என் மலர்tooltip icon

    ஈரோடு

    அந்தியூர் சந்தைக்கு சின்ன வெங்காயம் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் விலை விழ்ச்சியடைந்து விற்பனை செய்யப்பட்டது.
    அந்தியூர் 

    அந்தியூர் சந்தைக்கு சின்ன வெங்காயம்  அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் விலை விழ்ச்சியடைந்து விற்பனை செய்யப்பட்டது.

    அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுக்காடு, காந்தி நகர், புதுபாளையம், எண்ணமங்கலம், வட்டகாடு, பள்ளிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேவையான காய்கறிகள் பயிரிட்டு வாரந்தோறும்  ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் வாரச் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். 

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை 25 கிலோ கொண்ட சிப்பத்தின் விலை ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையாகி வந்தது.  இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.250 -ரூ.200 என்று கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகளிடத்தில் கேட்டபோது சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்து இருப்பதால் இந்த விலை குறைவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
    போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஈங்கூர் சிப்காட் வளாகத்துக்கு ரெயில் தண்டவாளம் அமைக்க வேண்டும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
    ஈரோடு

    போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஈங்கூர் சிப்காட் வளாகத்துக்கு ரெயில் தண்டவாளம் அமைக்க வேண்டும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    பெருந்துறை அடுத்துள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலமும், ஈரோடு ரெயில்நிலையம் மூலமும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. 

    ஈங்கூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிப்காட்டிற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் விரிவாக்கம் செய்தால் சரக்கு ரெயில்கள் எளிதில் சிப்காட் வளாகத்திற்குள்ளாகவே வந்து சரக்குகளை ஏற்றி இறக்கி செல்ல முடியும். இக்கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொழில் துறையினர் மத்திய அரசிடமும், ரெயில்வே நிர்வாகத்திடமும் வலியுறுத்தி வருகின்றனர். 

    ஆனால் மத்திய அரசும், ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளதால் சிப்காட் வளாகத்தில் இருந்து லாரிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு ரெயில்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகின்றது. 

    இதனால் போக்குவரத்து செலவு மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றது. தண்டவாளம் விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக தற்காலிகமாக ஈங்கூர் ரெயில் நிலையத்தில் அனைத்து விதமான சரக்கு பெட்டகங்கள் ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். 

    இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:--
     பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை ரெயில்களில் ஏற்றி இறக்குவதற்கு வசதியாக ஈங்கூர் ரெயில்நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் அமைத்தால் சிப்காட் வளாகத்திற்குள்ளேயே சரக்கு முனையம் ஏற்படுத்த முடியும். 
    இது தொடர்பாக பல ஆண்டுகளாக வலியுறுத்தி யும் ரெயில்வே நிர்வாகம் நிறைவேற்ற முன்வராமல் உள்ளது. 

    இதனால் சரக்குகள் மீதான போக்குவரத்து செலவுதான் அதிகரித்து வருகின்றது. குறைந்தபட்சம் ஈங்கூர் ரயில்நிலையத்தை விரிவாக்கம் செய்து அனைத்து சரக்கு ரெயில்களும் நின்று செல்லும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னிமலை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த பனியன் தொழிலாளி பலியான சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை

    சென்னிமலை அருகே  அளவுக்கு அதிகமாக மது குடித்த பனியன் தொழிலாளி பலியான சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை அருகே  உள்ள மின்னகாடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன், (39)இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

     தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார்.   வழக்கம்போல் சம்பவத்தன்று காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற முருகேசன் அன்று இரவு வீடு திரும்பவில்லை.

     இந்த நிலையில் சென்னிமலை அருகே ஓட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்டநெடுஞ்சுனைபாறை என்ற இடத்தில் முருகேசன் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது.  

    பின்னர் முருகேசனின் மனைவி தவமணி, (38)என்பவர் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் கீழே தவறி விழுந்ததில் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.
    தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தாளவாடி

    தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு போன்ற கால் நடைகளை வேட்டை ஆடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள சேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). விவசாயி. இவரது தோட் டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். நேற்று மாலை அவர் தோட்டத்துக்கு சென்றார்.
    அப்போது தோட்டத்தின் ஓரம் சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காளியப்பனை பார்த்ததும் சிறுத்தை கரும்பு தோட்டத் திற்குள் சென்று பதுங்கி கொண்டது.

    இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருக்கும் சிறுத்தை எந்நேரமும் தாக்கக் கூடும் என்பதால் அந்த பகுதிக்கு யாரும் செல்லவில்லை. 

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தை யை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னிமலை அருகே மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு

    சென்னிமலை அருகே மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முகாசி பிடாரியூர் 1010 நெசவாளர்  காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் (39). பெருந்துறையில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.

     இவர் வழக்கம் போல் அவரது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று, வண்டியை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி பூட்டி சென்றார். 

    அலுவலக வேலையாக செல்வதற்காக  வண்டியை எடுக்க வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிள்  காணவில்லை. இதையடுத்து அவரது அலுவலக நண்பர்கள் மூலம் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தனர். 

    அப்போது, பெருந்துறை அண்ணா சிலை அருகே வாலிபர் ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை தள்ளி செல்ல முற்பட்டதை பார்த்து, அந்த நபரை மடக்கி பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்  கோபி நத்தக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் (32) என்பது தெரியவந்தது. 

