search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியை தவறவிட்ட செல்போனை மீட்டு கொடுத்த போலீசார்
    X

    ஆசிரியை தவறவிட்ட செல்போனை மீட்டு கொடுத்த போலீசார்

    • பஸ்சில் வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது.
    • கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் போலீஸ் நிலைய எல்லையில் ஆற்றுக்கு தெற்கு பகுதியில் சுமார் 250 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்த ப்படக்கூ டிய பணி நடைபெற்று வருகிறது.

    கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் முடிவடையக் கூடிய நிலையில் உள்ளது.

    தற்போது 128 கேமிராக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சி.சி.டி.வி. கேமிராக்கள் கண்காணிப்பு அறையில் பதிவுகள் பார்க்க க்கூடிய நிலையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளியில் பயிற்சி பள்ளி ஆசிரியை யாக பணியாற்றும் காவலிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற ஆசிரியை சத்தியமங்க லம் பஸ் நிலையத்தில் 6-ம் எண் பஸ்சில் தனது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தவற விட்டார்.

    பின்னர் மீண்டும் அந்த பஸ்சில் வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது.

    இதையடுத்து அவர் உடனடியாக சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் போலீஸ் நிலைய த்தில் புகார் செய்தார். அங்கு சி.சி.டிவி. கேமிராக்கள் உதவியுடன் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கேமிரா பதிவுகளை போலீ சார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆசிரியை தவறவிட்ட செல்போனை மூதாட்டி ஒருவர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது.

    அந்த மூதாட்டி தனது வீட்டிற்கு 2 கிலோ மீட்டர் நடந்து சென்றார். அந்த 2 கிலோ மீட்டரும் 25 கேமிரா க்களில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

    பின்னர் போலீசார் அந்த மூதாட்டி வீட்டுக்கு சென்று செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த செல்போனை ஆசிரியை ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×