என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
காதலனிடம் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
காதலனிடம் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மோகனாராணி. இவர்களுக்கு பிரியா, தனலட்சுமி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் பிரியா காதல் திருமணம் செய்து எழுமாத்தூர் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் தனலட்சுமி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். தனலட்சுமி தனது அக்காவைப் பார்ப்பதற்காக அடிக்கடி எழுமாத்தூர் சென்று வந்தார்.
அப்போது அக்கா கணவரின் உறவினர் ஒருவரிடம் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் தனலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனலட்சுமி பெற்றோர் உனக்கு சிறு வயதாக இருப்பதால் இப்போதைக்கு கல்லூரி படிப்பை முடித்து பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுரை கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து தனலட்சுமி காதலனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி சம்பவத்தன்று வாந்தி எடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது பெற்றோர் கேட்டபோது தான் விஷம் (எலி மருந்து) குடித்து விட்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த தனலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story