நெஞ்சு வலியால் பெண் சாவு

சரளம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.
நெஞ்சு வலியால் பெண் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை திங்களூர் கிராமத்தில் உள்ள காடுபசுவமாளம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 68). இவரது மனைவி சரளம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சரளம்மாள் தனக்கு இடது தோள்பட்டையில் வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சரளம்மாள் நேற்று அதிகாலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சரளம்மாள் இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com