என் மலர்
ஈரோடு
- கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு வந்து திடீர் என ஆய்வு மேற்கொ ண்டார்.
- தாளவாடி போலீஸ் நிலையம் சென்று அங்குள்ள கோப்பு களையும் ஆய்வு செய்தார்.
தாளவாடி:
கேரள மாநிலத்தில் போலீ சாருக்கும், மாவோயி ஸ்டுகளுக்கும் கடந்த 13-ந் தேதி துப்பாக்கி சண்டை நடந்தது. அப்பொழுது மாவோஸ்டுகள் துப்பாக்கிகளை போட்டு விட்டு தப்பி ஓடித் தலைமறைவாயினர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் புகைப்படங்களுடன் தமிழக-கர்நாடக எல்லை யான ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் மற்றும் கேர்மாளம் சோ தனைச் சாவடியில் தனிப்ப டை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்த நிலை யில் நேற்று மாலை கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு வந்து திடீர் என ஆய்வு மேற்கொ ண்டார்.
வாகனச் சோதனையையும் பார்வையிட்டார். பின்னர் தாளவாடி போலீஸ் நிலை யம் சென்று அங்குள்ள கோப்பு களையும் ஆய்வு செய்தார்.
- நெடுஞ்சாலை துறையினர் தானாக முன்வந்து நோட்டீ சுகள் வழங்கினர்.
- ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அண்ணா மடுவில் இருந்து தவிட்டுப்பாளையம் பாலம் வரை சாலை விரி வாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து தவுட்டுப்பாளையம் பாலம் வரை சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்ததனால் அவற்றை அகற்றுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் தானாக முன்வந்து நோட்டீ சுகள் வழங்கினர்.
அவற்றை பெற்று கொண்ட ஒரு சிலர் தானாக முன்வந்து அகற்றினார்கள்.
இதில் அகற்றாத பகுதிகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளார் பிரபாகரன், உதவி பொறியாளர் சதா சிவம் ஆகியோர் முன்னி லையில் சாலை பணியாளர்கள் மற்றும் அந்தியூர் போலீசார் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடை பெற்றது.
இதில் நெடுஞ்சா லைத்துறை அலுவலர் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி மற்றும் செல்வன் உள்பட பலர் உடனிருந்து பணிகளை செய்தனர்.
- ராதிகாகுமாரி வலது பாதங்காலில் பாம்பு கடித்து விட்டது.
- சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டம், ராம்பூர், பிரயாகை பகுதியை சேர்ந்தவர் ரினாதேவி (39). இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
ரினாதேவி ஈரோடு மாவட்டம், ஈங்கூர், குட்டப்பாளையம் பகுதியில் தனது குழந்தைகளுடன் தங்கி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மகள் ராதிகா குமாரி (10) எழுதிங்கள் பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை ராதிகாகுமாரி வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது அவரது வலது பாதங்காலில் பாம்பு கடித்து விட்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் உயர் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ராதிகாகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
- பழனி முருகன் கோவிலுக்கும் அதிக அளவில் பக்தர்கள் செல்வதால் அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஈரோடு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிட ப்பட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணா மலை அருணா ச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.
எனவே, பக்தர்க ளின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசு போக்குவ ரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோட்டில் இருந்தும் திருவண்ணா மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல பழனி முருகன் கோவிலுக்கும் அதிக அளவில் பக்தர்கள் செல்வ தால் அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக 40 சிறப்பு பஸ்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணா மலை, பழனி ஆகிய ஊர்களு க்கு வரும் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை இயக்கப்ப டுகின்றன.
இவ்வாறு அதில் தெரிவி க்கப்பட்டுள்ளது.
- கவுந்தபாடி பகுதியில் இன்று காலை வரை 15 செ.மீ மழை தொடர்ந்து கொட்டி தீர்த்தது.
- போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
ெதாடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இதே போல் நேற்றிரவு மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலே அதிக அள வில் மழை கவுந்தபாடி பகு தியில் பெய்தது. நேற்று மதி யம் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை 15 செ.மீ தொடர்ந்து கொட்டி தீர்த்தது.
