என் மலர்
ஈரோடு
அவ்வாறு புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இது.
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் முன் அனுபவம் முக்கியமானது. அல்லது சம்பந்தப்பட்ட தொழில் குறித்த குறுகிய கால பயிற்சியாவது பெற்றிருப்பது நல்லது. செய்யும் தொழில் குறித்த அடிப்படை தகவல்களை தெளிவாக அறிந்திருப்பது அவசியம். ‘முதலீடு போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்களை ஊழியர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற மனநிலை தொழில் வெற்றிக்கு அடிப்படையாக அமையாது.
சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள், உற்பத்தித்துறை, விற்பனை பிரிவு, ஏஜென்சி, மொத்த விற்பனை, சேவைப்பிரிவு உள்ளிட்ட பல தொழில் பிரிவுகள் இருக்கின்றன.
அவற்றிற்கேற்ப தொழில் உரிமம், பணியிடத்திற்கான உள்ளாட்சி அனுமதி, கட்டிட வாடகை ஒப்பந்தம் அல்லது உரிமை பத்திரம், தனிநபர் அல்லது தொழில்கூட்டாளிகள் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகள் முறையாக பெற்ற பின்பே எந்த ஒரு தொழிலிலும் காலடி எடுத்து வைக்கவேண்டும்.
கல்வி என்பது அனைத்துக்கும் அடிப்படை ஆகும். எனவே பெண் தொழில் முனைவோர் குறைந்தபட்ச கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் பல சாதனையாளர்கள் ஆரம்ப பள்ளிப்படிப்பே பெறவில்லை என்பது உழைப்பின் அவசியத்தையும், அதன் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.
அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை தொழில் முயற்சியாக பெண்கள் மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்றதற்கான அரசு சான்றிதழ் உள்ள நிலையில் வங்கி கடன், அதற்கான மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் தொழில் தொடங்க சுலபமான கடன் வசதி திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. அதனால் தொழில் தொடங்க விரும்புபவர்கள் அவர்களது திட்ட அறிக்கை, எந்திரங்களுக்கான மதிப்பீடு, தொழில் உரிமம், தொழில் நடக்கும் முகவரி, அனுபவச் சான்றுகள் உள்ளிட்ட தகவல்களை வங்கியில் அளித்து கடன் பெற்று தொழிலைத் தொடங்கலாம்.
ஈரோடு:
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பா.ம.க சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தா.ப.பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை அவதூறுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நடிகர் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் செயல்படுவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் பெருமாள், துணைச்செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் மூர்த்தி, முருகேசன், பாலா, கோவிந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தேங்காய் - ஒன்று (பெரியது)
பச்சரிசி - அரை ஆழாக்கு
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - கால் கிலோ
காய்ந்த திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்
செய்முறை:
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும்.
மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.
நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும்.
கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கடைசியாக முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர், சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், தாளவாடி மற்றும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை கொட்டி கொண்டே இருந்தது.
இதன் காரணமாக தாளவாடி பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் பல்வேறு ஓடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த மழை வெள்ளம் பையனாபுரம், திகனாரை, தொட்டகாஜனூர், சிக்கள்ளி, தாளவாடி வழியாக கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கும் ஆசனூர், கெத்சேசால், கேர்மாளம் ஆகிய வனத்தில் பெய்த மழைநீர் சொர்ணாவதி அணைக்கும் செல்கிறது. அங்கு உள்ள இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
வீணாக செல்லும் மழைநீரை அணைக்கட்டி தடுக்க வேண்டும் என்பது தாளவாடி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இதேபோல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னிமலை அருகில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 நிரம்பி உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து நுரை பொங்க தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் எல்ஹில் கமரன் நகர் பகுதியில் வீடுகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மண் சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. காந்தல் புதுநகரில் தடுப்புசுவர் இடிந்து வீடு சேதமானது.
