என் மலர்
ஈரோடு
கோபியில் இன்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்னரே விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் இல்லை. அதனால்தான் தனியார் மூலம் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கல்வி டி.வி.யின் மூலம் பயின்ற மாணவர்களுக்கான கல்வி தரம் பற்றி ஆராய திறனாய்வு தேர்வுக்கான பணிகள் நடந்து வருகிறது. நீட் தேர்வு பயிற்சி பெற 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரத்து 817 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். எந்த மாநிலத்திலும் நீட் தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்படும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை, வழி தவறி கொண்டை ஊசி வளைவு சாலைக்கு வந்தது.
பின்னர் அந்த யானை அப்படியே ஒய்யாரமாக நடந்து, புற்களை உண்டு, மூன்றாவது கொண்டை ஊசி வளைவு வரை மேல் நோக்கி ஏறி வந்ததால், அவ்வழியாக வந்த அனைத்து வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து, செல்ல முடியாமல் வாகனங்களை அப்படியே நிறுத்தினார்கள்.
யானை சாலையின் நடுவே சுற்றிக்கொண்டே இருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து திரும்பி சென்றனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு யானை தானாகவே சாலையோர சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள புதருக்குள் சென்று நின்று கொண்டது.
முதுமலை மற்றும் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இடம்பெயர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிக்குள் நுழைந்த காரணத்தினால் யானைகள் பெருக்கம் அதிகரித்து உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் மக்கள் வீடுகளிலேயே எளிமையாக முன்னோர்களை வழிபட்டனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையொட்டி தை அமாவாசையான இன்று பவானி கூடுதுறை, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் மக்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே கடும் பனியை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் வரத்தொடங்கினர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பவானி கூடுதுறையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தினர்.
கூட்டம் காரணமாக பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் அருகில் உள்ள காலி இடங்களில் முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து தர்ப்பணம் திதி கொடுத்து பவானி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ் வரரை வழிபட்டனர்.
பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் புனித நீராடி வழிபட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். 108 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தது.
இதேப்போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதேபோல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் பொதுமக்கள் ஆங்காங்கே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து நீராடி வழிபட்டனர்.
கொடுமுடி காவிரி ஆற்றிலும் தை அமாவாசையையொட்டி பக்தர்கள் புனித நீராட நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலை முதலே ஏராளமான பேர் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர் கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்ததால் காவிரி கரையே களை கட்டியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம், சமூக பாதுகாப்பு இடைவெளி குறித்து அறிவித்து கொண்டிருந்தனர். தை அமாவாசையையொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் இன்று இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்.
இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நிதி 5500 ரூபாய் மட்டும் தான். ஆனால் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் காலி பணி இடங்கள் நிரப்பபட்டுள்ளது.
ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு கடிதங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.
10,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் துவரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, அத்தாணி, பர்கூர், ஆப்பக்கூடல், வட்டக்காடு, அம்மாபேட்டை, பட்லூர், செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1,163 மூட்டைகளில் துவரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 481-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 550-க்கும் விற்பனை ஆனது. துவரை மொத்தம் ரூ.56 லட்சத்து 34 ஆயிரத்து 982-க்கு ஏலம் போனது.
ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், தர்மபுரி, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து ஏலத்தில் கலந்து கொண்டு போட்டி போட்டு துவரையை ஏலம் எடுத்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும், தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான 4 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அரசு கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 600 ரூபாயை கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல் 2 நாட்கள் கல்லூரி நுழைவாயில் முன்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் கதிரவன், தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ ஆகியோர் போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கை அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி ஆடிட்டோரியத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களது போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றும் ஆடிட்டோரியத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இதில் அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி, போன்ற வனவிலங்குகள் வசிப்பிடமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கத்தாலும் மலை பகுதி காய்ந்து போய் இருந்தது.
இந்த நிலையில் நெருஞ்சிப்பேட்டை அருகே உள்ள எதிர்மேடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீ பற்றியது. தீ காற்றின் வேகத்தாலும் மளமளவென மற்ற பகுதிகளில் பரவி சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 30 ஏக்கர் பரப்பில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு முற்றிலும் தீயை அணைத் தனர். இரவு 7 மணி முதல் 11 மணி வரை சுமார் 4 மணி நேரம் போராடி வனத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி நடுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 43) இவர் வெள்ளோட்டாம் பரப்பு அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மற்றும் தகவல் தொழிற்நுட்ப பிரிவில் உள்ளார்.
இவருக்கு நடுப்பாளையத்தில் விவசாய இடம் உள்ளது. அந்த விவசாய இடத்தை சர்வே செய்து தர வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதற்கான கட்டணத்தை செலுத்தினார். அரசு விதிப்படி இடத்தை பணம் கட்டிய 7 நாட்களுக்குள் சர்வே செய்து தகவல் தர வேண்டும்.
அதன் பின் 30 நாட்களுக்குள் முறைப்படி நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும். மோகன் இது குறித்து அதிகாரிகளை சந்தித்து நிலத்தை அளந்து கொடுக்கும் படி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளந்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு அ.தி.மு.க. பிரமுகர் மோகன் வெள்ளோட்டாம் பரப்பு கிராம நிர்வாக அலுவலகம் வந்தார். அவர் நடுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கொடுமுடி நிலஅளவை துறையினரை கண்டித்து அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் இன்று காலை கிளாம்பாடி நில வருவாய் ஆய்வாளர் தங்கமணி, வெள்ளோட்டம் பரப்பு கிராம நிர்வாக அதிகாரி வாசுகி மற்றும் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் அ.தி.மு.க. பிரமுகரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் நிலத்தை அளந்து தந்தால் தான் இங்கு இருந்து வருவேன் என கூறினார். இதையடுத்து நிலத்தை அளந்து தர அதிகாரிகள் உறுதி கூறினர். தொடர்ந்து கொடுமுடி சர்வேயர் கோபி அவர் இடத்தை அளந்து கொடுப்பதற்காக சென்றார். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.