இதனால் பனங்காட்டூர், அய்யம்பாளையம், வண்ணார் மடை, பாப்பாங் காட்டூர், தென்காட்டு பாளையம், பொம்மட்டி, செந்தம்பாளையம், சலங்க பாளையம், கண்ணாடிபுதூர், க. புதூர் மற்றும் பி.மேட்டு ப்பாளையம் பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஈரோடு ரோடு, அய்யம்பா ளையம் தரை மட்ட பாலம், பனங்காட்டூர் தரைமட்ட பாலம், கவுந்தப்பாடி, பொம்மபட்டி தரைமட்ட பாலம், அய்யம்பாளையம், ஆண்டி பாளையம், வண்ணார்மடை தடை மட்ட பாலம் ஆகிய பால ங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை வெள்ளம் அதிகமானதால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்த னர்.
கன மழையால் பாப்பா ங்காட்டூர் பகுதியில் 2 மின் கம்பங்கள் சாய்ந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மின் வாரியத்தினர் அதிகா லையில் மின் இணைப்பைத் துண்டித்து சரி செய்தார்கள்.
மேலும் கண்ணாடிப்பு தூர், கவுந்தப்பாடி, சலங்க பாளையம் பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெ ருக்கு எற்பட்டது. மேலும் ஓடத்துறை ஏரி, பி.மேட்டு ப்பாளையம் அனந்த சாக ரம் ஏரியும் நிறைந்து ஓடி யது.
இதில் ஓடத்துறை, கவு ந்தப்பாடி ஊராட்சி, பி.மேட்டுப்பாளையம் பேரூரா ட்சி பகுதி துப்புரவு பணி யாளர்கள் வெள்ளப்பகு தியில் தடுப்பு ஏற்படுத்திய குப்பை மற்றும் செடிகளை அகற்றி வருகிறார்கள்.
இதேபோல் கவுந்தபாடி அடுத்த பொம்மன்பட்டி நடுநிலைப்பள்ளி வளா கத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிபட்டனர்.
ஈரோடு மாவட்ட அணை பகுதிக ளான வரட்டுபள்ளம், குண்டேரிபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கவுந்தபாடி-152, எலந்த குட்டைமேடு-101, கோபி-80, கொடிவேரி-62, பவானி சாகர்-40, சத்தி-34, நம்பி யூர்-28, கொடிமுடி -20, வரட்டுப்ப ள்ளம் அணை-7, ஈரோடு-7, குண்டேரிப ள்ளம்-6, மொடக்குறிச்சி-6.
- இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
- போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி சூரம்பட்டி போலீசார் ஜெகநாதபுரம் காலனி ஆர்ச் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து, சபரி கார்டன் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (21), ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, ஓம்காளியம்மன் கோவில் முதல் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (21) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் வெற்றிவேலிடம் 350 கிராம் கஞ்சா மற்றும் எடை போடும் மெஷின் ஒன்றும், மோகன்ராஜிடம் 400 கிராம் கஞ்சா மற்றும் எடைபோடும் மெஷின் ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 750 கிராம் கஞ்சா, எடை மெஷி ன்கள் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் மது மட்டுமல்ல அனைத்தும் கூடுதலாக வியாபாரம் ஆகிறது.
- மது பழக்கத்தை தவிர்க்கவும், குறைக்க வேண்டும் என அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.
ஈரோடு:
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் தேர் ஊர்தி வாகனம் தமிழகம் முழுவதும் வருகிறது. அதன்படி இன்று ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் முத்தமிழ் தேர் வாகனம் வந்தது. இதனை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்வது என்பது அவர்களது வேலை. அதில் எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் ஏ.வ வேலுவே தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு செய்யும் பணி தடைப்படாது.
தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் மது மட்டுமல்ல அனைத்தும் கூடுதலாக வியாபாரம் ஆகிறது. இதை திட்டமிட்டு செய்யவில்லை. தானாக நடக்கிறது. இதை தடுப்பது கடினம். இதற்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. இதை தடுத்திட வேண்டும் என்று நினைக்க முடியாது. அந்த காலகட்டத்தில் அவர்களது சந்தோஷத்திற்காக குடிக்கிறார்கள்.
மது பழக்கத்தை தவிர்க்கவும், குறைக்க வேண்டும் என அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். மதுவிற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம் கிடையாது.
இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு தேவையான நடவடிக்கையை செய்து வருகிறோம். டெட்ரா பாக்கெட் பற்றி ஆய்வறிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். மது பழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிடமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கலுக்கு மதுக்கடை குறைப்பது குறித்து அறிவிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, பொங்கலுக்கு பொங்கல் கொடுப்பீர்களா என்று கேட்டால் நன்றாக இருக்கும். மது கடைகள் குறைப்பது குறித்து சொல்லமுடியாது என்றார்.
+2
- கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
- கோபி அருகே உள்ள அரசூர், தட்டான் புதூர் தரைப்பாலம் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், கொடுமுடி, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கனமழை தொடர்ந்து பெய்தது.
கோபிசெட்டிபாளையம், கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சமைதாங்கி, குளத்துகடை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் 80 மில்லி மீட்டர் மழைப்பதிவானது.
கனமழை காரணமாக தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் 3 அடி உயரத்துக்கு புகுந்ததால் வீடுகளில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு சென்றனர். இரவு நேரத்தில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வீட்டில் உள்ள பொருட்களை மேல் பகுதியில் பத்திரமாக வைத்தனர். இன்று காலை வரை மழை நீர் சூழ்ந்திருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்து இருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. மழை பெய்யும் போதெல்லாம் இந்த பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுவது தொடர் கதையாகி வருவது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை கொம்பு புதூரில் ஒன்று திரண்டு அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் தாசில்தார் உத்தர சாமி மற்றும் வருவாய் துறையினர், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது பல ஆண்டுகாலமாக மழை நீர் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகவே பள்ளத்தை சென்றடைந்து வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் தடுப்பு சுவர் அமைத்ததால் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் 50 வீடுகளில் புகுந்தது தெரியவந்தது.
கோபி அருகே உள்ள அரசூர், தட்டான் புதூர் தரைப்பாலம் பலத்த மழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்போது மக்கள் 6 கிலோமீட்டர் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
பலத்த மழை எதிரொலியாக கொடிவேரி அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை இருபுறங்களிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கொடிவேரி தடுப்பணை பகுதியில் 1,600 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
- அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.05 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,428 கனஅடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 24 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதேப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.35 அடி யாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.92 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.56 அடியாகவும் உள்ளது.
- ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்ன வலசு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் சுரேஷ். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 28). இவர்கள் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி ரஞ்சிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சுரேஷ் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
இதைப் பார்த்த ரஞ்சிதாவின் மகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மரு த்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
இந்நிலையில் அங்கு சிகி ச்சை பெற்று வந்த ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து ரஞ்சிதாவின் தாய் விஜயா ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சபரிமலை செல்ல மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி செல்கிறார்கள்.
- அதிகாலை நேரங்க ளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுறது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை உள்ளது. இந்த பகுதியில் வேதநாயகி உடனமர் சங்க மேஸ்வரர் கோவிலும் அமை ந்துள்ளது. இந்த கோவிலில் பெருமாள், முருகன் சன்ன திகளும் அமைந்து உள்ளது.
பவானி கூடுதுறை தமிழக த்தில் உள்ள பரிகார தலங்க ளில் சிறந்த பரிகார தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வர்கள் மட்டுமின்றி தமிழக த்தின் பல பகுதிகளிலும் இரு ந்து ஏராளமான பக்தர்கள் வந்து கூடுதுறையில் புனித நீராடி செல்கிறார்கள்.
குறி ப்பாக திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், கரூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து தங்கள் முன்கேனார்க ளுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து செல்கிறார்கள்.
