என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 450 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்கலம் புது க்காடு ராஜன் கரும்புக்காடு என்ற பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீ சார் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிரு ஷ்ணன் மகன் பூபதி என்ற சீரங்கன் (வயது 36),

    குப்பி ச்சிபாளையம் பெரிய வாய்க்கால் கரையைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ராமச்சந்திரன் (36), பூத ப்பாடி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பிரகதீ ஸ்வரன் (60),

    கேசரிமங்கலம் பிரிவு பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் குமார் (69), பவானி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருவிங்கி (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 450 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.51 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 428 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. '

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்ட மும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

    நீர்வரத்தை விட பாசன த்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.51 அடியாக உள்ளது.

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 428 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்ப ட்டு வந்த நிலையில் 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவர ப்படி 31.35 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.01 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.56 அடியாகவும் உள்ளது.

    • ஞான சேகரன் என்பவரை பங்களாபுதூர் போலீசார் கைது செய்தனர்.
    • 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என நம்பியூர், பங்களாபுதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்ன கோச ணம் 3 ரோடு பகுதியில் ' போதை பொருள்களை விற்பனை செய்த நம்பியூர் சின்ன கோசனம் சாலை தோட்டத்தை சேர்ந்த அமராவதி மகன் தர்மலி ங்கம் (வயது 37) என்பவரை நம்பியூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த ஹான்ஸ், பான் மசாலா, கூலிப் உள்ளி ட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் டி.என்.பாளையம் பகுதியில் அனும தியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட டி.என்.பாளையம் 4-வது வார்டு குமரன் கோவில் தெருவை சேர்ந்த தேவசகாயம் மகன் ஞான சேகரன் என்பவரை பங்க ளாபுதூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் டவுன் பஸ் மொபட்டின் பக்க வாட்டில் மோதியது.
    • இதில் அங்கமுத்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பெருமாபாளையம், அன்னை கார்டனை சேர்ந்த அங்கமுத்து. (வயது 71). இவர் பில்டிங் கான்ட்ராக்டர்.

    சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து பெருந்துறை, பவானி ரோடு, காடபாளையத்தில் பில்டிங் வேலை நடக்கும் இடத்திற்கு தனது மொபட்டில் சென்றார்.

    பெருந்துறை யூனியன் ஆபீஸ் அருகில் சென்றபோது அவருக்கு பின்னால் வந்த தனியார் டவுன் பஸ் மொபட்டின் பக்க வாட்டில் மோதியது. இதில் அங்கமுத்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் அங்கமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயது மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் 2 நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். 4 மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது.

    இதற்கு அடுத்த படியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சின்ன மின்கசிவு காரணமாக தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மருத்துவ கழிவு எரிப்பது சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்த கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழை, சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார்.

    ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை நிரப்ப 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்று நோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக ரூ.220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
    • பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 10 மணிக்கு பிறகு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் அன்னை சத்யா நகர், மல்லி நகரின் மையப்பகுதியில் பிச்சைக்கார பள்ளம் ஓடை செல்கிறது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மழை பெய்யும் போதெல்லாம் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுவது தொடக்கதையாகி வருகிறது.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஓடைகளில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மீண்டும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர் அருகே இருந்த அன்னை சத்யா நகர் மற்றும் மல்லி நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் உள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை மேல் தளத்திற்கு எடுத்து சென்றனர். மாணவ-மாணவிகளில் பாடப் புத்தகங்கள் மழை நீரில் நனைந்தது. மேலும் வீடுகளை சுற்றியும் மழைநீர் தேங்கி நின்றதால் அவர்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது அன்னை சத்யா நகர், மல்லி நகர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை மக்கள் வாலியால் இறைத்து வெளியே ஊற்றினர்.

    தகவல் அறிந்ததும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சரி செய்து வருகின்றனர். மழைநீர் சூழ்ந்து இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நசியனூர் அடுத்த சாமிகவுண்டன் பாளையம் பகுதிகளில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நீர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு 2 மணி முதல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    கார், மோட்டார்சைக்கிள் போன்ற சிறியரக வாகனங்கள் மாற்று வழியில் சென்று வருகின்றன. சாமிகவுண்டன்பாளையம், பள்ளத்தூர், மலையம்பாளையம் போன்ற பகுதிகளில் உடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளத்தூர் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியை சேர்ந்த ராணி என்பவர் வீடு மழையால் இடிந்து விழுந்தது. நல்ல வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    இதேபோல் பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல் பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    • பஸ்சில் வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது.
    • கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் போலீஸ் நிலைய எல்லையில் ஆற்றுக்கு தெற்கு பகுதியில் சுமார் 250 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த ப்படக்கூ டிய பணி நடைபெற்று வருகிறது.

    கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிவடையக் கூடிய நிலையில் உள்ளது.

    தற்போது 128 கேமிராக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சி.சி.டி.வி. கேமிராக்கள் கண்காணிப்பு அறையில் பதிவுகள் பார்க்க க்கூடிய நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளியில் பயிற்சி பள்ளி ஆசிரியை யாக பணியாற்றும் காவலிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற ஆசிரியை சத்தியமங்க லம் பஸ் நிலையத்தில் 6-ம் எண் பஸ்சில் தனது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தவற விட்டார்.

    பின்னர் மீண்டும் அந்த பஸ்சில் வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது.

    இதையடுத்து அவர் உடனடியாக சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் போலீஸ் நிலைய த்தில் புகார் செய்தார். அங்கு சி.சி.டிவி. கேமிராக்கள் உதவியுடன் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேமிரா பதிவுகளை போலீ சார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆசிரியை தவறவிட்ட செல்போனை மூதாட்டி ஒருவர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது.

    அந்த மூதாட்டி தனது வீட்டிற்கு 2 கிலோ மீட்டர் நடந்து சென்றார். அந்த 2 கிலோ மீட்டரும் 25 கேமிரா க்களில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

    பின்னர் போலீசார் அந்த மூதாட்டி வீட்டுக்கு சென்று செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த செல்போனை ஆசிரியை ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அடுத்துள்ள காளிச்செட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 58). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவரை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 18-ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டார்.

    இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் சம்பத்குமார் (25) சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடி ப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சரளம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்
    • மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை திங்களூர் கிராமத்தில் உள்ள காடுபசுவமாளம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 68). இவரது மனைவி சரளம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    சரளம்மாள் தனக்கு இடது தோள்பட்டையில் வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் சரளம்மாள் நேற்று அதிகாலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சரளம்மாள் இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெரியூர் பகுதியில் உள்ள வீதிகளில் குரங்குகள் நடமாடி வருகின்றன.
    • குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அடுத்து பெரியூர் கிராமம் உள்ளது. இந்த பகு தியில் கடந்த சில நாட்களாக 2 குரங்குகள் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    நேற்று காலை அங்குள்ள அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் அந்த 2 குரங்கும் புகுந்தது. இதனால் மாண வர்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

    இதேபோல் பெரியூர் பகுதியில் உள்ள வீதிகளில் குரங்குகள் நடமாடி வருகின்றன. இதனால் பெண்கள் அச்சத்துடனே வெளியே சென்று வருகின்றனர்.

    சில சமயம் குரங்கு அவர்களை கடிக்க பாய்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்ச த்துடன் உள்ளனர். குழந்தைகள் ஏதாவது கடையில் பொருட்களை வாங்க சென்றால் அதனை அந்த 2 குரங்குகள் பறித்து கொண்டு ஓடி விடுகிறது.

    மேலும் வீடுகளுக்கு புகு ந்து உணவு பொருட்களை சாப்பிட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். அப்பகுதி மக்கள் எவ்வளவு விரட்டினாலும் அந்த கிராம த்தை விட்டு குரங்குகள் வெளியேறவில்லை.

    இதனால் வனத்துறை யினர் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றது. அப்போது 963-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.

    கந்த சஷ்டி நிறைவு நாளையொட்டி மலை மீதுள்ள முருகன் கோவிலில் இருந்து முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கி சூரனை வதம் செய்ய சாமி புறப்பாடு நடந்தது.

    இதையடுத்து முருகப்பெ ருமானுக்கு சிறப்பு அலங்கா ரம், பூஜைகள் செய்யப்ப ட்டது. பின்னர் 4 ராஜா வீதிகள் வழியாக முருகப்பெ ருமான் சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து திருக்கல்யாண வைபோகம் கைலாசநாதர் திருக்கோவிலில் நடைபெற்றது.

    அப்போது முருக ப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகள் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரி யார் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தினை நடத்தினார்.

    அதை தொடர்ந்து மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (22ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட கரட்டு ப்பாளையம், செலம்பகவுண்டன்பாளையம், புதுப்பாளையம், சில்லாங்காட்டு வலசு, திப்பம்பாளையம், வசந்தம்நகர், ஆலமரம், புஞ்சை பாலதொழுவு, வெங்கமேடு, ஓலப்பாளையம், ராசாபாளையம், குப்பம்பாளையம், கொடுமணல், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×