ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலை-பழனிக்கு 40 சிறப்பு பஸ்கள்

ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.பழனி முருகன் கோவிலுக்கும் அதிக அளவில் பக்தர்கள் செல்வதால் அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலை-பழனிக்கு 40 சிறப்பு பஸ்கள்
Published on

ஈரோடு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிட ப்பட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணா மலை அருணா ச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

எனவே, பக்தர்க ளின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசு போக்குவ ரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோட்டில் இருந்தும் திருவண்ணா மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல பழனி முருகன் கோவிலுக்கும் அதிக அளவில் பக்தர்கள் செல்வ தால் அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக 40 சிறப்பு பஸ்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணா மலை, பழனி ஆகிய ஊர்களு க்கு வரும் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை இயக்கப்ப டுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவி க்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com