search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கருப்பணன்
    X
    அமைச்சர் கருப்பணன்

    பவானி தொகுதியில் அமைச்சர் கருப்பணன் முன்னிலை

    பவானி தொகுதியில் இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று முடிவில் கருப்பணன் 1531 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    ஈரோடு:

    பவானி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.பி.துரைராஜ், அ.தி.மு.க. சார்பில் கே.சி.கருப்பணன், அ.ம.மு.க. சார்பில் மு.ராதாகிருஷ்ணன், மக்கள்நீதிமய்யம் சார்பில் கி.சதானந்தம், நாம்தமிழர் கட்சி சார்பில் மு.சத்யா மற்றும் சுயேட்சைகள் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பவானி தொகுதியில் 83.50 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. சுற்றுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:

    கி.சதானந்தம் - ம.நீ.ம.-

    மு.சத்யா - நாம் தமிழர் கட்சி -430

    முதல் சுற்று முடிவில் கருப்பணன் 1531 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    Next Story
    ×