    இதையடுத்து லோகநாதனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என். பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போலி லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் டி.என்.பாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த தண்டபாணி (47) என்பவர், கே.என்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தது கொண்டு இருந்தார். அப்போது நால் ரோட்டை சேர்ந்த இசக்கிதுரை (42), கே.என்.பாளையத்தை சேர்ந்த ராமசாமி (59), ராஜேந்திரன் (50), சிங்கப்பூர் ராஜா மற்றும் அன்னூர் பழனிச்சாமி ஆகியோர் அங்கு வந்து அவரிடம் லாட்டரி டிக்கெட் வாங்குமாறு கட்டாயப்படுத்தினர். இதையடுத்து தண்டபாணி அவர்களிடம் லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். அப்போது அது போலி லாட்டரி டிக்கெட் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து தண்டபாணி பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இசக்கிராஜா, ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் போலி லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்களிடம் இருந்து 120 போலி லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். தலைமறைவான சிங்கப்பூர் ராஜா, பழனிச்சாமி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (51). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தங்கமணி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் தங்கமணி அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தங்கமணியின் தாய் இறந்துவிட்டார். இதிலிருந்து தங்கமணி தனது மனைவி, மகளிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் வசந்தி தனது மகளுடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தங்கமணி மட்டும் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் தங்கமணி வீட்டு கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வசந்திக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வசந்தி தனது உறவினர்களுடன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். பதில் ஏதும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டின் ஒரு அறையில் தங்கமணி தூக்குப்போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தங்கமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சில நேரங்களில் குடிநீர் கலங்கலாக வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென இன்று காலை சொக்கநாத மலையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் பட்லூர் ஊராட்சி சொக்கநாதமலையூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளித் திருப்பூர்-சென்னம்பட்டி செல்லும் வழியில் பைப்லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. மேலும் சில நேரங்களில் குடிநீர் கலங்கலாக வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென இன்று காலை சொக்கநாத மலையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார், பட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறி தண்ணீர் சீரான முறையில் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் ஒலகடம்- வெள்ளித்திருப்பூர் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி அருகே கோவிலுக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி செல்வமணி (வயது 62). நேற்று மாலை இவர் தனது வீட்டில் இருந்து 46 புதூர் அருகே உள்ள தீரன்நகர் சாய்பாபா கோவிலுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அந்த மூதாட்டிக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ரிங் ரோடு அருகே செல்வமணி நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் திடீரென செல்வமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மூதாட்டி திருடன்.. திருடன் என கத்தினார். அதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். செயின் பறிப்பு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலத்தில் சாக்கடை கால்வாயில் தீயணைப்பு அதிகாரி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (50). இவர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.

    வழக்கம்போல் இன்று அதிகாலையும் கோபி செட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்துக்கு புறப்பட்டார்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் தபால்நிலையம் அருகே ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாயில் தனது மோட்டார் சைக்கிளுடன் சக்திவேல் இறந்து கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

    சக்திவேல் எப்படி இறந்தார் என்று தெரிய வில்லை. அவர் இறந்து கிடந்த பகுதியில் ரத்தக்கறை இருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தபோது தவறி விழுந்து அவர் இறந்தாரா? அல்லது ஏதாவது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலியானாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    சக்திவேலுக்கு விஜய லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    காதலனிடம் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மோகனாராணி. இவர்களுக்கு பிரியா, தனலட்சுமி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் பிரியா காதல் திருமணம் செய்து எழுமாத்தூர் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் தனலட்சுமி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். தனலட்சுமி தனது அக்காவைப் பார்ப்பதற்காக அடிக்கடி எழுமாத்தூர் சென்று வந்தார்.

    அப்போது அக்கா கணவரின் உறவினர் ஒருவரிடம் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் தனலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து தனலட்சுமி பெற்றோர் உனக்கு சிறு வயதாக இருப்பதால் இப்போதைக்கு கல்லூரி படிப்பை முடித்து பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுரை கூறியுள்ளனர்.

    இதை தொடர்ந்து தனலட்சுமி காதலனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி சம்பவத்தன்று வாந்தி எடுத்துள்ளார்.

    இதுகுறித்த அவரது பெற்றோர் கேட்டபோது தான் வி‌ஷம் (எலி மருந்து) குடித்து விட்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த தனலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு அருகே 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
    சித்தோடு:

    சித்தோடு அருகே 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

    சித்தோடு அருகே உள்ள கன்னிமார் கரடு, நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் பலர் குடிசை வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில்  சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள குடிசை வீடு தீப்பிடித்து எரிவதாக பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து பவானி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணி தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உஷா மற்றும் அனிதா ஆகிய 2 பேருக்கும் சொந்தமான 2 குடிசை வீடுகளில் பற்றிய தீயை தண்ணீர் பீச்சியடித்து தீயை  அணைத்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பகுதி முழுவதும் காய்ந்த புல் தரைகள் இருந்த நிலையில் யாரோ பிடி குடித்துவிட்டு புல்தரையில் போட்ட தீ பரவி குடிசை வீட்டில் பற்றியதா? அல்லது வேறு எந்த காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் 2 குடிசை வீட்டிலும் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

    ×