படகு இல்ல சாலையில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் சாலையோரம் இருந்த குடிநீர் ஏ.டி.எம் எந்திரம் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் ஊட்டி எல்ஹில், காந்தல் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 12-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
அந்த பகுதிகளில் வசித்த மக்கள் அருகே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வருவாய்த்துறையினர் செய்து கொடுத்தனர். மேலும் வீடுகள் இடியும் நிலையில் வசிப்பவர்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி- புதுமந்து சாலை, ஆடாசோலை, கீழ் கவ்வட்டி, எல்ஹில் வண்டிச்சோலை, அணிக்கொரை, எப்பநாடு, துனேரி, முத்தோரை பாலாடா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் விழுந்தன.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மண்சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தொடர் மழையால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஈரோடு-கரூர் ரோட்டில் எல்லக்குட்டை குமாரவலசு என்ற பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் மதியம் 12.45 மணி அளவில் முத்தக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே அந்த வழியாக வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் இருந்த 3 பெண்கள், 2 ஆண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் சிவகிரி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்களின் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக ஈரோடு-கரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. சத்தியமங்கலம், ஒட்டகுட்டை, புளியங்கோம்பை, சதுமுகை, ஒண்டியூர், தாளவாடி, ஆசனூர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 8 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை அடுத்த ஒண்டியூர் பகுதியில் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சண்முகம் என்பவரின் வீட்டின் மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சண்முகம், அவரது மனைவி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அங்கு சுவர் இடிந்து விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் வீடு இடிந்து விழுந்து விடுமோ என பயந்து வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.
தாளவாடி, கடம்பூர் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை கொட்டியது. இதனால் வனப்பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் புதிதாக அருவிகள் தோன்றியது.
இதனால் அந்த வழியாக கார், வேன், சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் தண்ணீர் மலை பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
கோபி, கொடிவேரி, பவானிசாகர், நம்பியூர், கொடுமுடி, சென்னிமலை, கவுந்தப்பாடி, பெருந்துறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக மழை பெய்தது.
நம்பியூர் பகுதியில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக கஸ்பா பெருமாள் வீதியில் வள்ளியம்மாள் (48) என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அனைவரும் வெளியே சென்று விட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஏரி , டி.என்.பாளையம் அருகே உள்ள சஞ்சீவராயன் குளம் ஆகியவை நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழையின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-4, கொடுமுடி-7.6, பெருந்துறை-2, பவானி-1.8, கோபி-27, சத்தியமங்கலம்-23, பவானிசாகர்-87, தாளவாடி-5, நம்பியூர்-28, சென்னிமலை-3, மொடக்குறிச்சி-1, கவுந்தப்பாடி-8.2, எலந்தக்குட்டை மேடு-29.2, கொடிவேரி-47.2.
நாட்டில் மேலும் 11,919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 15-ந் தேதி பாதிப்பு 8,865 ஆக இருந்த நிலையில், நேற்று முன்தினம் 10,197 ஆக உயர்ந்தது. இந்நிலையில் பரிசோதனை அதிகரித்ததன் காரணமாக நேற்று சற்று உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,849 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நாடு முழுவதுமான நேற்றைய பாதிப்பில் சுமார் 57 சதவீதம் ஆகும். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 78 ஆயிரத்து 517 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 470 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,64,623 ஆக உயர்ந்தது.

நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளி உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முதல் நாள் நூல் விலை உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த கடைக்கு போராட்டத்திற்கு 18 அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஜவுளி கடைகள், குடோன்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில்மேடு வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று 20 செ.மீ.,க்கும் மேல் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது, மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதேபோல் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
தடுப்பூசி போடும் பணி, கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதேபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினசரி பாதிப்பை விட குறைந்து வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 342 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 72 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 693 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 783 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் முதியவர்கள் தான் கொரோனா பாதிப்பால் அதிகம் உயிரிழந்துள்ளனர். எனவே முதியவர்கள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். தேவை இல்லாமல் அவர்களை வெளியே அழைத்து செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.