அ.தி.மு.க. பிரமுகரே அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது, இங்கு அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் மான், முயல், கரடி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த 4 மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கத்தாலும் மலைப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கருகியிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை நெரிஞ்சிப்பேட்டை அருகே எதிர் மேடு என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் 30 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. மேலும் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக பள்ளிக்கூடங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி முதல் கட்டமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் 28 ஆயிரத்து 393 மாணவ-மாணவிகளுக்கும், பிளஸ்-1 படிக்கும் 24 ஆயிரத்து 873 மாணவ-மாணவிகளுக்கும் நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டது.

பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து ஈரோடு மாணவ -மாணவிகளின் கருத்துகள் வருமாறு:-
பி.டி.அனுவர்ஷினி
நான் ஈரோடு அருகே உள்ள இந்தியன் பப்ளிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறேன். இந்த கல்வி ஆண்டில் இதுவரை ஆன்லலைன் வகுப்பு மூலமே படித்து வந்தேன். இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
ஆனால் கொரோனா அச்சம் காரணமாக நான் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தினால் நன்றாக புரியும், அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம். ஆனால் என்னுடைய மனதில் இன்னும் கொரோனா பயம் நீங்கவில்லை. தோழிகளை நேரில் பார்க்க ஆவலாகத்தான் இருக்கிறது. என்னுடைய மனதில் கொரோனா பயம் நீங்கியதும் விரைவில் பள்ளிக்கூடத்திற்கு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெரேனியா
நான் பவானி கிரேஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படிக்கிறேன். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்க்க வேண்டும் என்று காலையிலேயே எழுத்து விட்டேன். பின்னர் பள்ளிக்கூடத்திற்கு சென்று 10 மாதங்களுக்கு பிறகு நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
8-ம் வகுப்பு படித்தபோது ஒரு பெஞ்சுக்கு 5 அல்லது 6 மாணவர்கள் இருந்தோம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஒரு பெஞ்சுக்கு 2 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து இருந்தோம். இதேபோல் மதிய உணவு சாப்பிடும் போதும் தனித்தனியாக அமர்ந்தே சாப்பிட்டோம். இது மனதுக்கு சற்று வருத்தம் அளித்தது. கொரோனா தொற்று முழுமையாக நீங்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அபி தீபதர்ஷன்
நான் ஈரோடு இந்து கல்வி நிலையத்தில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். வழக்கமாக நடக்கும் வகுப்புகளை போல் இல்லை. சமூக இடைவெளியை கடைபிடித்து ஒரு வகுப்பறையில் 20 பேர் மட்டுமே அமர்ந்திருந்தோம். ஒரு மணிக்கு ஒருமுறை கைகளை சுத்தப்படுத்தி கொண்டோம்.
முன்னதாக பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயில் பகுதியிலேயே எங்களுடைய கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி கொண்டோம். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு முக கவசம் வழங்கினார்கள். ஆன்லைன் வகுப்புகள் சரிவர புரியவில்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தியது நன்றாக புரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெ.தீபிகா
நான் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறேன். 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிக்கூடத்திற்கு சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தது மிகுந்த சிரமமாக இருந்தது.
தற்போது தோழிகளை சந்தித்து பேசியது சந்தோஷமாக இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து வகுப்பறையில் அமர்ந்து பாடங்கள் கற்றது புது அனுபவமாக இருந்தது. ஆன்லைன் வகுப்புகளைவிட ஆசிரியர்கள் பாடம் நடத்தியது நன்றாக இருந்தது. எனினும் கொரோனா அச்சம் மனதில் தொடர்ந்து இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன கால்வாயாக விளங்குவது காலிங்கராயன் கால்வாய். இந்த காலிங்கராயன் கால்வாயை நம்பி சுமார் 14,700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த கால்வாய் பகுதியில் மஞ்சள், வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கால்வாய்களில் சாயகழிவு நீரை கலப்பவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரங்களில் காலிங்கராயன் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக் கழிவுநீரை கலப்பதாகவும், இதனால் விளை நிலங்கள் பாதிக்கப் படுவதாகவும் மொடக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ. சிவசுப்ரமணியத்திடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய-விடிய ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலிங்கராயன் கால்வாயை ஒட்டி உள்ள பகுதிகளில் சிவசுப்பிரமணியம் எம்.எல்.ஏ நிர்வாகிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வெண்டிபாளையம் பகுதியின் பல்வேறு இடங்களில் பூஜிய முறையில் தண்ணீரை வெளியேற்றுவதாக அனுமதி பெற்று சாயக்கழிவு நீரை காலிங்கராயன் கால்வாய் பகுதியில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் காலிங்கராயன் வாய்க்காலில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை, அரசின் எந்தவித அனுமதியின்றி சட்டவிரோதமாக டீசல் பம்பு செட்களை கொண்டு, சாய ஆலை உரிமையாளர்கள் தண்ணீர் திருடி வந்ததும் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ராட்ச பைப் லைன்களை பொக்லைன் எந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தினர். மேலும் அந்த ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி தற்போது பூஜிய முறையில் தண்ணீரை வெளியேற்றுவதாக அனுமதி பெற்று சாயக்கழிவு நீரை சட்டவிரோதமாக காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேற்றிய 28 சாய ஆலைகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேப்போன்று சட்ட விரோதமாக சாயக்கழிவு நீரை வெளியேற்றும் மற்ற ஆலைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