இதனால் கூடுதுறையில் எப்போது மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் பவுர்ணமி, அமா வாசை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்தை விட அதிகமாக ஆயிரகண க்கான மக்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரர் மற்றும் வேதநா யகி அம்மனை வழிபடுகிறார்கள்.
ேமலும் ராமேஸ்வ ரத்துக்கு அடுத்தப்படியாக சிறந்த தலமாக கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களின் பல பகுதி களில் இருந்தும் ஏரா ளமான பக்தர்கள் கூடுதுறை க்கு வந்து புனித நீராடி ஈசனை வழிபட்டு செல்கிறார்கள்.
இதே போல் தமிழகத்துக்கு புனித யாத்திரை வரும் பெரும்பா லான மக்கள் கூடு துறைக்கு வந்து புனித நீராடி விட்டு செல்வது வழக்கமாக கொண்டு உள்ளனர்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திகை மாதம் பிறந்தது. இதையொட்டி சபரிமலை செல்வதற்காக அய்யப்ப பக்தர்கள் பலர் மாலை அணிவித்து விரதம் தொடங்கி உள்ளனர். இதே போல் ஈரோடு மாவட்ட த்திலும் பக்தர்கள் பலர் மாலை அணிந்து உள்ளனர்.
பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சபரி மலை செல்ல மாலை அணி ந்திருக்கும் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வ ரரை வழிபட்டு செல்கிறார்கள்.
மேலும் அய்ய ப்ப பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்ப என சரண கோஷம் முழங்க தரிசனம் செய்து வருகிறார்கள்.
இதனால் கடந்த சில நா ட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பவானி கூடுது றையில் அய்ய ப்ப பக்தர்க ளின் கூட்டமாகவே காண ப்பட்டு வருகி றது. குறிப்பாக அதிகாலை நேரங்க ளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுறது.
மேலும் சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த பக்த ர்கள் பலர் கூடு துறைக்கு வந்து புனித நீராடி விட்டு மீண்டும் சபரி மலைக்கு செல்கிறார்கள்.
இதே போல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர் பகுதிகளில் இருந்து பவானி வழியாக அய்யப்ப கோவி லுக்கு செல்லும் பக்தர்கள் கூடு துறைக்கு வந்து சங்கமேஸ்வ ரரை வழிபட்டு விட்டே செல்கிறா ர்கள்.
மேலும் சபரிமலை செ ல்லும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பல்வேறு புனித தலங்களுக்கு செல்லும் பலரும் கூடுதுறை க்கு வந்து புனித நீராடி விட்டு செல்கிறார்கள்.
- வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.
- அனைத்து நடைமுறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஈரோடு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களைக் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.
அவ்வாறு வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளை கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை மற்றும் வேளா ண்மை ஆராய்ச்சி நிலையங்க ளில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப் பண்ணை களுக்கு விதை பெருக்கத்தி ற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்ப டும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணி ப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழுவானது விதைப்ப யிர் பூப்பருவம், அறுவடை ப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதை தரத்தினை உறுதி செய்கின்றது.
இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் துவரை கோ (ஆர்ஜி) 7 என்ற ரகத்தில் வல்லுநர் நிலை விதைப் பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.
இந்த ரகமானது 120 முதல் 130 நாட்களில் முதிர்வடையக் கூடிய குறுகிய கால ரகமாகும்.
மேலும் செம்பழுப்பு தானிய நிறம் உடையதாகவும், மானாவாரியில் 950 கிலோ மற்றும் இறவையில் 1200 கிலோ தானிய மகசூல் ஒரு எக்டருக்கு தரவள்ளது.
இவ்விதைப்பண்ணையை பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசி ரியர் மற்றும் தலைவர் சக்திவேல், உதவி பேராசிரிய ர்கள் ஆனந்தி, உத்தராசு, அமுதா, ஈரோடு விதைச்சா ன்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசு ந்தரம் மற்றும் பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி ஆகியோர் அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.
ஆய்வின்போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
மேலும் தரமான வல்லுநர் விதை களை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.






