என் மலர்
ஈரோடு
ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஜவுளி ஆர்டர்கள் ஈரோடு விசைத்தறியாளர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஏற்கனவே உற்பத்தி செய்த ஜவுளிகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டு தினந்தோறும் 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் வருகின்ற 20-ந் தேதி வரை முழு உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏற்கனவே கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்து விட்டோம். இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தொழிலாளர்களையும், உரிமையாளர்களையும் காக்கும் வகையில், வருகிற 20-ந்தேதி வரை முழுவதுமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
மேலும் வட மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் ஆர்டர்கள் வருவது தடைபட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆர்டர்களால் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ.7 முதல் ரூ.10 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 599 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 21 ஆயிரத்து 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 168 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 421 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஒரு கிராமத்து பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். தந்தையின் கொடுமை தாங்க முடியாத சிறுமியின் தாயார் குழந்தைகளை விட்டு விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த சிறுமியை பெற்ற மகள் என்று கூட பாராமல் அவளது தந்தை, தனது நண்பர்களான கோபி அருகே உள்ள கூகலூர் குளத்துக்கடை கக்கன் வீதியை சேர்ந்த அம்மாசை மகன் அருணாச்சலம் (வயது 35), குளத்துக்கடை கருப்பன் வீதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (33) ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து உள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தது, கூட்டு பலாத்காரம் செய்தது ஆகிய குற்றங்களுக்காக குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் மற்றும் கற்பழிப்பு குற்றம் உள்பட 3 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டுகள் தந்தைக்கு ஜெயில் தண்டனை விதித்தார்.
அருணாச்சலத்துக்கு போக்சோ உள்ளிட்ட 2 சட்டங்களின் கீழ் தலா 20 ஆண்டு வீதம் 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், மணிகண்டனுக்கு போக்சோ உள்பட 2 சட்டங்களின் கீழ் தலா 20 ஆண்டுகள் வீதம் 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
| ஈரோடு கிழக்கு | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| இ.திருமகன் ஈவெரா | காங்கிரஸ் | 67300 | |||
| மு.யுவராஜா | அதிமுக | 58396 | |||
| ச.கோமதி | நாம் தமிழர் | 11629 | |||
| ஏ.எம்.ஆர்.ராஜாகுமார் | ம.நீ.ம. | 10005 | |||
| முத்துகுமரன் | நாம் தமிழர் | 1204 | |||
| ஈரோடு மேற்கு | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| முத்துசாமி | திமுக | 100757 | |||
| கே.வி.ராமலிங்கம் | அதிமுக | 78668 | |||
| சந்திர குமார் | நாம் தமிழர் | 13353 | |||
| துரைசேவுகன் | ம.நீ.ம. | 8107 | |||
| சிவசுப்பிரமணியன் | அமமுக | 730 | |||
| மொடக்குறிச்சி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சி.சரஸ்வதி | பா.ஜ.க | 77653 | |||
| சுப்புலட்சுமி ஜெகதீசன் | திமுக | 76409 | |||
| கோ.பிரகாஷ் | நாம் தமிழர் | 12871 | |||
| ம.ராஜேஷ்குமார் | ம.நீ.ம. | 4574 | |||
| தங்கராஜ் | அமமுக | 1547 | |||
| பெருந்துறை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எஸ்.ஜெயகுமார் | அதிமுக | 85125 | |||
| கே.கே.சி.பாலு | திமுக | 70618 | |||
| சி.லோகநாதன் | நாம் தமிழர் | 10294 | |||
| சி.கே.நந்தகுமார் | ம.நீ.ம. | 3533 | |||
| பி.ஆர்.குழந்தைவேல் | தேமுதிக | 858 | |||
| பவானி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கேசி கருப்பணன் | அதிமுக | 100915 | |||
| துரைராஜ் | திமுக | 78392 | |||
| சத்யா | நாம் தமிழர் | 10471 | |||
| சதானந்தம் | ம.நீ.ம. | 4221 | |||
| ராதாகிருஷ்ணன் | நாம் தமிழர் | 956 | |||
| அந்தியூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ஏ.ஜி.வெங்கடாசலம் | திமுக | 79096 | |||
| கே.எஸ்.சண்முகவேல் | அதிமுக | 77821 | |||
| மா.சரவணன் | நாம் தமிழர் | 8230 | |||
| மு.குருநாதன் | மநீம | 2474 | |||
| எஸ்.ஆர்.செல்வம் | அமமுக | 1212 | |||
| கோபிச்செட்டிப்பாளையம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கே.ஏ.செங்கோட்டையன் | அதிமுக | 108608 | |||
| ஜி.வி.மணிமாறன் | திமுக | 80045 | |||
| மா.கி.சீதாலட்சுமி | நாம் தமிழர் | 11719 | |||
| என்.கே.பிரகாஷ் | ம.நீ.ம. | 4291 | |||
| நா.க.துளசுமணி | அமமுக | 2682 | |||
| பவானிசாகர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| பண்ணாரி | அதிமுக | 99181 | |||
| சுந்தரம் | இகக | 83173 | |||
| சங்கீதா | நாம் தமிழர் | 8517 | |||
| கார்த்தி குமார் | ம.நீ.ம. | 4297 | |||
| ரமேஷ் | தேமுதிக | 2197 | |||
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கோமதி, ஈரோடு மேற்கில் சந்திரகுமார், மொடக்குறிச்சி தொகுதியில் கோ.பிரகாஷ், பெருந்துறை தொகுதியில் லோகநாதன், பவானி தொகுதியில் சத்யா, அந்தியூர் தொகுதியில் சரவணன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் சீதாலட்சுமி, பவானிசாகர் தொகுதியில் சங்கீதா ஆகியோர் போட்டியிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சி 3-ம் இடம் பிடித்து உள்ளது. 6 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளை பெற்று உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளும், ஈரோடு மேற்கு தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 13,353 வாக்குகளும், மொடக்குறிச்சி தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 12,944 வாக்குகளும், பெருந்துறை தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 10,294 வாக்குகளும், பவானி தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 10,471 வாக்குகளும், அந்தியூர் தொகுதியில் நாம்தமிழர் வேட்பாளர் 8,230 வாக்குகளும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் 11,719 வாக்குகளும், பவானிசாகர் தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் 8,517 வாக்குகளும் பெற்று உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சிக்கு 87,157 வாக்குகள் கிடைத்தது.
ஈரோடு:
பவானி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.பி.துரைராஜ், அ.தி.மு.க. சார்பில் கே.சி.கருப்பணன், அ.ம.மு.க. சார்பில் மு.ராதாகிருஷ்ணன், மக்கள்நீதிமய்யம் சார்பில் கி.சதானந்தம், நாம்தமிழர் கட்சி சார்பில் மு.சத்யா மற்றும் சுயேட்சைகள் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பவானி தொகுதியில் 83.50 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. சுற்றுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
கி.சதானந்தம் - ம.நீ.ம.-
மு.சத்யா - நாம் தமிழர் கட்சி -430
முதல் சுற்று முடிவில் கருப்பணன் 1531 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.






