என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    சென்னிமலை அருகே மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு

    சென்னிமலை அருகே மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முகாசி பிடாரியூர் 1010 நெசவாளர்  காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் (39). பெருந்துறையில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.

     இவர் வழக்கம் போல் அவரது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று, வண்டியை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி பூட்டி சென்றார். 

    அலுவலக வேலையாக செல்வதற்காக  வண்டியை எடுக்க வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிள்  காணவில்லை. இதையடுத்து அவரது அலுவலக நண்பர்கள் மூலம் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தனர். 

    அப்போது, பெருந்துறை அண்ணா சிலை அருகே வாலிபர் ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை தள்ளி செல்ல முற்பட்டதை பார்த்து, அந்த நபரை மடக்கி பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்  கோபி நத்தக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் (32) என்பது தெரியவந்தது. 

    இதையடுத்து லோகநாதனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×