சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 450 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்கலம் புது க்காடு ராஜன் கரும்புக்காடு என்ற பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீ சார் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிரு ஷ்ணன் மகன் பூபதி என்ற சீரங்கன் (வயது 36),

குப்பி ச்சிபாளையம் பெரிய வாய்க்கால் கரையைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ராமச்சந்திரன் (36), பூத ப்பாடி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பிரகதீ ஸ்வரன் (60),

கேசரிமங்கலம் பிரிவு பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் குமார் (69), பவானி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருவிங்கி (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 450 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com