதர நாட்களில் மீன்களை வெட்டி சுத்தம் செய்யாமல் முழு மீன்களாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கோழி, ஆடு உள்ளிட்ட இதர இறைச்சி கடைகள் அனைத்து நாட்களிலும் இயங்கும். மேலும் பார்சல் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இறைச்சி கடைகளில் கிருமிநாசினி கொண்டு 3 முறை சுத்தம் செய்ய வேண்டும். கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் சோப்பு, கிருமிநாசினி கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
அரசின் முக்கிய விதிமுறைகளான சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி, சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடைபிடிக்காத நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு அந்த நிறுவனங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

மொடக்குறிச்சி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் கவுரிசங்கர் (வயது 22). இவர் சோலார் பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது அவருடைய மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுரிசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நம்பியூர் பகுதியில் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்யூட்டர் மற்றும் அச்சு எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்த குருமந்தூர் அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவர் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு கடந்த 23-ந் தேதி 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிவப்பிரகாசிடம் ரூ.500 கொடுத்து பூண்டு வாங்கினர். ஆனால் 500 ரூபாய் நோட்டை பெற்ற சிவப்பிரகாசுக்கு, அந்த 2 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அவர் அந்த நோட்டை உற்று கவனித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது.
உடனே அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிவபிரகாஷ் பிடித்து நம்பியூர் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பல்லக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரபு (வயது 28), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த அழகுதுரை (34) என்பது தெரிய வந்தது. இதில் பிரபு ஓட்டல் உரிமையாளராக உள்ளார்.
திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் அழகுதுரை தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து நம்பியூர் பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரபு மற்றும் அழகுதுரையை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் 12-ம் பறிமுதல் செய்ததும் தெரிந்ததே.
அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் நம்பியூர் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், மோகன்ராஜ், சாம்சிங் (தனிப்பிரிவு) மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக அந்த கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி நேருநகரை சேர்ந்த கன்னியப்பன் (34), ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள மன்னாதன் குருமனூர்காடு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (38) என்பதும்,’ தெரியவந்தது.
மேலும் அவர்கள் பூலுவப்பட்டி பாலன் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்து அங்கிருந்து நம்பியூர், கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், அவினாசி, அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் விட்ட திடுக்கிடும் தகவலையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கன்னியப்பன், பாக்கியராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட அச்சு எந்திரங்கள், கம்ப்யூட்டர், மடிக்கணினி, மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.56 ஆயிரம் மதிப்பிலான 112 கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்ட எல்லையில் இ-பாஸ் இல்லாதவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஈரோடு:
நேற்று அதிகாலையில் இருந்தே இ-பாஸ் இல்லாத வாகனங்கள் எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் காலை நேரத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து சந்தை செல்லவும், வேறு பணிகளுக்காகவும் ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்தனர். அவர்கள் அனைவரும் இ-பாஸ் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
காலை 8 மணியில் இருந்து அலுவலகங்கள் செல்பவர்கள், கடைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானவர்கள் வந்தனர். வேலைக்கு சென்றால்தான் கூலி கிடைக்கும் என்ற நிலையில் இருப்பவர்கள் தங்கள் சூழ்நிலையை போலீசாரிடம் கூறினார்கள். போலீசார் அரசின் உத்தரவை கூறி அனைவரையும் திருப்பி அனுப்பினார்கள். இதுபோல் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் பகுதிக்கு செல்வதற்காக வந்தவர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினார்கள். இதனால் கருங்கல்பாளையம் காவிரி பாலம் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் இடையே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.
எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட கலெக்டர்கள் முதல்-அமைச்சரிடம் வைத்தனர். அதைத்தொடர்ந்து மாவட்டங்கள் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் எல்லைப்பகுதி சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
நேற்று அதிகாலையில் இருந்தே இ-பாஸ் இல்லாத வாகனங்கள் எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் காலை நேரத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து சந்தை செல்லவும், வேறு பணிகளுக்காகவும் ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்தனர். அவர்கள் அனைவரும் இ-பாஸ் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
காலை 8 மணியில் இருந்து அலுவலகங்கள் செல்பவர்கள், கடைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானவர்கள் வந்தனர். வேலைக்கு சென்றால்தான் கூலி கிடைக்கும் என்ற நிலையில் இருப்பவர்கள் தங்கள் சூழ்நிலையை போலீசாரிடம் கூறினார்கள். போலீசார் அரசின் உத்தரவை கூறி அனைவரையும் திருப்பி அனுப்பினார்கள். இதுபோல் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் பகுதிக்கு செல்வதற்காக வந்தவர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினார்கள். இதனால் கருங்கல்பாளையம் காவிரி பாலம் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.
