என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் அணைத்த காட்சி
2 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்
சித்தோடு அருகே 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
சித்தோடு:
சித்தோடு அருகே 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
சித்தோடு அருகே உள்ள கன்னிமார் கரடு, நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் பலர் குடிசை வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள குடிசை வீடு தீப்பிடித்து எரிவதாக பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பவானி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணி தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உஷா மற்றும் அனிதா ஆகிய 2 பேருக்கும் சொந்தமான 2 குடிசை வீடுகளில் பற்றிய தீயை தண்ணீர் பீச்சியடித்து தீயை அணைத்தனர்.
இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பகுதி முழுவதும் காய்ந்த புல் தரைகள் இருந்த நிலையில் யாரோ பிடி குடித்துவிட்டு புல்தரையில் போட்ட தீ பரவி குடிசை வீட்டில் பற்றியதா? அல்லது வேறு எந்த காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் 2 குடிசை வீட்டிலும் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
Next Story