நம்பியூர் அருகே கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட திருப்பூரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே குருமந்தூரில் உள்ள ஒரு காய்கறி கடைக்கு 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிவிட்டு அதற்குண்டான பணத்துக்கு 500 ரூபாய் நோட்டு ஒன்றினை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த நோட்டில் கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த கடைக்காரர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் பிடித்து நம்பியூர் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள பல்லக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் பிரபு (வயது 28), பெரம்பலூரை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் அழகுதுரை (34) ஆவர். இதில் பிரபு ஓட்டல் உரிமையாளர் ஆவார். திருப்பூர் பூலுவப்பட்டியில் உள்ள பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக அழகுதுரை வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து தங்களிடம் இருந்த கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது,’ தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 500 ரூபாய் 11 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் 2 பேரும் கள்ளநோட்டுகளை யாரிடம் இருந்து பெற்று புழக்கத்தில் விட்டனர்? அல்லது அவர்களே ஏதேனும் நவீன எந்திரம் மூலம் தயார் செய்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனரா? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம்பியூர் அருகே கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே குருமந்தூரில் உள்ள ஒரு காய்கறி கடைக்கு 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிவிட்டு அதற்குண்டான பணத்துக்கு 500 ரூபாய் நோட்டு ஒன்றினை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த நோட்டில் கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அந்த கடைக்காரர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் பிடித்து நம்பியூர் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள பல்லக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் பிரபு (வயது 28), பெரம்பலூரை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் அழகுதுரை (34) ஆவர். இதில் பிரபு ஓட்டல் உரிமையாளர் ஆவார். திருப்பூர் பூலுவப்பட்டியில் உள்ள பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக அழகுதுரை வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து தங்களிடம் இருந்த கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது,’ தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 500 ரூபாய் 11 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் கள்ளநோட்டுகளை யாரிடம் இருந்து பெற்று புழக்கத்தில் விட்டனர்? அல்லது அவர்களே ஏதேனும் நவீன எந்திரம் மூலம் தயார் செய்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனரா? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தியமங்கலம் மற்றும் அந்தியூரில் ரூ.80¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
ஈரோடு:
சத்தியமங்கலத்தில் உள்ள கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், அரசூர், பெரியகுளம், கே.என்.பாளையம், தங்க நகர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் மூட்டைகளில் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 700-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 200-க்கும் என மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு விற்பனை ஆனது. சத்தியமங்கலம், திருப்பூர், அவினாசி, புஞ்சைபுளியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.
இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 135 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 869-க்கும், அதிபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 339-க்கும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 81 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் மற்றும் அந்தியூரில் ரூ.80 லட்சத்து 81 ஆயிரத்து பருத்தி ஏலம் போனது.

2-வது அலையில் கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி வியாபாரிகள், கால்டாக்சி டிரைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையில் மொத்தம் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 19 பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். தினமும் 1,100 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
வெளியிடங்களில் இருந்து வருபவர்களை முதலில் பரிசோதனை செய்துவிட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா 2-வது அலையில் வைரசின் வீரியம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிவது, சுகாதாரமாக இருப்பது, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை ஊரடங்கு தேவையில்லை. ஆனால் அதே வேளையில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகிறது. இது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோட்டில் கொரோனாவால் இறந்த பெண்ணை அடக்கம் செய்த யாரும் முன்வராத நிலையில் சமூக ஆர்வலர்கள் இறுதி சடங்கு அனைத்தையும் முறையாக நிறைவேற்றி அடக்கம் செய்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கொரோனாவால் நேற்று பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை என்றும், தாங்கள் கண்ணியமாக அடக்கம் செய்ய உதவ வேண்டும் என்றும் ஈரோடு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநகர தலைவர் சாதிக் என்பவருக்கு அழைப்பு வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் உள்ள சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டார். உடனே அவர்கள் விரைந்து சென்று, இறந்த பெண்ணின் உடலை, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, இறந்தவருக்கான இறுதி சடங்கு அனைத்தையும் முறையாக நிறைவேற்றி அடக்கம் செய்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை அடக்கம் செய்த சமூக ஆர்வலர்களின் மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கொல்லம்பாளையம் தமிழ்நகரை சேர்ந்தவர் யுவராஜா (வயது 25). சமையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு, ஈரோடு வீரபத்திரா வீதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த மண்டபத்திலேயே தூங்கினார். அப்போது மர்மநபர் ஒருவர் இவரது சட்டைப்பையில் இருந்த ரூ.1,000 மற்றும் செல்போனையும், அவரது மோட்டார் சைக்கிளையும் திருடிக்கொண்டு சென்றார். அதைத்தொடர்ந்து யுவராஜா இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, மர்மநபர் ஒருவர் யுவராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், யுவராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்கிற சுரேஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் பிரகாஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சிக்கடை நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு கோழி இறைச்சி கடையில், நோய் தொற்று பரவும் வகையில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் நின்றதும், முக கவசம் அணியாமல் கடை உரிமையாளர் இறைச்சி வியாபாரம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், அதேபகுதியில் செயல்பட்டு வந்த மற்றொரு கோழி இறைச்சி கடையிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இறைச்சி வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.